9/30/2010

ஜிமெயிலில் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப

கூகுள் தரும் சேவைகளில் தவிர்க்க முடியாத ஒன்று ஜிமெயில் ஆகும். நாம் அனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Groups. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மெயில் அனுப்புவது. இந்த வசதியை நிறைய பேர் உபயோக படுத்தி கொண்டு இருக்கலாம். நண்பர் ஒருவர் மெயிலில் தொடர்பு கொண்டு கேட்டதனால் அவருக்கு மட்டுமின்றி தெரியாதவர்களுக்கு உபயோக படும் என்று இப்பதிவு.

மேலும் வாசிக்க

9/30/2010 by சசிகுமார் · 15

9/29/2010

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட

இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.  அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.

மேலும் வாசிக்க

9/29/2010 by சசிகுமார் · 10

கணினியை அதிவேகமாக சுத்தமாக்க Ccleaner Latest version V2.36

இணையத்தில் நாம் உலாவும் போதோ அல்லது ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைகள் சேர்ந்து விடுகிறது. இந்த பைல்களால் தான் நம் கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் நம்மில் பெரும்பாலவனர்களின் விருப்பம் Ccleaner தான்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 9

9/28/2010

பிளாக்கில் பதிவின் தலைப்பை நடுவில்(Center) கொண்டு வர

 நம்முடைய பிளாக்கில் நாம் தினம் பதிவு எழுதி வெளியிடுகிறோம். அப்படி வெளியிடும் போது நம் பிளாக்கில் நம் பதிவின் தலைப்பு இடது பக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கும். சிறிய தலைப்புகளாக இருந்தால் பாதியிலேயே பார்ப்பதற்கு அழகற்று காணப்படும். ஆனால் நம் பிளாக்கின் தலைப்பை நடுவில் கொண்டு வந்தால் நம் பதிவின் தலைப்பு அழகாக இருக்கும். அதை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வருவது என இங்கு பார்க்க போகிறோம்.

 • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
 • Design - Edit Html - என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
 • சென்று .post h3 {  என்ற வரியை கண்டு பிடிக்கவும் (இந்த கோடிங் உங்கள் தளத்தில் சற்று மாறியிருக்க வாய்ப்புள்ளது) . 
 • Ctrl+f உபயோகித்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம். உங்கள் கோடிங் கீழே இருப்பதை போல இருக்கும்.
.post h3 {
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
இந்த கோடிங்கில் நீங்கள் text-align:center; இந்த ஒரே ஒரு வரியை மட்டும் சேர்த்தால் போதும்.
.post h3 {
text-align:center;
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
மேலே காட்டியுள்ள இடத்தில் சரியாக text-align:center; ஒருவரியை மட்டும் சேர்த்து விட்டு கீழே உள்ள PREVIEW பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங் வேலை செய்கிறதா என்று கண்டறிந்து பின் SAVE TMEPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.


 இப்பொழுது உங்களின் பதிவின் தலைப்புகள் நடுவில் வந்து விடும்.உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் தானாகவே மாறிவிடும். அதற்காக edit செய்ய வேண்டியதில்லை.
டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts

மவனே யார்க்கிட்ட 

9/28/2010 by சசிகுமார் · 11

உங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய

இந்த வைரஸ் மனிதனை தான் ஒரு ஆட்டு ஆட்டுதுன்னு பார்த்தால் கணினியை கூட விட்டு வைக்க மாட்டேங்குது. இன்னும் ஒரு படி மேல் சென்று வலைத்தளங்களை கூட விட்டு வைப்பதில்லை. பெரிய வலைத்தளங்கள் கூட இந்த பிரச்சினையால பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நம் தளத்தை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள நம் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கலாம் வாருங்கள்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 19

9/27/2010

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவரின் விவரங்கள் அறிய

இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் 90% மேல் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.

