12/31/2010

உங்கள் ட்விட்டர் கணக்கின் அனைத்து விவரங்களையும் சுலபமாக டவுன்லோட் செய்ய

சமூக தளங்களில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது இந்த ட்விட்டர் தளம். இந்த தளத்தில் நம்மில் பெரும்பாலானாவர்கள் உறுப்பினர்களாகி நம்முடைய பிளாக்கின் tweets பகிர்ந்து கொள்கிறோம். மற்றும் இதில் இருந்து சில நண்பர்கள் நம்முடைய ட்விட்டர் கணக்கில் பாலோயர்ஸ் ஆவார்கள். மற்றும் நாமும் சில தளங்களில் பாலோயர்ஸ் ஆவோம். இந்த விவரங்களையும் மற்றும் Direct Messages, Followers, Favourites, Friends, Tweets போன்ற ஒட்டு மொத்த தகவல்களையும் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதுவும் மிக மிக சுலபமாக வெறும் இரண்டே நிமிடத்தில் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

12/31/2010 by சசிகுமார் · 14

12/30/2010

இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)

நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில் நாம் அனைவருக்கும் தெரிந்தது கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில் முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன். 

மேலும் வாசிக்க

12/30/2010 by சசிகுமார் · 8

முதல் படியை கடக்க வைத்த அனைவருக்கும் நன்றி

தமிழ்மண விருதுகள் போட்டியில் நான் மூன்று பிரிவுகளில் என் இடுகைகளை இணைத்து இருந்தேன். நானே எதிர் பார்க்கவில்லை என்னுடைய இடுகைகள் மூன்றும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் என்று. நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் கூறி இருந்ததை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இந்த நிலையை அடைய வைத்த அனைவருக்கும் நன்றி.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 12

12/29/2010

பதிவர்கள் செய்யும் அடிப்படை தவறுகள் - புதியவர்களுக்காக

அனைத்து பதிவர்களும் ஆசைபடும் ஒரு விஷயம் நம் பதிவுகள் பிரபலமடைய வேண்டும் அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும் என்பதே. பிரபலமடைவது என்பது மிக சுலபமான காரியமே ஆனால் இதற்காக நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். பொதுவாக சில பதிவர்கள் அவர்களுக்கே தெரியாமல் சில அடிப்படை தவறுகளை செய்து கொண்டு உள்ளனர். அந்த தவறுகளை நீங்கள் தவிர்த்தல் உங்கள் பிளாக் பிரபலமடைவதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் வாசிக்க

12/29/2010 by சசிகுமார் · 37

12/28/2010

கூகுள் குரோமில் பயனுள்ள நீட்சி- Scroll to Top Button

 கூகுள் குரோமில்  நிறைய வசதிகள் இருந்தாலும் சில வசதிகளுக்காக நாம் நீட்சியின் உதவியை நாடுவோம். அந்த வரிசையில் தற்போது நாம் காண இருப்பது Scroll to Top Button என்ற நீட்சியாகும். நாம் இணையத்தில் உலாவும் போது சில தளங்களில் இந்த விட்ஜெட் இணைக்க பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான தளங்களில் இந்த top பட்டன் இருக்காது. அது மாதிரி தளங்களில் நாம் கீழ் பகுதிக்கும் மேல் பகுதிக்கும் செல்ல சற்று சிரமமாக இருக்கும். இந்த குறையை போக்கவே இந்த நீட்சி.

மேலும் வாசிக்க

12/28/2010 by சசிகுமார் · 10

12/27/2010

பிளாக்கர் டிராப்டில் மிகவும் பயனுள்ள சூப்பர் வசதி

யாத்திரை நல்ல படியாக முடிந்தது. திரும்பவும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.


பிளாக்கர் உபயோகிக்கும் அனைவருக்கும் பிளாக்கர் டிராப்ட் பற்றி தெரிந்திருக்கும். பிளாக்கர் டிராப்ட் என்பது பிளாக்கரின் புதிய வசதிகளை சோதனை செய்து வாசகர்களிடம் வரவேற்ப்பை பெற்றால் மட்டுமே  இந்த வசதியை  நம் பிளாக்கர் தளத்தில் இந்த வசதியை சேர்ப்பார்கள். இது போன்று சோதனை முயற்சி செய்யவே இந்த தளம் உபயோகிக்க படுகிறது. இந்த வரிசையில் மிகவும் பயனுள்ள வசதியை நம் பிளாக்கர் தளம் சோதனை முயற்சியாக டிராப்ட் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அந்த வசதி என்பது Mobile Template என்ற வசதியாகும். 

