7/31/2010

பிலாக்கரில் "Subcribe by Email" வசதியை கொண்டு வர

 பதிவு எழுதும் பெரும்பாலானவர்களின் விருப்பம் தன்னுடைய தன்னுடைய தளத்தினை பிரபல படுத்துவதே ஆகும். அப்படி பிரபல படுத்தவே நாமும் தினமும் பதிவை எழுதுகிறோம். ஆனால் கோடிக்கணக்கான வாசகர்கள் கொண்ட இந்த இணைய உலகில்  தினம் தினம் புது புது வாசகர்கள் நம் தளத்திருக்கு வருவார்கள். ஒருமுறை வரும் அனைவரும் அடுத்த முறை வருவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று அப்படி உள்ள இந்த இணைய உலகில்   இந்த வசதியை கொடுத்தால் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவின் சிறு முன்னோட்டத்தை அனுப்பினால் அவர்கள் நம்முடைய பதிவு பிடித்திருந்தால் நம்முடைய தளத்திற்கு வருவார்கள் இதன் மூலம் நம்முடைய பக்கத்தை மேலும் பிரபலமடைய செய்ய முடியும்.

இந்த அற்புத சேவையை நமக்கு தருவது கூகுளின் ஒரு பகுதியான Feed Burner என்ற தளம். இந்த லிங்கில் செல்லவும்.   http://feedburner.google.com உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  அதில் உங்கள் தள முகவரி கொடுத்து NEXT பட்டனை அழுத்தவும்.

 • அடுத்து வரும் விண்டோவில் NEXT பட்டனை அழுத்தவும்.   
 • அதற்க்கு அடுத்து வரும் விண்டோவிலும் NEXT அழுத்தவும்.  
 • அதற்க்கு அடுத்து வரும் விண்டோவிலும் NEXT அழுத்தவும்
 • அதற்க்கு அடுத்து வரும் விண்டோவிலும் NEXT அழுத்தவும்.
கடைசியாக உங்கள் தளம் சேர்ந்து விடும். இப்பொழுது உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • Publicize - Emai Subscriptions - கிளிக் செய்யவும்.
 • Activate - கிளிக் செய்யுங்கள்.
 • படத்தில் உள்ளது போல் செட் செய்து விட்டு Go கிளிக் செய்யுங்கள். 
 • படத்தில் காட்டியுள்ளது போல் Add Widget கிளிக் செய்தால் போதும் இந்த விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்து விடும்.
இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. Settings - Side Feed - சென்று Full or Short எது வேண்டுமோ செலக்ட் செய்து Save செய்து விடுங்கள்.

பதிவில் வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் .

டுடே லொள்ளு     
Photobucket
Elephant drinking water
இந்த எவ்ளோ தண்ணி தாம்பா குடிக்கும் 

7/31/2010 by சசிகுமார் · 14

7/30/2010

பிலாக்கரில் "Link Within Related Post Widget" இணைக்க

நண்பர்கள் சில பேர் மெயிலிலும் போனிலும் தொடர்பு கொண்டு கேட்டதனால் இந்த பதிவை இடுகிறேன். இந்த விட்ஜெட்டை இணைப்பது மிகவும் சுலபம். இந்த விட்ஜட்டை இணைப்பதனால் நம்முடைய தளத்தில் பார்வையிடும் பக்கங்களின் (PAGE VIEWS) அளவினை  கண்டிப்பாக  கூட்ட முடியும். சந்தேகமிருந்தால் படத்தை பாருங்கள் .என் தளத்தின் ஒரு மாதத்திற்கான STATS
 இந்த விட்ஜெட்டை இணைக்க இந்த லிங்கில் க்ளிக் செல்லவும் http://www.linkwithin.com/learn செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


படத்தில் நான் கொடுத்துள்ளதை போல உங்கள் விவரங்களை கொடுத்து Width என்ற இடத்தில் உங்கள் டெம்ப்ளேட்டின் அளவிற்கு ஏற்ப செலக்ட் செய்து கீழே உள்ள Get Widget என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு வரும் விண்டோவில் Install Widget கிளிக் செய்யவும். கீழே உள்ளதை போல விண்டோ வரும் 


இதில் ADD WIDGET என்பதை கிளிக் செய்யவும்.  கீழே உள்ள என்பதை கிளிக் செய்தால் இந்த விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்து விடும். கீழே உள்ள படங்களை பார்த்து கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் உங்கள் விட்ஜெட்டை நகர்த்தி வையுங்கள்.
  
