தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.
TOP 300 Freeware software!
- OFFICE
- ARCHIVE MANAGEMENT
- INTERNET
- P2P
- CHAT
- SECURITY
- NETWORK
- SERVERS
- AUDIO
- VIDEO
- IMAGE
- 3D
- DEVELOPERS
- CD/DVD
- CODECS
- SYSTEM UTILITIES
- UI ENHANCEMENTS
- HARDWARE MONITORING
- GAMES
- EDUCATION
- MISCELLANEOUS
என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்.

by சசிகுமார் · 12
விளம்பரம் மூலம் சிறிது வருமானம் பெற நம்முடைய தளத்தின் சைடுபாரில் விளம்பரம் செய்ய தேவையான Advertisement panel எப்படி நம்முடைய தளத்தில் நிறுவுவது என்று பார்ப்போம்.
நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் .


by சசிகுமார் · 5
கிரிக்கெட் ரசிகர்களுக்கான பதிவு இது. நம்முடைய தளத்திலேயே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் பார்த்து மகிழலாம். ஒவ்வொரு ரன்களுக்கும் அது தானாகவே UPDATE ஆகி நமக்கு சரியான ரன்களை உடனுக்குடன் பார்த்து கொண்டே நம் தளத்தில் மற்ற வேலைகளை செய்யலாம். நண்பர்களிடமும் கூறி நம் தளத்திலேயே பார்த்து கொள்ள சொல்லலாம்.

by சசிகுமார் · 6
பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய லிங்கை கொண்டு வருவது எப்படி என்று இங்கு பார்க்க போகிறோம். இது போல் லிங்க் தருவதனால் நம்முடைய பதிவு யாருக்கேனும் பிடித்திருந்தாலும் அந்த லிங்கை காப்பி செய்து அவர்களுடைய தளத்தின் சைடுபாரில் வைத்து கொள்ளலாம்.
இதை நம்முடைய ஒவ்வொரு தளத்திருக்கு கீழேயும் கொண்டுவர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD- LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE- சென்று <data:post.body/> இந்த கோடினை கண்டு பிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பிறகு கீழே உள்ள கோடினை சேர்க்கவும்.
<textarea cols='60' id='bloglinking' name='bloglinking' onclick='this.focus();this.select()' onfocus='this.select()' onmouseover='this.focus()' readonly='readonly' rows='2'><a href="<data:post.url/>"><data:post.title/></a>
</textarea>
பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
வேறு எந்த மாற்றமும் நீங்கள் செய்ய தேவையில்ல. தேவைபட்டால் '60' என்பதை உங்கள் தளத்திற்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி உங்களுடைய எல்லா பதிவுகளிலும் அந்தந்த பதிவுகளின் HTML LINK வந்துவிடும்.
[குறிப்பு: இது உங்களுடைய பழைய பதிவுகளிலும் வந்து விடும். இனி யாரும் காப்பி செய்யாமல் இந்த பதிவு தேவைபட்டால் அவர்களுடைய சைடுபாரில் அமைத்து கொள்ளலாம்]
புதையல் கெடச்சிருச்சே


