8/14/2010

யோகா செய்வது எப்படி?

வரலாறு

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: 

 • உட்காசனம்
 • பத்மாசனம்
 • வீராசனம்
 • யோகமுத்ரா
 • உத்தீதபத்மாசனம்
 • சானுசீரானம்
 • பஸ்திமோத்தாசனம்
 • உத்தானபாத ஆசனம்
 • நவாசனம்
 • விபரீதகரணி
 • சர்வாங்காசனம்
 • ஹலாசனம்
 • மச்சாசனம்
 • சப்தவசீராசனம்
 • புசங்காசனம்
 • சலபாசனம்
 • தணுராசனம்
 • வச்சிராசனம்
 • மயூராசனம்
 • உசர்ட்டாசனம்
 • மகாமுத்ரா
 • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
 • சிரசாசனம்
 • சவாசனம்
 • மயுராசனம்
 • உசர்ட்டாசனம்
 • அர்த்த மத்ச்யோந்திராசனம்
 • அர்த்த சிரசானம்
 • சிரசாசனம்
 • நின்ற பாத ஆசனம்
 • பிறையாசனம்
 • பாதாசுத்தானம்
 • திருகோணசனம்
 • கோணாசனம்
 • உட்டியானா
 • நெளலி
 • சக்கராசனம்
 • சவாசனம்/சாந்தியாசனம்
 • பவனமுத்தாசனம்
 • கந்தபீடாசனம்
 • கோரசா ஆசனம்
 • மிருகாசனம்
 • நடராசா ஆசனம்
 • ஊர்த்துவ பதமாசனம்
 • பிரானாசனம்
 • சம்பூரண சபீடாசனம்
 • சதுரகோனோசனம்
 • ஆகர்சன தனூராசனம்
 • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
 • உருக்காசனம்
 • ஏக அத்த புசங்காசனம்
 • யோகா நித்திரை
 • சாக்கோராசனம்
 • கலா பைரப ஆசனம்
 • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
 • கவையாசனம்
 • பூர்ண நவாசனம்
 • முக்த அகத்த சிரசாசனம்
 • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
 •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
 • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
 • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
 • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
 • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.

பத்மாசனம் 

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். 

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.


சிரசாசனம்  

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் : 

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும். 

விபரீதகரணி 

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.   

புஜங்காசனம் 


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.     

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். 

நன்றி : விக்கிபீடியா, கூகுள், வேர்க்கடலை விற்றவன்    
டுடே லொள்ளு  
Photobucket
 ஓடு ஓடு இந்த நாசமா போன உலகத்துல நாம இருக்கா வேணாம் நம்ம கிரகதுக்கே போயிடலாம்.


நண்பர்களே பதிவு பிடித்து இருந்தால் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.34 Responses to “யோகா செய்வது எப்படி?”

கக்கு - மாணிக்கம் சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 1:59 pm

:))


கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:17 pm

யோகா இப்படியெல்லாம் படம் பாத்து செய்யக் கூடாது ... முறைப்படி ஒரு தேர்ந்த குருவிடம் கற்றுக் கொள்ளவேண்டும் ...


உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:19 pm

;;) அருமை......


ஜெய்லானி சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:29 pm

//ஓடு ஓடு இந்த நாசமா போன உலகத்துல நாம இருக்கா வேணாம் நம்ம கிரகதுக்கே போயிடலாம்//

ஹி..ஹி..


tamildigitalcinema சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:39 pm

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...


tamildigitalcinema சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:39 pm

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...


பட்டாபட்டி.. சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:41 pm

நல்லாத்தான் இருக்கு சசி...


sandhya சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 2:47 pm

நல்லா இருக்கு சசி ..பகிர்வுக்கு நன்றி


ராமலக்ஷ்மி சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 3:08 pm

நல்ல பகிர்வு.


siva சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 3:18 pm

so nice anna..use full..


எஸ்.கே சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 4:39 pm

நன்றாக உள்ளது சார்!


rk guru சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 4:41 pm

சூப்பர் சசி ரொம்ப நல்லா இருக்கு....நானும் யோகா பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று நினைத்தேன் அதை நீங்க பிரமாதமாக போட்டுவிட்டிர்கள் என்றும் எங்கள் வாழ்த்துகள் உங்களுக்கு உண்டு.


மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 5:37 pm

நல்லா இருக்கு சசி நல்ல பகிர்வு.
நன்றி!