அடுத்து save கொடுத்து விடுங்கள்.அவ்வளவு தான் Related Post Widjet  விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்திருக்கும்.  
விட்ஜெட்டில் சிறிது மாற்றங்கள் செய்யலாம் வாங்க. (விருப்பமிருந்தால்) 

இந்த விட்ஜெட்டில் தலைப்பை மாற்ற 
   இந்த விட்ஜெட்டில் default ஆக "you may like this" என்று வரும் இதை நம் விருப்பப்படி மாற்ற உங்கள் தளத்தில் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
 • Dassboard 
 • Design
 • Edit Html- சென்று பின்வரும் <head> கோடிங்கை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பிறகு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும். 
இந்த கோடிங்கில் YOUR TITLE TEXT HERE என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான தலைப்பு கொடுத்து SAVE செய்து விடவும்.   கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.


பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். 

டுடே லொள்ளு 

Photobucket

இன்னிக்கி எப்படியாவது  நம்ம தலைவர் படத்த  பார்க்காம விடக்கூடாது 

7/30/2010 by சசிகுமார் · 6

7/29/2010

பதிவர்களுக்காக கூகுள் தரும் அசத்தலான 30 வசதிகள்

இணைய உலகில் ராஜாவாக விளங்கும் நம்ம கூகுள் தினம் தினம் புது புது வசதிகளை அதன் வாசகர்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கூகுள் பிலாக்கர் பதிவர்களுக்காக 30 அருமையான விட்ஜெட்டுகளை அறிமுக படுத்தியுள்ளது. இந்த லிங்கில் செல்லவும் http://www.google.com/friendconnect சென்றவுடன் கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


அந்த விண்டோ ஓபன் ஆகியதும் இடது பக்க மூலையில் நாம் வைத்திருக்கும் ப்ளாக் வரிசையாக இருக்கும். அதில் நீங்கள் எந்த தளத்திற்கு விட்ஜெட் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிலாக்கினை கிளிக் செய்தால் அந்த தளம் பகுதியின் மேல்புறத்தில் வந்துவிடும் (மேலே உள்ள படத்தில் பார்த்து கொள்ளவும்).   அடுத்து நாம் விட்ஜெட்டை பார்க்க மெனுவில் இரண்டாவதாக இருக்கும் Browse gadget gallery என்பதை கிளிக் செய்தால் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.  


இதில் Feature gadget ,  All Gadget என்ற இரண்டு வகைகள் இருக்கும். இதில் நீங்கள் அணித்து கேட்ஜெட்டையும் பார்வையிட All Gadget என்பதை கிளிக் செய்யவும்.  கிளிக் செய்தால் அந்த பக்கத்தில் பதினைந்து விட்ஜெட்டுகள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்த விட்ஜெட்டுகளை பார்க்க கீழே வலது மக்க மூலையில் இருக்கும் More என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு அடுத்த பதினைந்து விட்ஜெட்டுகள் வரும். இதில் நீங்கள் ஏதேனும் விட்ஜெட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். நான் Recent Visitor Gadget தேர்வு செய்து உள்ளேன்.  

உங்களுக்கு வரும் விண்டோவில் தேவையான மாற்றங்கள் செய்த பின் உங்களுடைய preview சென்று பார்த்தால் நீங்கள் செய்த மாற்றங்கள் உங்கள் preview ல் தெரியும் அடுத்து கடைசியாக Generate Code என்பதை கிளிக் செய்தால் கீழே விட்ஜெட்டின் code வரும் அதை காப்பி செய்து கொள்ளவும் . காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்த கொள்ளுங்கள். 
 • Dassboard
 • Design
 • Add a Gadget
 • Html/ JavaScript- சென்று பேஸ்ட் செய்து Save செய்த பிறகு நம் தளம் சென்று பார்த்தால் உங்கள் தளத்தில் நீங்கள் தேர்வு செய்த விட்ஜெட் வந்திருக்கும்.
  இதே முறையில் உங்களுக்கு தேவையான விட்ஜெட்டை உங்கள் பிலாக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.  

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருதால் தயங்காமல் கேட்கலாம்.  