மேலும் வாசிக்க

9/27/2010 by சசிகுமார் · 11

9/25/2010

உங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க

 நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம்.
இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard- Settings - Site feed - Full- Save Settings -என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.


இந்த சேவையை நமக்கு ஒரு வலைத்தளம் செய்கிறது. இந்த தளத்தில் நம் புத்தகத்தை உருவாக்கும் வரை இலவசமே. ஆனால் அதை டவுன் லோட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் க்ளிக் BLOG2PRINT செய்யவும்.

இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் இதில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுத்து Print My Blog என்ற அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் ஸ்கேன் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
 • Include Posts: இந்த இடத்தில் உங்களுக்கு எத்தனை பதிவுகள் புத்தகமாகக வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவவும். (ALL POSTS செலக்ட் செய்ய வேண்டாம் சில சமயம் சரியாக இயங்கவில்லை.)
 • Labels: இதில் உங்கள் பதிவுகளை நீங்கள் உங்கள் labels வகையில் வகை படுத்தலாம்.
 • Comments: நம் பதிவை படித்துவிட்டு வாசகர்கள் கூறும் கமென்ட் ஆக்டிவேட் செய்ய.
 • Page Template: இந்த இடத்தில் நீங்கள் Compact செலக்ட் செய்வதே சிறந்தது.
 • Order of Posts: உங்களின் பதிவுகள் வரிசை படுத்த.
அடுத்து COVERS என்ற பகுதி இருக்கும். இதில் உங்கள் புத்தகத்தின் அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

  அடுத்து உள்ள DEDICATION என்ற இடத்தில் உங்கள் புத்தகத்தின் ஏதேனும் முன்னுரையை கொடுத்து கீழே உள்ள CREATE MY BOOK என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்கள் புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிறிது நேரம் காத்திருக்கவும். முடிவில் உங்கள் புத்தகம் தயாராகி வரும்.
  தேவைபட்டால் நீங்கள் அங்கே கொடுக்கபட்டிரும் விலை பட்டியலில் சொடுக்கி உங்கள் புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

  டுடே லொள்ளு 
  free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts
  டே தலையே சுத்துது, யார் கிட்ட கத்துகிட்ட கொஞ்சம் அட்ரஸ் கொடு நம்ம தமிழ் நடிகர்களுக்கு யூஸ் ஆகும்.

  9/25/2010 by சசிகுமார் · 17

  9/24/2010

  நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய

  இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.

  மேலும் வாசிக்க

  9/24/2010 by சசிகுமார் · 16

  உங்கள் பிளாக்கை மொபைல் போனுக்கு ஏற்றதாக மாற்ற

   மொபைல் வைத்திருப்போர் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் இப்பொழுது மொபைல் போனிலும் வந்து விட்டது. அதில் குறிப்பிட்ட வசதி இணையம். செல்போனில் இணையம் உபயோகிப்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழில் நுட்பதிற்கு ஏற்ற மாதிரி நம் பிளாக்கை நாம் மாற்றினால் தான் நம் பிளாக்கை  பிபலபடுத்த முடியும். ஆகையால் நம்முடைய தளங்களை நாம் செல்போனில் திறப்பதற்கு வசதியாக மாற்றினால் நம் பிளாக்கின் page views அதிகரிக்கும்.
  உறுதி படுத்த வேண்டுமென்றால் கீழே என் தளத்தின் ஒருமாத வரவை பற்றி கொடுத்துள்ளேன்.
  Page views by operating systems
  இதில் மொபைல் போன்களில் 100 முறைக்கு மேல் என் தளம் திறக்கப்பட்டிருப்பதை காணலாம். 
  • உங்கள் பிளாக்கில் Design -Edit Html என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
  blogger design
  • சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து <head> கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
  <meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>
  <b:if cond='data:blog.isMobile'>
  <meta content='width=device-width,minimum-scale=1.0,maximum-scale=1.0' name='viewport'/>
  <b:else/>
  <meta content='width=1100' name='viewport'/>
  </b:if>
  உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.
  Mobile friendly
  சரியான இடத்தில் சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும். இனி உங்கள் பிளாக்கை எந்த செல்போனிலும் எளிதாக திறந்து கொள்ளலாம்.

