2/27/2010

பயர்பாக்ஸ் Tabகளை வெவ்வேறு நிறங்களில் கொண்டுவர

நாம் உபயோகிக்கும் இணைய உலாவிகளில் மொசில்லா பயர் பாக்ஸ் ஒரு தனி பெரும்பான்மை பெற்றுள்ளது அனைவரும் அறிந்தது. இதில் Tab வசதி இதில் உள்ள வசதிகளில் ஒன்று. இதுவும் அனைவரும் அறிந்ததே.(சரி சரி ரொம்ப மொக்க போடறேனா)
      சாதரணமாக நாம் பயர்பாக்சில் tab சேர்க்கும் போது அவை அனைத்தும் ஒரே நிறத்தில் காட்சியளிக்கும். அதையே கொஞ்சம் கலர்புல்லாக மாற்றினால் சூப்பரா இருக்குமில்ல. அதைதான் இங்கு பார்க்க போகிறோம். இதை பயர்பாக்சின் ஒரு சிறிய நீட்சியை நிறுவுவதன் மூலம் கொண்டுவரலாம்.  

மேலே உள்ள படத்தில் உள்ளதை போல உங்கள் கணினியில் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும் 
 
அடுத்து கீழே உள்ள படங்களை பின் தொடர்ந்து செல்லுங்கள். சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில்  கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்
சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில்  கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்.
  
அவ்வளவு தான் Restart ஆகி வந்தவுடன் உங்களுடைய பயர்பாக்ஸ் டேப் வண்ணமயமாக மாறுவதை காண்பீர்கள்.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேட்கவும். 
  இப்படிக்கு உங்கள் 

2/27/2010 by சசிகுமார் · 7

2/25/2010

படத்துடன் கூடிய Recent Post Widget பிளாக்கரில் வரவைக்க

நம்முடைய பிளாக்கரில் படத்துடன் கூடிய Recent Post Widget எப்படி வர வைப்பது என்று இன்று நாம் பார்க்க போகிறோம். 

இது மிகவும் சுலபமான விஷயம். மொத்தமாக 2 நிமிடம் தான் ஆகும். ஆனால் இதனுடைய வேலை சூப்பர இருக்கு.
     இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீழே உள்ள html Code காப்பி செய்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள Html Code காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட் நுழைந்து கொள்ளுங்கள். உங்கள் தளத்தில் பின்வரும் இடத்திற்கு செல்லவும்.
Dassboard - Layout - Add Html/Java Script -சென்று நீங்கள் காப்பி செய்த கோடினை பேஸ்ட் செய்யவும். முக்கியமானது அந்த html கோடினில் http://vandhemadharam.blogspot.com என்ற இடத்தில் மறக்காமல் உங்களுடைய URL சேர்க்கவும். (இதை நீங்கள் மாற்ற வில்லை எனில் என்னுடைய பதிவுகள் தான் அங்கு தெரியும் அதற்க்கு நான் பொறுப்பல்ல.) இதை கீழே கொடுத்துள்ளேன் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 
அவ்வளவு தான் அடுத்து கீழே உள்ள Save கிளிக் செய்யவும். உங்களுடைய தளத்தில் படத்துடன் கூடிய Recent Post Widget வந்திருக்கும். இதில் உங்கள் தளத்திற்கு ஏற்றது போல் ஏதேனும் மாற்றங்கள் செய்ய நினைத்தால் கீழே பார்க்கவும்.
1.boxwidth- இது widget அளவுகளை மாற்ற உங்களுக்கு தேவையான அளவு கொடுக்கவும்.
2.Border Color - இது விட்ஜெட்டின் Background color மாற்ற உங்களுக்கு தேவையான கலரின் hexadecimal அளவுகளை கொடுத்து மாற்றி கொள்ளவும்.
3.thumbwidth & thumbheight - இது படத்தின் நீள, அகலத்தை மாற்ற உதவுகிறது.(நான் கொடுத்திருக்கும் அளவே சரியாக இருக்கும் தேவைபட்டால் மாற்றிகொள்ளுங்கள்)
4.fntsize -     இது தலைப்பின் எழுத்து அளவை மாற்ற.
5. acolor -     இது தலைப்பின் நிறத்தை மாற்ற.
6. numpost - இது எத்தனை போஸ்ட் விட்ஜெட்டில் தெரியவேண்டும் என்று நீங்கள் மாற்றி கொள்ளலாம்.
அவ்வளவு தான் நண்பர்களே Save கொடுத்தால் உங்களுடைய தளத்தில் உங்கள் மாற்றத்துடன் கூடிய Recent Post Widget வந்திருக்கும்.