டுடே லொள்ளு 
Photobucket

ச்சே இந்த மனுசங்க கூட சேர்ந்து ஒடம்பெல்லாம் ஒரே அழுக்காயிடுசிப்பா 

7/29/2010 by சசிகுமார் · 16

7/28/2010

Face book சுலபமாக உபயோகிக்க முக்கியமான Short cut keys

இந்த கணினி உலகில் பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு உலகில் பேஸ்புக் இணையதளம் மக்களிடையே அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. நம்மில் கூட பெரும்பாலானோர் பேஸ்புக் உபயோக படுத்துகிறோம். இது உபோயோகிப்பதர்க்கு சுலபமாக இருக்கும். இதை மேலும் சுலபமாக்க இங்கு பேஸ்புக்கின் முக்கியமான சில shortcut key கொடுத்துள்ளேன் உபயோகித்து பாருங்கள். 

   நண்பர்களே இந்த shorcut keys கூகுள் க்ரோமில் மட்டுமே வேலை செய்கிறது.


Keyboard Shortcuts
Function
ALT + 1 முகப்பு பக்கம் 
ALT + 2 சுய விவரம் 
ALT + 3 நட்பு கோரிக்கைகள் 
ALT + 4 நமக்கு வந்த அஞ்சல்கள் 
ALT + 5 அறிவிப்புகள் 
ALT + 6 எனது கணக்குகள் 
ALT + 7 PRIVACY SETTING
ALT + 8 OFFICIAL FACEBOOK PAGE
ALT + 9 TERMS AND CONDITIONS
CTRL + F VIEW SOURCE PAGE
CTRL + H BOOK MARK
CTRL + O REFRESH
CTRL + P SELECT ADDRESS BAR
CTRL + R PRINT THE PAGE
CTRL + S SAVE PAGE
CTRL + Y FIND

நண்பர்களே இங்கு எனக்கு தெரிந்த SHORTCUT கீகளை மட்டுமே கொடுத்துள்ளேன். இதற்க்கு மேல் உங்களுக்கு ஏதேனும் SHORTCUT KEYS தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.

டுடே லொள்ளு 

Photobucket

மச்சி தூக்குடா அவன 

7/28/2010 by சசிகுமார் · 6

7/27/2010

பிலாக்கரில் ஒரே நிமிடத்தில் 1000 கமென்ட் வேணுமா வாங்க


உங்களுடைய பிலாக்கில் எழுதும் பதிவிற்கு பின்னூட்டங்கள் அதிகமாக வரவில்லையா ?தினமும் ரெண்டு மூணு தான் வருதா?  நான் இருக்கும் போது எதற்காக கவலை, கவலையை விடுங்கள். சரி சொல்லுங்கள் உங்களுக்கு எவ்வளவு கமென்ட் வேணும் 100 இல்லை 1000 இதுவும் போதாதா சரி பத்தாயிரம் இப்படி உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் கமென்ட் வரவைத்து கொள்ளலாம். என்னடா இவன் பைத்தியம் போல ஒளருறான்னு நினைக்கிறீங்களா மேலே உள்ள படத்துல பாருங்கப்பா தெரியும்.

  இப்ப புரிஞ்சுதா நான் சொல்றது உண்மையின்னு. (நீங்க உண்மையின்னு நெனச்சா நான் பொறுப்பில்ல). அந்த பதிவிற்கு எனக்கு மொத்தம் வந்த பின்னூடங்கள் வெறும் 12 தான் அப்பா இதில் எப்படி 10012 ன்னு காட்டுதுன்னு பார்க்கறீங்களா. இது ஒரு சிம்பிள் மேட்டர் தான் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.

மேலே கோடிங்கை காப்பி செய்து கீழே உள்ள வரிக்கு மேலே / முன்பு பேஸ்ட் செய்யவும்.
பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.


அவ்வளவு தான் கீழே உள்ள Save Template  கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் தளம் வந்து பார்த்தால் உங்கள் முகப்பு பக்கத்தில் உள்ள பதிவுகளில் ஏற்கனவே இருந்தா கமென்ட்டுகளின் எண்ணிக்கைக்கு முன்னர் இந்த 100 சேர்ந்து மொத்தமாக தெரியும்.