மேலும் வாசிக்க

12/27/2010 by சசிகுமார் · 18

12/18/2010

இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழ்கின்றோம். ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணினி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகளை கொடுத்து உள்ளேன்.

மேலும் வாசிக்க

12/18/2010 by சசிகுமார் · 25

12/16/2010

நம் மெயிலுக்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி தடுப்பது

நாம் இணையத்தில் பல்வேறு தளங்களில் உள்ளே உள்ளே செல்லும் போது நம் விவரங்களை  கொடுக்கும் போது நம்முடைய மெயில் ஐடியையும்  கொடுப்போம். அப்படி கொடுத்த மெயில் ஐடிக்கு அந்த தளத்தில் இருந்து அவர்களின் விளம்பர செய்திகளை நம் மெயிலுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பார். ஒரு சில மெயில்களில் unsubscribe என்ற வசதி இருக்கும் அதன்மூலம் நாம் தடுத்து விடலாம் ஆனால் ஒருசில மெயில்களில் இந்த வசதி இருக்காது அது போன்ற மெயில்களை எப்படி நாம் unsubscribe செய்வது என்று இங்கு பார்ப்போம்.

மேலும் வாசிக்க

12/16/2010 by சசிகுமார் · 18

12/15/2010

ஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore deleted Gmail Contacts

பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் வசதியை பயன்படுத்துகிறோம். முன்பு இதில் நாம் தவறுதலாக நம்முடைய காண்டக்ட் லிஸ்ட்டை ஒட்டுமொத்தமாக டெலீட் செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த காண்டக்ட் லிஸ்ட் திரும்ப பெற மிகவும் சிரமம் பட  வேண்டி இருக்கும்.  சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

மேலும் வாசிக்க

12/15/2010 by சசிகுமார் · 13

12/14/2010

ஒரே நேரத்தில் இரண்டு தளங்களின் ஓபன் ஆகும் நேரத்தை ஒப்பிட்டு பார்க்க


நாம் இணையத்தில் ஒவ்வொரு தளங்களை ஓபன் செய்யும் போது அவைகள் அந்த தளத்தில் இருக்கும் விட்ஜெட்டுக்களின் அளவை பொருத்து ஓபன் ஆகும் ஒரு சில தளங்கள் ஓபன் ஆக மிகவும் தாமதமாகின்றன இப்படி இரண்டு தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே. 

மேலும் வாசிக்க

12/14/2010 by சசிகுமார் · 14

12/13/2010

பிளாக்கரில் புது வசதி- விரும்பிய பகுதியை Feedburner மெயிலுக்கு அனுப்பலாம்

நாம் நம்முடைய பிளாக்கின் பதிவுகளை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள feedburner வழங்கும் Subscribe by Email என்ற வசதியின் மூலம் நம் வாசகர்களின் மெயிலுக்கு நம் பிளாக் அப்டேட்ஸ் போகும். இப்படி அனுப்பும் போது மற்றவர்களின் மெயிலுக்கு என்னுடைய முழுபதிவும் சென்று விட்டால் அவர்கள் என் தளத்திற்கு வரவே மாட்டார்கள் மெயிலிலேயே அனைத்தையும் படித்து விடுவார்கள் என்று நம்முடைய பதிவின் Site Feed-  Short- என்ற வசதியை இதுவரை பயன்படுத்தி வந்தோம்.

மேலும் வாசிக்க

12/13/2010 by சசிகுமார் · 18

12/10/2010

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- பிளாக்கில் விதவிதமான டிசைன்கள் விழ வைக்க

நம்முடைய பிளாக்கை அழகாக வைத்து இருப்பது நம்முடைய கடமையாகும். அழகுக்கு அழகு சேர்க்க நம்முடைய பிளாக்கில் சில வித்தியாசமான டிசைன்களை தூவி விடுவோம் வாருங்கள். கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டு இருப்பதால் சில கிருஸ்துமஸ் டிசைன்களை இங்கு காண்போம்.