தமிழ் உதயம் சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 5:54 pm

பகிர்வுக்கு நன்றி


வெறும்பய சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 8:26 pm

நானும் தான் செஞ்சுபாக்கிறேன்... உடம்பு ஒரு இஞ்சு கூட வளையமாட்டேங்குது...


நல்ல பகிர்வு. ...பகிர்வுக்கு நன்றி


Mrs.Menagasathia சொன்னது…
14 ஆகஸ்ட், 2010 11:48 pm

thxs for sharing!!


அன்பரசன் சொன்னது…
15 ஆகஸ்ட், 2010 9:50 pm

//ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.//

மிக சரியான வரிகள்


Jeyamaran சொன்னது…
16 ஆகஸ்ட், 2010 9:10 pm

:))


எஸ்.எஸ்.பூங்கதிர் சொன்னது…
17 ஆகஸ்ட், 2010 6:11 pm

thanks, sir!


பெயரில்லா சொன்னது…
23 ஆகஸ்ட், 2010 5:54 pm

hello
Athu vajrasanam illa. Salabhasanam

vasumathi
singapore


raja சொன்னது…
18 டிசம்பர், 2010 8:46 am

அருமையான பதிவு இது போன்ற உடல் சம்பந்தமான பதிவுகள் தொடர்ந்து கொடுங்கள்


ATHIAPPAN சொன்னது…
22 டிசம்பர், 2010 3:12 pm

Hi This is Nagarajan,
The script given about yoga is very good. But there is one suggestion. The picture given in Vajrasan is wrong.Please correct the same and re-publish. I think you are not mistaken. Thanking you. your well wisher.
bye


ATHIAPPAN சொன்னது…
22 டிசம்பர், 2010 3:12 pm

Hi This is Nagarajan,
The script given about yoga is very good. But there is one suggestion. The picture given in Vajrasan is wrong.Please correct the same and re-publish. I think you are not mistaken. Thanking you. your well wisher.
bye


செந்தழல் ரவி சொன்னது…
28 டிசம்பர், 2010 6:16 am

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php


Sairam சொன்னது…
10 ஜனவரி, 2011 8:15 pm

எல்லாம் நன்றாக இருந்ததுசாய்ராம் நன்றி


Sairam சொன்னது…
10 ஜனவரி, 2011 8:17 pm

எல்லாம் நன்றாக இருந்தது
நல்ல அருமையான, அனைவருக்கும் உபயோகமான படைப்பு


SalesTeam சொன்னது…
29 ஜனவரி, 2011 8:59 am

Very Good ....
thx
cheran s


சு ரமேஷ் சொன்னது…
19 பிப்ரவரி, 2011 4:02 pm

அண்ணா நல்ல பயனுள்ள தகவல். நன்றி


asiya omar சொன்னது…
21 பிப்ரவரி, 2011 12:08 pm

நான் முன்பே கற்று கொண்டேன்,இனி நினைவு படுத்தியாச்சு ஆரம்பிக்க வேண்டியது தான்.


2009kr சொன்னது…
27 பிப்ரவரி, 2011 9:23 am

நண்பா, நல்ல பதிவு,,, அதே போல் தியானம் செய்வதை பற்றியும் சொலுங்களேன்.. குறிப்பாக blood pressure குறைவதற்கு தியானம் மிக உதவும் என்று சொல்கிறார்களே? குறிப்பாக art of living என்ற அமைப்பு இது போன்ற தியான முறைகளை கற்று தருவதாகவும் அறிகிறேன்


2009kr சொன்னது…
27 பிப்ரவரி, 2011 9:23 am

நண்பா, நல்ல பதிவு,,, அதே போல் தியானம் செய்வதை பற்றியும் சொலுங்களேன்.. குறிப்பாக blood pressure குறைவதற்கு தியானம் மிக உதவும் என்று சொல்கிறார்களே? குறிப்பாக art of living என்ற அமைப்பு இது போன்ற தியான முறைகளை கற்று தருவதாகவும் அறிகிறேன்


thambiluvil தம்பிலுவில் சொன்னது…
3 ஜூன், 2011 3:01 am

உங்களுடைய டுடே லொள்ளு ரொம்ப பிடிக்கும் ...


RIPHNAS MOHAMED SALIHU சொன்னது…
21 ஜூலை, 2011 9:24 pm

This is really useful. Infact, I was searching for Yoga. Thank u for such an useful blog


VANJOOR சொன்னது…
26 ஜூலை, 2011 12:22 pm

உங்களுக்கே . உங்களுக்கே. உங்களுக்கே.

தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம்

"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."


இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.


தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.வாஞ்சையுடன் வாஞ்சூர்.