டிஸ்கி: நண்பர்களே நம்முடைய முகப்பு பக்கத்தில் மட்டுமே தெரியும். பதிவின் லிங்க்கை கிளிக் செய்தால் உண்மையான கமெண்ட்டுகள் மட்டும் தான் வரும். இதெல்லாம் சும்மா ஓர் ஜாலிக்காக தான்.     

டுடே லொள்ளு 
 Photobucket

அட பாவிங்களா புது டெக்னாலஜியா 

7/27/2010 by சசிகுமார் · 17

7/26/2010

நம் படங்களில் மேல் எழுத்துக்களை சேர்க்க சூப்பர் இலவச மென்பொருள்

நம்முடைய பிலாக்கரில் நாம் பதிவு வெளியிடும்  போது அதற்கு சம்பந்தமான படங்களை  வெளியிடுவோம் அப்படி சேர்க்கும் போது  நம்முடைய பிலாக்கில் உள்ள போட்டோக்களை சிலபேர் எடுக்காமல் இருக்க அதன் மீது நம்முடைய பேரோ அல்லது நம் பிலாக்கின் பேரையோ போடுவோம்.  இதற்க்கு நாம் Ms paint, picasa, Photoshop போன்ற மென்பொருட்களின் உதவியோடு போடுவோம். ஆனால் இவைகளில்  என்ன குறை என்றால் நாம் ஒவ்வொரு படமாக திறந்து அந்தந்த படங்களின் மீது நம் வார்த்தையை எழுதவேண்டும். நீங்கள் பதிவில் ஒன்று இரண்டு படங்கள் சேர்ப்பது என்றால் இது போல் சேர்த்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஏதேனும் புகைப்பட பதிவு போட வேண்டி இருந்தால் நீங்கள் ஒவ்வொரு படமாக திறந்து உங்கள் எழுத்துக்களை சேர்ப்பதற்கு மிகவும் நேரம் எடுத்து கொள்ளும் இதனை தவிர்க்கவே இந்த அருமையான மிகச்சிறிய அதேவேளையில் சிறந்த முறையில் இயங்க கூடிய மென்பொருள் உள்ளது. இதை தரவிறக்க இந்த டவுன்லோட் பட்டனை அழுத்தி 
டௌன்லோட் செய்தவுடன் அந்த பைலை நீங்கள் install செய்ய வேண்டியதில்லை. நேராக ரன் செய்ய வேண்டியது தான் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

 
உபயோகிக்கும் முறைகள் 
 • Folder Path - இந்த பகுதியில் நாம் இமேஜ் போல்டெர் இருக்கும் பகுதியை தேர்வு செய்து கொள்ளவும்.
 • Text - இந்த இடத்தில் நம் படத்தின் மீது தெரியவேண்டிய எழுத்துக்களை குறிப்பிடவும்.
 •  Opacity - இதில் நம்முடைய எழுத்தின் பிரகாசத்தை குறைக்கவோ கூட்டவோ செய்திடலாம்.
 •  Set Font - இதில் நமக்கு தேவையான பான்ட் தேர்வு செய்து கொள்ளலாம்.  அதற்கு ஏற்ற மாதிரி அளவினையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
 • Water Mark Position - இதில் நம் எழுத்துக்கள் வரவேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
 • Preview - இது நம் படத்தின் மாதிரியை தெரிவிக்க உதவுகிறது.
மேலுள்ள மாற்றங்கள் செய்தவுடன் முடிவில் Apply Watermark என்ற பட்டனை அழுத்தியவுடன் நம் செலக்ட் செய்த போல்டரில் உள்ள படங்களில் நாம் கொடுத்த எழுத்துக்கள் வந்திருக்கும்.


அவ்வளவு தான் இனி நாம் அந்த படங்களை உபயோக படுத்தி கொள்ளலாம் 

டுடே லொள்ளு       
ஏதாவது கமென்ட் இருந்தா போடுங்க அம்மா 

7/26/2010 by சசிகுமார் · 10

7/24/2010

பிலாக்கரில் இதுவரை வந்த மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அறிய

நம்முடைய பிலாக்கில் நாம் தினமும் பதிவு எழுதுகிறோம். அப்படி எழுதும் பதிவு நம் வாசகர்கள் பார்த்துவிட்டு அதற்க்கான கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக நமக்கு தெரிவிப்பார்கள் அப்படி நாம் பிலாக் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நமக்கு எத்தனை கமெண்டுகளின் எண்ணிக்கையை அறிய நாம் ஒவ்வொரு பதிவில் எத்தனை என்பதை குறித்து கூட்டினால் மட்டுமே அந்த எண்ணிக்கையை அறிய முடியும்.   ஆனால் இதன் மூலம் நமக்கு நேரம் தான் விரயம் ஆகும். இதை தவிர்க்கவே இந்த பதிவு.   