மேலும் வாசிக்க

12/10/2010 by சசிகுமார் · 20

12/09/2010

ஆடியோ பைல்களை நமக்கு தேவையான அளவிற்கு வெட்டி ரிங்டோனாக உபயோகிக்க

நேற்றைய பதிவில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மற்றும் போனில் தொடர்பு கொண்டு பேசிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

போன் இல்லாத நபரே இல்லை என்ற நிலையை நோக்கி நம் நாடு வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை/ கூலி தொழிலாளி முதல் நம் நாட்டு ஜனாதிபதி வரை/ பள்ளி படிக்கும் சிறுவர் முதல் IAS படிக்கும் அனைவரிடமும் இந்த செல்மோகம் பரவி விட்டது. இதில் நமக்கு விருப்படி ரிங்க்டோன் வைத்து மகிழ்வோம். நாம் முழு பாடலையும் ரிங்க்டோன் ஆக செட் செய்யும் வசதி இருந்தாலும் இப்படி செட் செய்யும் போது நமக்கு ஏதேனும் அழைப்பு வந்தால் அந்த பாடலில் உள்ள இசை முதலில் வந்து அடுத்து பாட்டு வருவதற்குள் அந்த அழைப்பு துண்டிக்கப்படும். மற்றும் நமக்கு தேவையான பகுதியை மட்டும் ஒலிக்க செய்ய முடியாது. ஆகவே நாம் எப்படி முழு பாடலில் இருந்து நமக்கு தேவையான பகுதியை பட்டும் வெட்டுவது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

12/09/2010 by சசிகுமார் · 16

12/08/2010

இந்த ஒரு வருடத்தில் வந்தேமாதரம்

இன்றோடு வந்தேமாதரம் பிளாக் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. விளையாட்டாக தொடங்கிய இந்த வந்தேமாதரம் தளம் வாசகர்களாகிய உங்களால் மிக சிறந்த வளர்ச்சியை பெற்று உள்ளது.  பெரிய  பெரிய ஆசான்கள், வல்லுனர்கள் உள்ள இந்த பதிவுலகத்தில் நாமும் ஒரு முத்திரை பதிப்பது என்பது லேசான காரியமா என்ன.  இந்த வளர்ச்சிக்கு வாசகர்களாகிய தாங்களும் , வாசகர்களுக்கு வழிகாட்டி கொண்டிருக்கும் தமிழ் திரட்டிகளுமே இதற்கு முக்கிய காரணம்.

மேலும் வாசிக்க

12/08/2010 by சசிகுமார் · 57

தமிழ்10 ஓட்டு பட்டையில் பிரச்சினையா

 நம்முடைய பதிவுகளை உலகறிய செய்யும் திரட்டிகளில் மூன்றாவது இடத்தை (அலெக்சா ரேங்க் படி) பிடித்துள்ள தமிழ்10 திரட்டியில் கடந்த சில வாரங்களாக நுழைவதிலும் ஓட்டு பட்டையிலும் பிரச்சினை வந்து கொண்டு உள்ளது. காரணம் அந்த தளத்தின் URL www.tamil10.com/submit என்பதில் இருந்து www.tamil10.com என்று சுருக்கி உள்ளனர். ஆதலால் தான் இந்த பிரச்சினை நிலவுகிறது.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 7

12/07/2010

அமெரிக்காவுக்கு ஆப்பு: விக்கிலீக்ஸ் தற்போது 1885 தளங்களில்

படிப்பதற்கே ஆச்சரியமாக உள்ளதா அனைத்தும் உண்மை. அமெரிக்காவின் அட்டூழியங்களை வெளிகொணர்ந்த விக்கிலீக்ஸ் இணையம் தற்போது 729 தளங்களில் தான் சேவையை வழங்குகிறது. விக்கிலீக்ஸ் மோதுவது ஏதோ ஒரு சிறிய அமைப்பின் மீது அல்ல ஒரு பெரிய வல்லரசு நாட்டுடன் பெரிய நாடுகளே எதிர்த்து பேச அஞ்சும் நிலையில் ஒரு இணைய தளம் அவர்களின் அராஜகத்தை வெளி கொண்டு வருகிறது. இது வல்லவோ தைரியம்.
இனி அமெரிக்கா இந்த 729 தளத்தின் செர்வர்களை கண்டறிந்து அவைகளை முடக்குவதர்க்குள் இன்னும் 7000 தளங்களை உருவாக்கும் முனைப்பில் இந்த விக்கிலீக்ஸ். ஆகவே அமெரிக்காவுக்கு ஆப்பு என்பது உறுதியாகிய ஒன்று.