பதிவு பிடித்திருந்ததா என்று உங்கள் பின்னூட்டங்களில் கூறவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேட்கவும். 
இப்படிக்கு உங்கள் 

2/25/2010 by சசிகுமார் · 4

2/24/2010

பிளாக்கரில் உங்கள் பதிவின் கீழ் உங்கள் Signature வரவைக்க

நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவில் கீழே நம்முடைய கையெழுத்து இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் . ஆன்லைன் signature உருவாக்க நிறைய தளங்கள் உள்ளது. இதில் ஒன்றை தான் நாம் இங்கு காண போகிறோம். இத் தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும்.
1. உங்களுடைய பெயரை கொடுத்து விட்டு கீழே உள்ள NextStep பட்டனை கிளிக் செய்யவும்.
2. அடுத்து வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான Font Style தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து தேவையான Size செலக்ட் செய்யவும். (3,4,5) ஆகியவை சரியாக இருக்கும்.
4. அடுத்து வரும் விண்டோவில் தேவையான Color செலக்ட் செய்யவும்.  
5. அடுத்து உங்கள் கையெழுத்து வரவேண்டிய சாய்வு (slope) செலக்ட் செய்யவும் பின்பு கீழே உள்ள NextStep பட்டனை அழுத்தவும் .
அவ்வளவு தான் உங்களுடைய கையெழுத்து தயாராகி விட்டது. உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும்.  

இதில் நான் மேலே காட்டியுள்ள Want to Use This Signature என்பதனை க்ளிக் செய்யவும்.  

வரும் விண்டோவில் மேலே காட்டியுள்ள  Generate Html Code என்பதனை கிளிக் செய்யவும்  
அடுத்து வரும் விண்டோவில் Generate a Code for handwritten signature க்ளிக் செய்யவும். 


அடுத்து உங்களுடைய கையெழுத்து உடைய html code வந்திருக்கும் அந்த கோடினை காப்பி செய்து கொள்ளவும். காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளவும். பின்பு
DASSBOARD - SETTINGS - FORMATTING - செல்லவும். சென்று அந்த மெனுவில் கீழே உள்ள POST TEMPLATE என்ற கட்டத்தில் நீங்கள் காப்பி செய்த HTML CODE பேஸ்ட் செய்யவும். புரியாதவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்கவும். 
   
அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் பதிவு எழுத new post அழுத்தியதும் உங்கள் Sinature இருக்கும். 
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாரளமாக கேட்கலாம்.   

2/24/2010 by சசிகுமார் · 25

2/23/2010

நம்முடைய பதிவின் கீழ் "Post Views Counter" கொண்டு வர?

