12/29/2010
பதிவர்கள் செய்யும் அடிப்படை தவறுகள் - புதியவர்களுக்காக
Writting Same Subject
பதிவர்கள் சிலர் ஒரே வகைகளில் பதிவுகள் எழுது கின்றனர். உதாரணமாக கதை, கவிதை இது போல முடிந்தவரை ஒரே வகையான தலைப்புகளில் பதிவுகள் எழுதும் போது நம் வாசகர்களில் 50% பேர் அதனை படிக்க விரும்புவதில்லை. அதாவது நீங்கள் ஒரு கதை பதிவு போட்டால் கதையை சுருக்கி அன்றே அந்த கதையின் முடிவை தெரிவிக்கும் படி செய்யுங்கள். அதிக பட்சம் 2 வது பதிவில் முடித்து விடுங்கள். தினம் தினம் புது புது வாசகர்கள் நம் தளத்திற்கு வருவதால் இடையில் பார்த்தால் ஒன்றும் புரியாது அவர்கள் பழைய பதிவுகளை பார்க்கும் அளவிற்கு பொறுமை கொள்ள மாட்டார்கள்.
Not Using Pictures:
நீங்கள் பதிவு எழுதும் போது இடையிடையில் பதிவிற்கு சம்பந்தமான படங்களையோ அல்லது ஸ்க்ரீன் ஷாட் போடுவது மிகவும் நல்லது. அப்படி போடுவதால் நம் பதிவுகள் பார்த்தவுடன் வாசகர்களுக்கு புரியும் படிப்பதற்கும் சுலபமாக இருக்கும். இது மட்டுமில்லாமல் படங்களை சேர்ப்பதனால் நம் முழு பதிவே அழகாக காணப்படும். இதனால் புதியாதாக வருபவர்களுக்கு நம் தளத்தின் மீது நல்ல எண்ணம் வந்து திரும்பவும் அவர்களை வர வைக்கும். படங்களை சேர்ப்பதும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு அதிகபட்சம் 4 படங்களை சேர்த்தல் போதுமானது.

Sub Headings
நாம் பதிவுகள் எழுதும் பொழுது பதிவுகளின் இடையே துணை தலைப்புகள் கொடுத்து எழுதினால் மிகவும் நன்று. இதனால் நம் பதிவுகள் மொத்தமாக இல்லாமல் தனி தனியாக பிரித்து காணப்படும். பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அழகாவும் சுலபமாகவும் இருக்கும்.

Making Paragraphs to Large
பதிவுகள் எழுதும் நாம் சொல்ல வரும் விசயத்தை மக்களுக்கு எளிதாக விளங்க வைக்க வேண்டுமெனில் ஒரே பதியாக இல்லாமல் சிறு சிறு பத்தியாக பிரித்து எழுதுவது சால சிறந்தது.
பதிவுகள் எழுதும் நாம் சொல்ல வரும் விசயத்தை மக்களுக்கு எளிதாக விளங்க வைக்க வேண்டுமெனில் ஒரே பதியாக இல்லாமல் சிறு சிறு பத்தியாக பிரித்து எழுதுவது சால சிறந்தது.
Adding More Widgets
உங்களுடைய பிளாக் அழகாக வைத்திருப்பது உங்கள் கடமை உண்மை தான் அதற்காக நீங்கள் இருக்கும் அனைத்து விட்ஜெட்டுக்களையும் பேனர்களையும் அனிமேஷன் படங்களையும் உங்கள் பிளாக்கில் போட்டு கொள்வதால் மட்டும் உங்கள் பிளாக் அழகாகாது. மாறாக உங்கள் பிளாக் திறக்கும் நேரம் தான் அதிகமாகும் இதனால் உங்களின் விலைமதிப்பில்லாத வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடும். ஆதலால் தேவையில்லாத விட்ஜெட்டுக்களை உங்கள் பிளாக்கில் இருந்து நீக்கி விடுங்கள்.
You Should Add This Widget
நீங்கள் உங்கள் பிளாக்கில் கண்டிப்பாக இந்த விட்ஜெட்டுக்களை சேர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் உங்களின் பதிவுகள் பிரபலமடையும்.
- Followers
- Feedburner
- Related Post Widjet
- Blog Archive
- Popular Post widget
- Search Bar
பதிவர்களே உங்களின் வாசகர்களை இழக்காதீர்கள் அதற்கு உங்கள் பதிவுகளை தினமும் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் வாரம் மூன்று பதிவுகளையாவது வெளியிடுங்கள். நீங்கள் பதிவிடும் நாட்களில் தவறாமல் பதிவை போட்டு விடுங்கள். இது உங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும்.
Choose Right Template
நீங்கள் உங்கள் பிளாக்கின் டெம்ப்ளேட் தேர்வு செய்யும் போது பின்புறம் வெள்ளை நிறத்தில் உள்ள டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டும். கருப்பு நிற டெம்ப்ளேட் மற்றும் பின்புறத்தில் படங்கள் இருக்கும் டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டாம் .
டுடே லொள்ளு
இந்த வால் ஆட்டுற பழக்கதுனால நிம்மதியா தூங்க கூட முடியல வேற வழி இருந்த சொல்லுங்கப்பா
| நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)