மேலும் வாசிக்க

12/07/2010 by சசிகுமார் · 27

12/06/2010

ஆன்லைனில் யு டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 20 இணைய தளங்கள்

இணையத்தில் வீடியோக்கள் கொட்டி கிடக்கும் இடம் இந்த யு டியூப் இணைத்தளம். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி இதில் இல்லை ஆனால் சில மென்பொருட்களை நம் கணினியில் நிறுவினால் இந்த வீடியோக்களை டௌன்லோட் செய்யலாம் ஆனால் இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவுவதால் நம் கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று பயமாக உள்ளதா. அப்படி உள்ளவர்கள் ஆன்லைனிலேயே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

12/06/2010 by சசிகுமார் · 22

12/04/2010

அமெரிக்காவின் அத்துமீறல்களை துகிலுரித்த விக்கி லீக்ஸ் தளம் முடக்க பட்டது

கடந்த மாதம் அமெரிக்காவுக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். தான் உத்தமன் போல ஊருக்கெல்லாம் நாட்டாமை வேலையை பார்த்து கொண்டிருந்த அமெரிக்காவின் உள்நோக்கம் அனைவர்க்கும் தெரிந்ததே. ஆனால் அதை வெளியிட எந்த ஆவணங்களும் இல்லாததால் அனைத்து நாடுகளும் மவுனம் காத்து வந்தது.
இந்த அமெரிக்காவின் நாடகத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியது விக்கி லீக்ஸ் எந்த இணைய தளம். 

மேலும் வாசிக்க

12/04/2010 by சசிகுமார் · 14

உங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிருஸ்துமஸ் மரங்கள்

கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் தங்கள் வீடுகளை அழகு படுத்தி கொண்டிருக்கிறீர்களா. இதே போல உங்கள் கணினியையும் அழகு படுத்தலாமே. தற்போது 2011 ஆம் ஆண்டிற்கான நவீன வகை அனிமேட்டட் கிறிஸ்துமஸ் மரங்களை நம் கணினியில் நிறுவி நம் கணினியையும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில்  சேர்த்து கொள்ளலாமே.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 5

12/03/2010

விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்

கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும்  மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். இவைகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பயன் பெறவும்.

மேலும் வாசிக்க

12/03/2010 by சசிகுமார் · 29

12/02/2010

அனைத்து கணினிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்- Auto Shutdown

இன்றைய உலகில் கணினி உபயோகிக்காத இடமே இல்லை. சிறிய கடைகள் முதல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் வரை உபயோகித்து கொண்டிருக்கும் இந்த கணினியின் செயல் பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நம் கணினியில் நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நம் கணினியில் அவசியமாகிறது.

மேலும் வாசிக்க

12/02/2010 by சசிகுமார் · 20

கூகுள் பிக்காசாவில் போல்டர்கள் Auto Scaning ஆவதை தடுக்க

கூகுளின் வெளியீடான பிக்காசா மிகவும் பயனுள்ள மென்பொருளாகும். இதன் மூலம் நம் கணினியில் உள்ள படங்களை அழகு படுத்தி நேரடியாக இணைய தளங்களுக்கு இதில் இருந்தே அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது. என்ன தான் பயன்கள் இருந்தாலும் நாம் இந்த பிகாசாவை ஒவ்வொரு முறை ஓபன் செய்யும் போதும் அது தானகவே நம் கணினியில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கும். இப்படி நம் கணினியில் உள்ள ஒவ்வொரு போல்டராக ஸ்கேன் செய்யும் இது நமக்கு மிகவும் எரிச்சலை தரும் இதனாலேயே இந்த பிகாசாவை ஓபன் செய்வதை பல பேர் தவிர்த்து விடுகின்றனர்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 16

12/01/2010

கூகுள் குரோமில் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions

இணைய உலவிகளில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்த கூகுள் குரோம் வெகு சீக்கிரம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். குக்கீஸ் என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்க படும் ஒரு சிறிய அப்ளிகேசன் ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்தி கொள்ள இவைகள் பயன் படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.

மேலும் வாசிக்க

12/01/2010 by சசிகுமார் · 16

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)