     நாமும் தினமும் பதிவை எழுதி கொண்டு தான் இருக்கிறோம்.நம்மளை யாராவது பாக்கிறாங்களா இல்லையா என்று எதுவுமே தெரியாம இதுவரை நானும் பதிவை எழுதிவிட்டேன். ஆனால் இனிமேல்  நாம் எழுதிய பதிவை இவ்வளவு பேர் பார்த்தார்கள் என்று நாமும் கொஞ்சம் ஆறுதல் பட்டு கொள்ளலாம். என்னை போல இதுவரை எழுதியவர்களுக்கு இதோ இந்த பதிவு.
இதை இரண்டு வழிகளில் கொண்டு வரலாம்.
1. முதல் வழி -நம்முடைய சைடு பாரில்
2. இரண்டாவது வழி- நம்முடைய பதிவிற்கு கீழே 
லைப்பின் கீழே கொண்டுவருவது என்று நாம் இங்கு பார்க்க போகிறோம்.   இதை கொண்டுவர கீழே உள்ள html code காப்பி செய்து கொள்ளவும்.
காப்பி செய்து கொண்டு, உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

முதல் வகை (சைடுபாரில் வரவைக்க)  
1. DASSBOARD- LAYOUT-EDITHTML -ADD HTML JAVASCRIPT - சென்று கீழே உள்ள கோடினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் .
பின்பு Save Template கொடுத்தவுடன் உங்கள் சைடுபாரில் வந்திருப்பதை காண்பீர்கள்.
இரண்டாவது வகை (பதிவின் கீழே வரவைக்க)
நம்முடைய பதிவின்  கீழே வரவைக்க உங்களுடைய பிளாக்கரில்  
1. DASSBOARD- LAYOUT- EDIT HTML- 
2. EXPAND WIDGET TEMPLATE
3. கீழே உள்ள கோடினை கண்டு பிடிக்கவும்
கண்டு பிடித்த பின் கீழே கொடுத்துள்ள HTML CODE காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு பின் அடுத்த வரியில் HTML CODE பேஸ்ட் செய்யவும்.
   
பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ உள்ளதை வரும்
பின்பு இதில் நீங்கள் Save Template கொடுத்துவிடவும் . அவ்வளவு தான் இனிமே நம்மள யாரும் யாமாத்த முடியாது. 
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.    

2/23/2010 by சசிகுமார் · 10

நம் பிளாக்கரில் High Light Author Comment வசதி கொண்டு வர

நம்முடைய பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் பொழுது நம்முடைய வாசகர்கள் பதிவை பார்த்துவிட்டு அவர்களுடைய கருத்துக்களை தெரிவிப்பார்கள் அந்த கருத்துக்கு நாமும் நன்றி தெரிவித்து கருத்து வெளியிடுவோம். அப்படி வெளியிடும் நாம் தெரிவிக்கும் கருத்து மட்டும் background color மாறி இருந்தால் பார்ப்பவர்களுக்கும் நமக்கும் நம்முடைய கருத்து தெளிவாக தெரியும். கீழே உள்ள படத்தை பாருங்கள்

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 1

2/22/2010

நம்முடைய பிளாக்கரில் 'PRINT BUTTON' கொண்டுவர?

     இங்கு நிறைய பிரிண்ட் மாதிரிகளின் படத்துடன் கூடிய html code கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து கொள்ளவும்.
உங்கள்  பிளாக்கரில் DASSBOARD-LAYOUT-EDIT HTML-EXPAND WIDGET TEMPLATE சென்று கீழ்வரும் கோடினை கண்டு பிடிக்கவும்.
பின்பு நீங்கள் செலக்ட் செய்த பிரிண்ட் கோடினை  மேலே உள்ள கோடிற்கு அடுத்து கீழே பேஸ்ட் செய்யவும். நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் கீழே இருப்பதை போன்று வரும் 


பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள Save Template என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் திரும்பவும் உங்கள் பிளாக்கருக்கு வந்து பார்த்தால் உங்கள் போஸ்டின் கீழே நீங்கள் செலக்ட் செய்த பிரிண்ட் பட்டன் வந்திருக்கும். 
இந்த பதிவு பிடித்திருந்ததா என்று உங்கள் கருத்துக்களில் கூறவும். 