by சசிகுமார் · 13
நம்முடைய தளம் திருடப்பட்டதா என்று கண்டறிய:
பரந்து விரிந்த இந்த இணைய உலகில் நாம் எழுதும் பதிவு திருடப்பட்டதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அதற்கு தான் நம்முடைய ஆண்டவன் (கூகிள்) இருக்கின்றாரே. எவனாலும் நம்மை ஏமாற்றலாம் ஆனால் கூகுளை ஏமாற்ற முடியாது. உங்கள் தளத்தில் திருடுபவன் பெரும்பாலும் பாப்புலர் ஆன பதிவையே திருடுவார்கள் ஆகையால் நீங்கள் உங்கள் தளத்தில் பாப்புலர் ஆன பதிவில் ஏதேனும் வரியை காப்பி செய்து கூகுளில் பேஸ்ட் செய்து தேடுங்கள். அதில் முதலில் உங்களுடைய தளம் மட்டுமே வரவேண்டும். அப்படி வேறு ஏதேனும் தளம் வந்தால் அந்த தளத்திற்கு சென்று உங்கள் பதிவு தானா என்று பார்த்து கொள்ளுங்கள். இதை எட்டு அல்லது பத்து பதிவுகளில் செய்து பாருங்கள்.
காப்பி செய்வதை எப்படி தடுப்பது :
1. இந்த தளத்தை காப்பி செய்யாதிர்கள் என்ற Banner நம்முடைய தளத்தின் முகப்பு பக்கத்தில் தெரியுமாறு சேர்க்கலாம்.(இதெல்லாம் எவனும் மதிக்கமாட்டான் என்று கூறுவது கேட்கிறது). மதிக்கிறார்களோ இல்லையோ நம்முடைய கடமையை நாம் செய்து விடவேண்டும்.
2. Contact Details:
இவைகளை செய்த பிறகும் நம் தளத்தை காப்பி செய்து கொண்டிருந்தால் அவர்களின் தளத்திற்கு சென்று அவர்களுடைய CONTACT DETAILS தெரிந்து கொள்ளுங்கள். அப்படி எதுவும் அந்த தளங்களில் இல்லாமல் இருந்தால் WHOIS, ALEXA ஆகிய தளங்களுக்கு சென்று அந்த திருட்டு தளங்களின் முகவரியை கொடுத்து CONTACT DETAILS பெற முயற்சி செய்யுங்கள்.
அப்படி ஏதேனும் ஒரு வழியில் அந்த தளங்களின் CONTACT DETAILS தெரிந்து கொண்டால் பின் வரும் ஐந்து வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
1. பரிவு கடிதம் (POLITE EMAIL):
எடுத்த எடுப்பிலேயே நம்முடைய அதிரடியை காட்டாமல் நம் தமிழர்களுக்கே உரித்தான முறையில் ஈமெயில் அனுப்பவும். (இது போல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு எழுதுகிறோம் எங்கள் உழைப்பை திருடாதீர்கள்) என்று ஒரு ஈமெயில் அனுப்பி பார்ப்போம்.
2. CEASE AND DESIST NOTICE :
ஈமெயில் அனுப்பியும் எந்த பயனும் இல்லாமல் போனால் CEASE AND DESIST NOTICE (C&D) ஒன்றை அவருடைய ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள். இங்கு CEASE AND DESIST NOTICE உடைய நகல் ஒன்றை இணைத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து அனுப்பி விடவும்.
3. DMCA LETTER TO WEBHOST :
இது சட்டப்படி நாம் எடுக்கும் முதல் முயற்சியாகும் . DMCA என்பது DIGITAL MILLENNIUM COPYRIGHT ACT என்பதன் சுருக்கமாகும். இந்த லெட்டரை நாம் நாம் அந்த WEBHOST அனுப்புவதன் மூலம் அந்த தளத்தை முழுவதுமாக முடக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அது அந்த WEBHOSTS கையிலேயே உள்ளது. இதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள http://www.copyright.gov/legislation/dmca.pdf இங்கு செல்லவும்.
4. DMCA LETTER TO GOOGLE ADSENSE :
நம்முடைய தளத்தில் இருந்து திருடி அவர்கள் நோகாமல் சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். அதை தடுக்க GOOGLE ADSENSE க்கு இந்த DMCA லெட்டரை அனுப்புவதன் மூலம் அவர்களுடைய தளங்களுக்கு கிடைக்கும் GOOGLE ADSENSE முழுவதுமாக நிறுத்தி விடலாம். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.google.com/adsense_dmca.html இங்கு க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
5. FINAL STAGE :
இது அனைத்துமே வேலை செய்யவில்லை என்றால் கடைசியாக நாம் செய்ய வேண்டியது. அந்த திருட்டு தளங்களுக்கு வரும் வாசகர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் உண்மையை விளக்கி கூறினால் நாம் அந்த திருட்டு தளங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அடியோடு குறைக்கலாம். யாரும் வரவில்லை என்றால் அவன் என்ன செய்ய போறான் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டியது தான்.
by சசிகுமார் · 7
நண்பர்களே இன்று என் வலைப்பூவில் சிறு மாற்றங்கள் செய்வதனால் இன்று எந்த பதிவையும் என்னால் இன்று கொடுக்க முடியாது என்பதை மிகவும் வருத்ததுடன் கூறிகொள்கிறேன். நாளை முதல் தொடர்ந்து பதிவிடுகிறேன். தங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும். அப்படியே இந்த template எப்படி உள்ளது என்று உங்களுடைய உண்மையான கருத்துக்களை கூறவும். சரியில்லை என்றால் தயங்காமல் கூறிவிடவும். பிடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறினால் எனக்கு சிறிது உபயோகமாக இருக்கும்
by சசிகுமார் · 14
by சசிகுமார் · 11
DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - செல்லவும்.
சரியான இடத்தில் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் இதில் SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தவும்.
இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. நீங்கள் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் பெரியதாக ஆக்க நினைக்கும் எழுத்தை(முதல் எழுத்து) மட்டும்
உதாரணமாக நீங்கள் "அ" என்ற எழுத்தை பெரியதாக்க நினைத்தால் கீழே உள்ளதை போல கொடுக்க வேண்டும்.
by சசிகுமார் · 26
இந்த வசதியை பெற இந்த லிங்கை கிளிக் http://web2.pdfonline.com/ செய்யவும்.
உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
by சசிகுமார் · 13
கடைசியில் அந்தப்பெண் முனுமுனுத்துக்கொண்டே வெளியில் செல்ல இவர்கள் மூவரும் ஜாலியாக ஓட்டலுக்கு சென்றார்கள்.
இப்ப புரியுதா நண்பர்களின் முக்கியத்துவத்தை பற்றி