  டுடே லொள்ளு 
  Photobucket
  ஓவரா குடிக்காதடான்னு சொன்னனே கேட்டியா, எவனோ ஓசியில வாங்கி தரான்னு குடிச்சா இப்படி தான். 

  by சசிகுமார் · 7

  9/23/2010

  PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற

  PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.

  மேலும் வாசிக்க

  9/23/2010 by சசிகுமார் · 12

  9/22/2010

  புதியவர்களுக்காக: படங்களினால் உங்கள் பிளாக் திறக்க தாமதமாகிறதா

  பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் போது அதற்கு சம்பந்தமான படங்களை சேர்ப்போம் எதையும் எளிதில் புரிய வைக்கவே நாம் படத்தை உபயோகிக்கிறோம்.ஒரு படமானது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அது மட்டுமில்லாமல் போட்டோ பதிவுகளும் போடுவோம்.

  மேலும் வாசிக்க

  9/22/2010 by சசிகுமார் · 16

  அனைத்து விதமான கிராபிக்ஸ் பைல்களை பார்க்க மற்றும் கன்வெர்ட் செய்ய

  இணையத்தில் நூற்றுகணக்கான  கிராபிக்ஸ் பைல்கள் காணப்படுகிறது. அதில் ஒரு சில மட்டும் நம் கணினியில் திறக்கும் மற்றவைகள் நம் கணினியில் திறக்க முடியாது. காரணம் அந்தந்த பைல்களுக்கு தேவையான support பைல்கள் நம் கணினியில் நிருவப்படாததே காரணம். இதற்க்கு ஒவ்வொன்றாக நாம் தேடி சென்று support பைல்கள் சேர்ப்பது என்பது சுலபமான காரியமல்ல. இந்த குறைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு பயன்படுகிறது.

  மேலும் வாசிக்க

  by சசிகுமார் · 17

  9/21/2010

  உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்

  இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

  மேலும் வாசிக்க

  9/21/2010 by சசிகுமார் · 9

  9/20/2010

  உங்கள் கணினியை வேகமாகவும் சிறப்பாகவும் Defragment செய்ய

  நாம் கணினியில் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது நமக்கு தேவையானதை நம் கணினியில் சேமித்து வைத்து கொள்வோம். அப்படி நாம் கணினியில் சேமிக்கும் போது நம் கணினி ஒரு பைலை சிறு சிறு பகுதிகளாக பிரித்து நம் கணினியின் வெவ்வேறான  பகுதிகளில் சேமித்து விடுகிறது. திரும்பவும் நாம் அந்த பைலை ஓபன் செய்யும் போது நம் கணினி சேமித்து வைத்த இடங்களில் இருந்து அலைந்து திரிந்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நமக்கு கொடுக்கிறது. நாம் பைலை ஓபன் செய்யும் நேரம் ஆவதற்கு இது தான் காரணம்.


  மேலும் வாசிக்க

  9/20/2010 by சசிகுமார் · 10

  உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழிகள்

  பிளாக் வைத்திருக்கும் அனைவரும் யோசிப்பது ஒன்று தான் நம் பதிவு பிரபல மாக வேண்டும். அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும். எப்படி நம் பிளாக் பதிவை பிரபலமடைய வைப்பது அது நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது. வாசகர்கள் மூலம் மட்டுமே நம் பதிவு பிரபலமடைகிறது. ஆகவே நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே 40 சிறந்த  வழிகளை கீழே தொகுத்துள்ளேன். நானும் இந்த வழிகளை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறேன்.