இந்த விட்ஜெட்டை நம் பிலாக்கில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்
<script style="text/javascript">function numposts(json) { document.write('Total Posts :' + json.feed.openSearch$totalResults.$t + '<br>'); }function numcomments(json) { document.write('Total Comments :' + json.feed.openSearch$totalResults.$t + '<br>'); }</script>
<script src="http://www.vandhemadharam.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numposts"></script>
<script src="http://www.vandhemadharam.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numcomments"></script>
<a href='http://www.bloggerplugins.org'><img alt="Blogger Widgets" style="border: 0" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a><a href='http://www.bloggerplugins.org/2009/06/blog-statistics-widget-for-blogger.html'><img style="border: 0" alt="Blog statistics Widget For Blogger" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a>
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

 • Dassboard
 • Design
 • Add a Gadget
 • Html / JavaScript- சென்று பேஸ்ட் செய்யவும். 
பேஸ்ட் செய்தவுடன் கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள(vandhemadharam) இடத்தில் உங்களுடைய பிலாக்கின் முகவரியை கொடுக்கவேண்டும்.

மாற்றங்கள் செய்தவுடன் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளத்திருக்கு சென்று பார்த்தால் உங்கள் தளத்தில் நீங்கள் பப்ளிஷ் செய்த பதிவுகள் மற்றும் மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் வந்திருக்கும். 

இதில் நீங்கள் பப்ளிஷ் செய்த பதிவுகளின் எண்ணிக்கை மட்டுமே வரும். Draftல் சேமித்து வைத்திருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை வராது.   

டுடே லொள்ளு 
Funny Animation, Animated Pictures and Comments

நம்ம விஜயகாந்த் கிட்ட  ட்ரெய்னிங் எடுத்து இருக்குமோ 

7/24/2010 by சசிகுமார் · 6

7/23/2010

கூகுளின் இன்னொரு சூப்பர் வசதி


கம்ப்யுட்டர் உலகில் கூகுள் பற்றி தெரியாதவர் யாரும் இருக்கவே முடியாது என்பது மறுக்க முடியாத  உண்மை. அப்படி உள்ள கூகுள் நிறுவனம் தினம் தினம் புது புது வசதிகளை வாசகர்களுக்கு வாரி வழங்கி கொண்டுள்ளது. அப்படி கொடுத்துள்ள வசதிகளில் சூடான வசதி இன்று நாம் காணபோகிறோம்.  

மேலும் வாசிக்க

7/23/2010 by சசிகுமார் · 13

7/20/2010

இந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர


நீண்ட நாள்  ஆய்வுக்கு பின் நம்முடைய ரூபாயின் சின்னத்தை அறிவித்து விட்டார்கள். உலகிலேயே பணத்திற்கு சின்னம் வைத்திருக்கும் ஐந்தாவது பெரிய நாடாக நம் நாடு வந்துவிட்டது.  (புதுசா எதாவது சொல்லூப்பா இதெல்லாம் எங்களுக்கு தெரியும்) . சரி அப்படி வெளியிட்ட சின்னத்தை நாம் எப்படி நம்முடைய கம்யுட்டரில் உபயோக படுத்துவது என்று இங்கு காணலாம்.

மேலும் வாசிக்க

7/20/2010 by சசிகுமார் · 19

7/17/2010

நம்முடைய பிலாக்கரில் "Facebook Like Box" கொண்டுவர

நம்முடைய பிலாக்கரில் "Facebook Like Box" கொண்டுவருவது எப்படி என்று இங்கு காண போகிறோம். இதை நம் பிலாக்கரில் பொருத்துவதன் மூலம் நம்முடைய வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் மற்றும் நம்முடைய பிலாக்கின் Alexa Rank  ஐ உயர்த்த முடியும். இதை நம் தளத்திருக்கு கொண்டுவர முதலில் நீங்கள் பேஸ்புக்கில் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் இல்லை என்றால் www.facebook.com தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.
 • முதலில் இந்த லிங்கில் செல்லவும் http://www.facebook.com/pages/learn.php 
 • வலது பக்க மூலையில் உள்ள Create a Page என்ற பட்டனை அழுத்தவும். 
 • அதில் உங்கள் பக்கத்தின் பெயர் மற்றும் உங்களுடைய பக்கத்தின் நோக்கம் ஆகிய விவரங்களை கொடுத்த பிறகு Create Official Page என்ற பட்டனை க்ளிக் செய்து கொள்ளவும்.

இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

  
இதில் நான் காட்டியுள்ள படி விருப்பம் or Like என்று இருப்பதில் நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே address பாரில் அந்த பக்கத்தின் id வந்திருக்கும் அதை கவனமாக குறித்து கொள்ளுங்கள். 

அடுத்து இந்த லிங்கில் செல்லுங்கள் http://developers.facebook.com/docs/reference/plugins/like-box இந்த லிங்கில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.   


படத்தில் நான் காட்டியுள்ள படி மாற்றங்கள் செய்து Get Code என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு உங்களுடைய widget Code கிடைக்கும்.  


படத்தில் காட்டியுள்ள கோடினை காப்பி செய்து உங்கள் தளத்தில் Blogger அக்கௌண்டில் நுழைந்து
 • Dassboard
 • Design
 • Add a Gadget
 • Html/ JavaScript -  சென்று பேஸ்ட் செய்து Save செய்தால் உங்களுடைய தளத்தில் Facebook Like Box வந்திருக்கும்.     
டுடே லொள்ளு 
Photobucket
நம்ம பதிவு ஏதாவது பேப்பர்ல இருக்கான்னு பார்ப்போம். 

7/17/2010 by சசிகுமார் · 2

7/15/2010

நம் தளத்திற்கு விருப்பம் போல் favicon உருவாக்க ஒரு சூப்பர் மென்பொருள்

Favicon மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்வதென்று போன பதிவில் பார்த்தோம். அதை பார்க்காதவர்கள் இங்கு சென்று பார்த்துகொள்ளவும்.   http://vandhemadharam.blogspot.com/2010/07/favicon.html

ஆனால் நாம் இங்கு காணப்போவது நமக்கு தேவையான Favicon நாமே நம் விருப்பபடி உருவாக்கி கொள்ளலாம். இந்த மென்பொருள் இருக்கும் போது நாம் ஏன் மற்ற தளங்களுக்கு சென்று காப்பி செய்யவேண்டும். இதில் நாம்உருவாக்குவது மிகவும் எளிதான காரியமாகும். இந்த மென்பொருளை தரவிறக்க இந்த லிங்கில் கிளிக் செய்யவும். http://www.4shared.com/file/zZ8yQXGv/icofxsetup.html   டவுன்லோட் செய்தவுடன் .exe பைலை ரன் செய்து  இன்ஸ்டால் கொள்ளவும்.


இதில் முதலில் New கிளிக் செய்யுங்கள். க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
   

ஓகே கொடுத்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல இருக்கும். நாம் இந்த விண்டோவில் வரைய தொடங்கலாம். நாம் இந்த விண்டோவில் வரைய வரைய நமக்கு நம்முடைய Fevicon உடைய preview மேலே தெரியும். 

இதில் நாம் வரைவதற்கு எளிதாக rectangle circle போன்ற பல டூல்கள் கொடுத்து உள்ளார்கள். நாம் நம்முடைய பெவிகானில் ஏதேனும் படத்தை சேர்க்க விரும்பினால் நமக்கு இடது பக்கத்தில் ஓரத்தில் உள்ள Explorer விண்டோவில் நமக்கு தேவையான படத்தை Drag செய்து விட்டாலே போதும் அது நம் Fevicon விண்டோவில் சேர்ந்து விடும். 


நமக்கு தேவையான பைலை சேவ் செய்து நம் தளத்தின் Fevicon ஆக மாற்றி கொள்ளலாம்.நம் பிலாக்கில் Fevicon மாற்ற தெரியாதவர்கள் எப்படி மாற்றுவது என்று இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.http://vandhemadharam.blogspot.com/2010/04/favicon.html         

டுடே லொள்ளு 


யாராவது வேலை காலி இருந்தா சொல்லுங்கப்பா 

7/15/2010 by சசிகுமார் · 5

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)