by சசிகுமார் · 20
பதிவு எழுதுபவர்களில் 50% பேர் கணினி அறிவு சிறிது குறைவாகவே உள்ளது. புதியவர்கள் தங்களுடைய பிளாக்கினை அழகு படுத்த பல GADGET, TEMPLATE ஆகியவைகளை மாற்ற நினைப்பார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவு இதில் பிளாக்கருக்கு தேவையான அடிப்படை தேவைகளை எப்படி சரி செய்வது என்று நாம் காண போகிறோம்.
1. உங்கள் பிளாக்கரை டவுன்லோட் செய்ய :
நம்முடைய பிளாக்கரில் நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவுகள் திடீரென இல்லை என்றால் எப்படி இருக்கும். இது நடப்பதற்கு வாய்ப்புகள் பல உண்டு அதனை தவிர்க்க நாம் நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது. நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் செய்ய Dassboard- layout- Edit html - Download Full Template- சென்று செய்து கொள்ளவும். தேவைபட்டால் படத்தை பார்த்து கொள்ளுங்கள்
2. டெம்ப்ளேட்டை மாற்ற( TEMPLATE CHANGE) :
டவுன்லோட் செய்தவுடன் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
DASSBOARD - LAYOUT - EDIT HTML - என்ற பகுதிக்கு செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழ்காணும் விண்டோ போல வரும்.
மேலே உள்ள விண்டோ போல வந்ததும் Choose File என்பதை கிளிக் செய்து உங்கள் பைலை தேர்ந்தெடுக்கவும். பின்பு அதற்கு அருகில் உள்ள upload என்ற பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல Warning message வரும் அதில் keep widget என்பதை க்ளிக் செய்து விடவும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
by சசிகுமார் · 16
by சசிகுமார் · 22
1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...
by சசிகுமார் · 24






