  மேலும் வாசிக்க

  by சசிகுமார் · 19

  9/18/2010

  அடைந்தேன் இலக்கை அனைவருக்கும் மிக்க நன்றி

  நண்பர்களே என்னுடைய நீண்ட நாள் ஆசையான 100000 கடந்து வந்து விட்டேன். இதற்க்கு காரணமாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும் இதுவரை எழுத தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் என்னை பேஸ்புக், த்விட்டேர், கூகுள் போன்ற தளங்களில் பின்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். இந்த வெற்றியை பெற முக்கிய காரணமாக இருந்த இன்ட்லி தளத்திற்கும் மற்றும் தமிழ்மணம்,தமிழ்10, உலவு, யூத்புல் விகடன் தளத்திற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  மேலும் வாசிக்க

  9/18/2010 by சசிகுமார் · 30

  கூகுள் குரோம் 6ல் உள்ள புதிய சிறப்பம்சங்கள்

   இன்று இனிய உலாவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் தற்போது தன்னுடைய இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியது. பிறந்த நாள் பரிசாக அனைவருக்கும் கூகுள் குரோம்6 என்ற புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளித்தது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பில் நிறைய மாற்றங்களும் வசதிகளும் செய்து நமக்கு அளித்துள்ளது. அப்படி என்னதான் புதுசா இருக்கு என்று கேட்கறிங்களா கீழே தொடருங்கள்.

  மேலும் வாசிக்க

  by சசிகுமார் · 10

  9/17/2010

  உங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா?

  உங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. நம்முடைய தளத்தை வேகமாக வைத்து கொள்வது நம்முடைய முக்கிய கடமையாகும். ஏனென்றால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் தளம் மெதுவாக இயங்கினால் அவர்கள் நம் தளத்தை விரும்ப மாட்டார்கள். அதனால் நம்முடைய வாசகர்களை நாம் இயக்க நேரிடும். இந்த குறையை தவிர்க்கவே இந்த பதிவு இதன் படி செய்தால் உங்கள் தளம் கண்டிப்பாக வேகமாக இயங்கும்.
  STAGE -I
  • உங்கள் தளத்தில் உள்ள படத்தின் அளவை குறைக்கவும். வாசகர்கள் தேவையென்றால் பெரிது படுத்தி பார்த்து கொள்வார்கள்.
  • உங்கள் தளத்தில் ஏதேனும் Flashல் உருவான விட்ஜெட் இருந்தால் நீக்கி விடவும். இது லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.
  • முடிந்த வரையில் பிலாக்கரின் default விட்ஜெட்டுகளை மட்டுமே பயன் படுத்துவது சிறந்தது.
  • உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் நீக்கி விடுங்கள். தேவையென்றால் புதியதாக சேர்த்து கொள்ளவும். 
  • உங்கள் தளத்தில் தேவையற்ற தற்போது உபயோகிக்காத விட்ஜெட்டுகளை கண்டறிந்து நீக்கி விடவும்.
  • உங்களுடைய முகப்பு பக்கத்தில் முழு பதிவும் தெரிவதற்கு பதில் ஒரு READMORE என்ற லிங்க் கொடுக்கலாம்.
  STAGE- II
  • மேலே உள்ள மாற்றங்கள் செய்த பிறகும் உங்கள் தளம் மெதுவாக தான் இயங்கு கிறதா. 
  • எந்த விட்ஜெட் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று அறியமுடியவில்லையா கவலையை விடுங்கள் உங்களுக்கு ஒரு தளம் உள்ளது.
  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இந்த தளத்திற்கு செல்ல லிங்க் - pingdom
  • அதில் கொடுக்க பட்டிருக்கும் காலி கட்டத்தில் உங்களுடைய தளத்தின் URL கொடுக்கவும்.
  • பிறகு அதற்கு அருகே உள்ள Test Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய தளம் உங்களுடைய தளம் ஸ்கேன் ஆகும்.
  • முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும். 
  • இதில் உங்கள் தளத்தில் உள்ள அனைத்து HTML லிங்கும் ஸ்கேன் ஆகி வரும்.
  • ஒவ்வொரு லிங்கிற்கு நேராக மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய பார்(bar) வரும். 
  • அதன் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அந்த விட்ஜெட் லோடு ஆக எவ்வளவு நேரம் ஆனது என்று வரும். 
  • இது போல் எந்த லிங்க் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று கண்டறிந்து அதை நம் தளத்தில் இருந்து நீக்கி விடவும். 
  STAGE- III
  • இந்த வேலையை செய்வதற்கு இன்னொரு தளமும் உள்ளது. அந்த தளத்திருக்கு சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
  • இதில் உங்களுடைய தளத்தின் முகவரி கொடுத்து அருகில் உள்ள START TEST என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • கிளிக் செய்தவுடன் உங்கள் தளம் ஸ்கேன் ஆகி உங்களுக்கு முடிவுகள் வரும். இதில் எந்தெந்த பகுதிகள் எவ்வளவுநேரம் எடுத்து கொண்டது என்ற செய்திகள் முடிவுகள் வரும் இதன் படி நம் தளங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
  • இந்த தளம் செல்ல லிங்க் - Webpage Test 
  டுடே லொள்ளு 
  Photobucket
   நீ வாங்குற பத்து அஞ்சி பிச்சைக்கு இது தேவையா? 
  அண்ணே ஒரு விளம்பரம்.