2/22/2010 by சசிகுமார் · 11

2/20/2010

Contact Meதங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே உள்ள படிவத்தில் உங்கள் சந்தேகத்தை தெரிவித்து Send message என்ற பட்டனை அழுத்திவிட்டால் போதும் என் மெயிலுக்கு தாங்கள் அனுப்பிய சந்தேகம் வந்துவிடும். என்னால் முடிந்தவரை தங்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்.


foxyform.com


2/20/2010 by சசிகுமார் · 3

2/19/2010

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். 


1. உண்மையான ICICI BANK தள முகவரி https://www  என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது.


2. அதற்கு மாறாக http://www  என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம்.


3. padlock icon  அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த icon ஒரு பூட்டு வடிவத்தில் காணப்படும். 


கீழே உள்ள படங்களை பார்த்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.இதையெல்லாம் உறுதி படுத்தி கொண்டு உங்கள் ஆன்லைன் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள். உங்கள் வாழ்வு இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.
பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்று உங்கள் கருத்துக்களில் கூறவும் 

2/19/2010 by சசிகுமார் · 20

2/17/2010

நம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற?

ஒருபடம் சாதரணமாக பார்பதற்கும் சற்று அனிமேஷன் சேர்த்து பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போல் அனிமேஷன்  படம் உருவாக்குவதற்கு நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில்  பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நாம்  உபயோக படுத்தமுடியும். அல்லது அந்த தளங்களில் படங்களை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

கூகுளில் எதையோ தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தது இந்த தளம். இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.இந்த தளத்தில் குழந்தைகள் கூட படங்களை உருவாக்கும் அளவிற்கு சுலபமாக வடிவைதுள்ளனர்.  இந்த தளம் பல எண்ணற்ற வித்தியாசமான டிசைன்கள் கொண்டுள்ளது. இந்த தளம் மூலம் நான் உருவாக்கிய படங்கள் சில
கீழே கொடுத்துள்ளேன்.
Loogix.com. Animated avatars. Rotation


Loogix.com. Animated avatars. GuggleLoogix.com. Online Photo Frames

Loogix.com. Animated avatars. RadialBlur
மேலே உள்ளதை போல உங்கள் படத்தையும் உருவாக்க இங்கு  கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்  


           இந்த விண்டோவில் நான் நீல நிறத்தில் காட்டியிருக்கும் Choose File என்ற கிளிக் செய்து உங்கள் போட்டோவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு அதற்கு கீழே size என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
      அடுத்து நான் பச்சை நிறத்தில் வட்டமிட்டு காட்டியிருக்கும் Select Effect என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான effect தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
      முடிவில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கும் Generate Animation என்ற இடத்தில் கிளிக் செய்து விடவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
அவ்வளவு தான் உங்கள் படத்தில் அனிமேஷன் எபெக்ட் வந்திருக்கும். இப்பொழுது Save to Disk  என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யுட்டரில் சேமித்து கொள்ளலாம். அல்லது html code காப்பி செய்து நம் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது அந்த Url காப்பி செய்து பயன் படுத்தி கொள்ளலாம்.  

2/17/2010 by சசிகுமார் · 12

2/15/2010

புதியவர்களுக்காக: நம்முடைய பதிவில் எப்படி அனிமேஷன்(.gif) படங்களை இணைப்பது?

 இன்றைய வேண்டுகோள்
நீங்கள் இறந்த பின்பும் இந்த உலகை காண விரும்கிரீர்களா? 

இன்றே உங்கள் கண்களை தானம் செய்யுங்கள்.

      நாம் நம்முடைய பதிவில் அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று நினைப்போம். ஆனால் நம்முடைய பிளாக்கரில் அனிமேஷன் படங்களை இணைத்தால் அது வெறும் சாதாரண படமாகவே(.png) தெரியும். இங்கு நாம் எப்படி கீழே உள்ளதை போல அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று பாப்போம்.


good morning

இதற்க்கு முதலில் http://photobucket.com/ தளத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதுவரை இல்லை எனில் இன்றே துவக்கி கொள்ளுங்கள் இதில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது இதற்க்கு எந்த கட்டணமும் கிடையாது.