useful one thanks
ReplyDeleteuseful tips
ReplyDeleteநன்றி சசி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சசி, புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
ReplyDeleteநன்றி
நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே.. பலருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் உதவியாய் இருக்கும் நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா.....
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
நேற்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் கிடைத்ததா நண்பரே?
ReplyDeleteபதிவின் ஒவ்வொரு சொல்லும்,
ReplyDeleteபதிவின் கீழே உள்ள லொள்ளும்
சூப்பரோ சூப்பர்.
thanks, sasi. you helped me a lot. everyone should bookmark your site.
ReplyDeleteஉபயோகமான தகவல்கள் .
ReplyDeleteஅனைவர்க்கும் உதவியாக இருக்கும்!!!
ReplyDeleteமிக பயனுள்ள பதிவு .. நன்றி நண்பரே
ReplyDeleteமிகச் சரியாக சொன்னீர்கள் ச்சிகுமார்..! ஒவ்வொரு புதியவர்களுக்கும்.. ஏன்.. பிரபல பதிவர்களுக்கும் கூட உபயோகமாகன தகவல்கள் தான்.. இது..! புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
ReplyDeleteதாங்கள் கூறியிருக்கும் ஒவ்வொன்றையும் தங்கள் தளத்திலேயே காணலாம்..! எடுத்துக்காட்டாக உங்கள் வலைப்பூவையே எடுத்துக்கொள்ளலாம்.. மிகச் சிறப்பாக இருக்கிறது..!
ReplyDeleteபுது பதிவரான எனக்கு இது உண்மையிலேய பயனுள்ளது
ReplyDeletegood details.thank you.i read daily your blogs.all are very usefulthank you
ReplyDeletegood one!
ReplyDeleteஅணைத்து பதிவர்களுக்கும் அருமையான யோசனைகளை.
ReplyDeleteசசி, அந்த டு டே லொள்ளு நாய் குட்டியை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா?
பயனுள்ள குறிப்புகள்..
ReplyDeleteநாய்க்குட்டி செம க்யூட் :-)))
வலைப்பூ தாரர்கள் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய அவசியமான குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல அறிவுரை
ReplyDeletehttp://thagavalthulikal.blogspot.com/
நல்ல தகவல்கள் பாராட்டுகள் சசிகுமார்
ReplyDeleteஅனைவருக்கும் தேவையான பயனுள்ள் பதிவு
ReplyDeleteஉண்மையில் மிகவும் உபயோகமான அறிவுரை..நன்றி.
ReplyDeleteUseful tips sasi..Happy New Year to you!
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்..
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. copy right பிரச்சனையில்லாத related picture -ஐ copy செய்ய நல்ல தளங்களை பரிந்துரை செய்யுங்களேன்...
ReplyDelete// நீங்கள் உங்கள் பிளாக்கின் டெம்ப்ளேட் தேர்வு செய்யும் போது பின்புறம் வெள்ளை நிறத்தில் உள்ள டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டும். கருப்பு நிற டெம்ப்ளேட் மற்றும் பின்புறத்தில் படங்கள் இருக்கும் டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டாம் //
ReplyDeleteஅநேகமாக இது ஒன்றுதான் நான் செய்திருக்கும் தவறு என்று எண்ணுகிறேன்...
HAPPY NEW YEAR
ReplyDeleteஹேப்பி நியூ இயர்.
ReplyDelete// நீங்கள் உங்கள் பிளாக்கின் டெம்ப்ளேட் தேர்வு செய்யும் போது பின்புறம் வெள்ளை நிறத்தில் உள்ள டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டும். கருப்பு நிற டெம்ப்ளேட் மற்றும் பின்புறத்தில் படங்கள் இருக்கும் டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டாம் //
ReplyDeleteஇதில் நான் முரன்படுகிறேன்.
இதற்கான காரணத்தையும் பதிவையும் இங்கே காணலாம்.
http://chandroosblog.blogspot.com/2010/05/blog-post.html
பயனுள்ள விசயங்கள்.....
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே..
ReplyDelete