  9/17/2010 by சசிகுமார் · 13

  9/16/2010

  உங்கள் தளத்தை ஒரே நிமிடத்தில் 100+ Search Engineல் இணைக்க

  நாம் நம்முடைய பிளாக்கை பிரபல படுத்த பல எண்ணற்ற வழிகளை கையாள்கிறோம். அதில் முக்கியமானது இந்த SEO எனப்படும் தேடியதிரங்களில் நம் பதிவை இணைப்பது.  இணைய உலகில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தேடியந்திரங்கள் இருப்பது நாம் அறிந்ததே இவை அனைத்திலும் நாம் ஒவ்வொன்றாக தேடி தேடி நம் பிளாக்கை இணைப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம். அதை தவிர்க்கவே இந்த பதிவு.

  மேலும் வாசிக்க

  9/16/2010 by சசிகுமார் · 31

  9/15/2010

  நம் பிளாக்கினை தேடியந்திரங்கள் அறிவதற்கு வசதியாக மாற்ற

  நம்முடைய பதிவுகளை தமிழ் திரட்டிகளில் இணைத்து அதன் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் தமிழ் திரட்டிகளின் மூலம் நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும் தேடியந்திரங்களில்(SEO) மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன.
  தேடியந்திரங்களின் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வந்தால் நம் பிளாக்கின் ரேங்க் விரைவாக உயரும். ஆகையால் நம் பதிவை தேடியந்திரங்கள் மூலம் அறியபடுவதர்க்கு ஏற்ற மாதிரி செய்வது நம் கையில் தான் உள்ளது.

  தேடியந்தரங்களில் தேடுபவர்கள் அவர்களுக்கு  தேவையான  பதிவை தான் தேடுவார்கள். நம் தளத்தின் தலைப்பை  தேடமாட்டார்கள். ஆகையால் நம் தளத்தில் தலைப்பில் சிறிய மாற்றங்கள் செய்தால் மட்டுமே பதிவிற்கு முக்கியத்துவத்தை கொடுக்க முடியும்.
  கீழே உள்ள படத்தையும் பாருங்கள் 

  இந்த இரண்டு படங்களில் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் நம்முடைய பதிவிற்கு பிறகு நம்முடைய தலைப்பு வருகிறது இது தான் SEO க்கு ஏற்ற முறையாகும். இது போல் நம் பிளாக்கிலும் மாற்ற உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design
  • Edit Html -சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும். 
  <title><data:blog.pageTitle/></title>
  இந்த வரியை கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரியின் மீது REPLACE செய்து விடவும்.
  <b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'> <title><data:blog.title/></title> <b:else/> <title><data:blog.pageName/> | <data:blog.title/></title> </b:if>
  இப்பொழுது SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள்.  இந்த மாற்றங்கள் நம் தேடியந்தரங்களில் வருவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் நான் கண்டிப்பாக சொல்கிறேன் இந்த மாற்றங்கள் செய்த பிறகு உங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

  டுடே டெம்ப்ளேட் 


  Features: 2 columns, right sidebar, 4 columns in the footer, light, full widget, share buttons enabled.