          அக்கௌன்ட் துவக்கியவுடன் உங்கள் username, password கொடுத்து உள்ளே நுழைந்து  கொள்ளுங்கள். இப்பொழுது upload images& videos என்பதை அழுத்தி உங்கள் படத்தினை தேர்ந்துதெடுத்து கொள்ளவும். அப்லோட் ஆகியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.இதில் உங்களுக்கு தேவையான டைட்டில் கொடுத்து விட்டு கீழே இருக்கும் Save&Get Links என்ற பட்டனை அழுத்தவும். அதை அழுத்தியவுடன் உங்களுக்கு உங்கள் படத்தின் url மற்றும் Html Code ஆகியவை கிடைக்கும். கீழே படத்தில் பார்க்கவும்.

    

மேலே உள்ள படத்தில் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளது தான் உங்கள் படத்தின் html Code அதை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்பொழுது  இந்த html கோடினை உங்கள் பதிவின் Edit HTML என்ற பட்டனை அழுத்தி வரும் html mode ல் பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் compose பட்டனை அழுத்தி பார்த்தால் உங்கள் பதிவில்    
அனிமேஷனோடு கூடிய படம் வந்திருக்கும். 

2/15/2010 by சசிகுமார் · 19

2/13/2010

Firefoxல் இருந்து ஒரே கிளிக்கில் Google Chrome, Internet Explorerக்கு செல்ல

      இன்று வலை உலகில் எத்தனையோ, Browsers இருந்தாலும் பதிவர்கள் அதிகமாக உபயோகிப்பது பயர்பாக்ஸ் தான் ஏனென்றால் இதில் உள்ள ஆயிரக்கணக்கான நீட்சி(Addon)ஆகும். பயர்பாக்சில் பல எண்ணற்ற நீட்சிகள் இருந்தாலும் அதில் அனைவராலும் உபயோகிக்கபடுவது குறைவே. இன்று நாம் பார்க்கபோவது நீட்சி பற்றி தான்.

         நாம் இப்பொழுது பயர்பாக்சில் ஒரு தளத்தினை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று வைத்துகொள்வோம். நமக்கு திடீரென்று Google Crome யை ஓபன் செய்யவேண்டும் என்றால் அதற்கு நாம் பயற்பாக்சினை minimize அல்லது close செய்து விட்டு தான் அடுத்த browser ஓபன் செய்யவேண்டும். இனி அப்படி செய்ய தேவையில்லை நீங்கள் பயர்பாக்சில் இருந்து கொண்டே எப்படி Gooogle Crome, Internet Explorer, ஓபன் செய்வதென்று கீழே பாப்போம். நான் கீழே கொடுத்துள்ள நீட்சியை கிளிக் செய்து உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
1.Google Crome -  Chrome View 0.2.0 -  

2.Internet Explorer - IE View Lite 1.3.5

3. safari -       Safari View Win 0.5.3

4.Opera  -    OperaView 0.7  
மேற்கூறிய நான்கு Browser உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Add to Firefox என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து வரும் விண்டோவில் Install என்பதை கிளிக் செய்து உங்கள் பயர்பாக்சை Restart செய்யவும்.  இதை முறையே படங்களாக கீழே கொடுத்துள்ளேன்.  அவ்வளவுதான் நீங்கள் ரீஸ்டார்ட் செய்ததும் உங்கள் மௌஸில் Right Click செய்தால் View this Page in Chrome என்று ஒரு ஆப்சன் வந்து இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான Browser செல்லலாம். 
பதிவு பிடித்திருந்தால் அல்லது பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் பின்னூட்டங்களில் தெரியபடுத்தவும்.  

2/13/2010 by சசிகுமார் · 4

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)