2/24/2012
இணையத்தில் ஏராளமான தகவல்கள் PDF வடிவில் கிடைக்கின்றன. ஏனென்றால் PDF பைல்களை நேரடியாக யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் தகவல்களை PDF வடிவில் தருகின்றனர். PDF பைல்களை நமக்கு வேண்டிய பார்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன. இருந்தாலும் கட்டண மென்பொருளில் உள்ள வசதிகளையும், தரத்தையும் நாம் இலவச மென்பொருளில் பெறமுடியாது. PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். சாதரணமாக இந்த மென்பொருளின் விலை $49.95 ஆகும். ஆனால் தற்பொழுது இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் வழங்குகிறார்கள். முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் நாம் மென்பொருளை டவுன்லோட்செய்து கொள்ளலாம்.
2/24/2012 by Sasikumar · 9
2/23/2012
ஜிமெயிலில் ஈமெயில்களை Schedule செய்து அனுப்பவது எப்படி என பார்க்க போகிறோம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டி இருக்கும். உதாரணமாக இரவு 12 மணிக்கு என வைத்து கொள்வோம். இதனால் நீங்கள் இரவு 12 மணிவரை கண்விழித்து ஈமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஈமெயிலுக்கு இரவு 12 மணிக்கு Schedule செய்து விட்டால் போதும் உங்களுடைய ஈமெயில் சரியாக நீங்கள் தேர்வு செய்த நேரத்திற்கு மற்றவர்களுக்கு சென்று விடும். ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது பெரிதும் பயன்படும். ஞாபகம் வரும் பொழுது ஈமெயிலை டைப் செய்து Schedule செய்து விடலாம். குறிப்பாக வாழ்த்து செய்திகள் அனுப்ப பெரிதும் பயன்படும்.
2/23/2012 by Sasikumar · 7
2/22/2012
பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற நிறுவனங்களோடு உள்ள போட்டியை சமாளிக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஏதாவது வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஆன்லைன் வசதிகளை அளித்தது இப்பொழுது வாசகர்களுக்கு இலவசமாக Missed Call Alert(MCA) வசதியை வழங்குகிறது.2/22/2012 by Sasikumar · 11
2/21/2012
விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.
2/21/2012 by Sasikumar · 14
2/20/2012
இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள் திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர்.
2/20/2012 by Sasikumar · 15
2/18/2012
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
2/18/2012 by Sasikumar · 9
2/17/2012
உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.
2/17/2012 by Sasikumar · 17
2/16/2012
சமூக தளங்களுக்குள் உள்ள போட்டியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கூகுள் பிளசில் உள்ளது போலவே பேஸ்புக் தளத்திளும் புதிய Photo viewer அறிமுக படுத்தி உள்ளனர். இப்பொழுது பேஸ்புக்கில் ஏதாவது போட்டோவை ஓபன் செய்தால் சைட்பாருடன் கூடிய Pop-up விண்டோவில் புதிய Photo Viewer ஓபன் ஆகும். Lightbox வசதியில் போட்டோ ஓபன் ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு புதிய வசதி பிடிக்காததாலும் இந்த புதிய Photo Viewer-ஐ செயலிழக்க செய்ய சுலபமான மூன்று வழிகளை காணலாம். இதற்க்கு எந்த தளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, எந்த நீட்சியும் இணைக்க வேண்டியதில்லை உங்கள் கீபோர்ட் மூலமாகவே செய்து விடாலம்.

2/16/2012 by Sasikumar · 9
2/15/2012
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் கூட செல்போன்கள் பயன்படுத்தும் அளவுக்கும் செல்போன்கள் வளர்ச்சி பெற்று விட்டது. செல்போன் சேவையில் அதிக வாடிக்கையாளர்களைகொண்டு இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 5 இடத்திலும் இருக்கும் நிறுவனம் Airtel நிறுவனமாகும். இந்த Airtel நிறுவனம் இப்பொழுது ஒரு புதிய சலுகையை அறிவித்து உள்ளனர். அதன் படி இனி Pre-Paid வாடிக்கையாளர்களும் ஆன்லைனில் அக்கௌன்ட் ஓபன் செய்து கொண்டு ஆன்லைன் வசதிகளை உபயோகிக்கலாம்.
முன்பு Postpaid வாடிக்கையாளர்கள் மட்டும் தான் இந்த வசதிகளை பயன்படுத்த முடியும் இனி Prepaid வாடிக்கையாளர்களுக்கும்.
2/15/2012 by Sasikumar · 15
2/14/2012
கணினியில் தீங்கிழைக்கும் வைரஸ்கள், மால்வேர்கள் மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற கிளீனிங் மேன்போருட்கலோத் ஒப்பிடுகையில் 300% மேல் சிறப்பாக இயங்குகிறது. தேவையில்லாத Registry பைல்களை அழித்து சுத்தமாக்கி உங்கள் கணினியின் பழைய வேகத்தை கொண்டு வருகிறது. அதே சமயம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிமானவர்கள் இந்த மென்பொருளை உபயோகித்து கொண்டு உள்ளனர்.

2/14/2012 by Sasikumar · 11
Subscribe to:
Posts (Atom)