  டுடே லொள்ளு 

  Photobucket

  என்ன பண்றது ஒரே கண்ணிலேயே மாத்தி மாத்தி பார்க்க வேண்டியிருக்கு.

  9/15/2010 by சசிகுமார் · 17

  9/14/2010

  புதியவர்களுக்காக: பிளாக்கர் பதிவில் எப்படி PDFபைல்கள் இணைப்பது

  நம்முடைய பிளாக்கர் பதிவில் எப்படி Pdf பைல்கள் இணைப்பது என்று பார்ப்போம். இந்த முறையில் pdf மட்டுமல்லாது .Pdf .Txt .doc .xls ஆகிய பைல்கள் இணைக்கலாம். நம்முடைய பிளாக்கரில் நேரடியாக டாகுமென்ட் பைல்கள் இணைக்கும் வசதி இல்லை ஆகையால் வேறு ஒரு தளத்தில் அப்லோட் செய்து விட்டு பின்பு அந்த பைலுக்கு இணைப்பு கொடுத்தால் மட்டுமே நம்முடைய பதிவில் அந்த டாகுமென்ட் பைல்கள் கொண்டு வரமுடியும்.  அதை எப்படி நம் பதிவில் கொண்டு வருவது என்று இங்கு பார்ப்போம்.

  மேலும் வாசிக்க

  9/14/2010 by சசிகுமார் · 11

  9/13/2010

  ஒரே கிளிக்கில் 150 சமூக தளங்களில் உங்கள் பயனர் பெயர்(User Name) நிலைப்பாட்டை அறிய

  நம் இணையத்தில் எவ்வளவோ நூற்றுகணக்கான சமூக வலைத்தளங்கள் உள்ளன. இதில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட தளங்களில் உறுப்பினர் ஆகி இருப்போம். நிறைய தளங்களில் பயனர் கணக்கு ஆகாமலும் இருப்போம். இப்படி இருக்கையில்  நம்முடைய பயனர் கணக்கு எந்தெந்த தளங்களில் எடுக்கப்பட்டுள்ளது அல்லது எந்தெந்த தளங்களில் எடுக்கப்படாமல் காலியாக உள்ளது. என்று அறிய ஒரு சூப்பர் தளம். ஒரே கிளிக்கில் சுமார் 70 தளங்களில் நம் பயனர் பெயரின் நிலைப்பாட்டை  அறிய ஒரு தளம் உள்ளது அந்த தளத்திருக்கு செல்ல பதிவின் கீழே லிங்க் கொடுத்துள்ளேன்.

  மேலும் வாசிக்க

  9/13/2010 by சசிகுமார் · 10

  9/10/2010

  உங்கள் கணினியை சுத்தம் செய்ய Ccleaner Latest version 2.35.1223

  அனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் 

  கணினி உபயோகிக்கும் பெரும்பாலானவர்களில் நம் கணினியை சுத்தம் செய்ய Ccleaner உபயோகித்து கொண்டிருக்கும். இது நம் கம்புட்டரில் உள்ள தேவையற்ற பைல்களையும் குப்பை தொட்டியில் உள்ள பைல்களையும் நீக்க பயன்படுகிறது. இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள் இருந்தாலும் நாம் ஏன் இந்த Ccleaner பயன் படுத்துகிறோம். அதற்காக நாம் அனைவரும் உபயோகிக்க விண்டும் என்று கீழே பார்ப்போம்.

  மேலும் வாசிக்க

  9/10/2010 by சசிகுமார் · 12