9/03/2011

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும். 

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
நண்பர்கள் இந்த பதிவு தற்பொழுது உங்களுக்கு உபயோகப்படாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் தேவைப்படும். புக்மார்க் செய்து  கொள்ளுங்கள்.



பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற

25 comments:

  1. ன்னா புது டைம்ல போஸ்ட்டிங்க்? சசி எங்கேயோ வெளில கிளம்பறாப்ல.. மாப்ள கருண்.. விஜாரி ஹி ஹி

    ReplyDelete
  2. indli அட்டாச் ஆன மாதிரி காட்டலை. அட்டாச் பண்ணூனா ஆல்ரெடி அட்டாச்டுன்னு வருது அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. மாப்ள பகிர்வுக்கு நன்றிய்யா!

    ReplyDelete
  4. நண்பரே,
    நல்ல பதிவு இதேபோன்று இன்னும் நிறைய தகவல்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. CMD உடன் விளையாட வைக்கும் சூப்பரான பதிவு பாஸ்,

    ReplyDelete
  6. வைரஸ் அடித்த பென் டிரைவினை மீள் பாவனை செய்வதற்கேற்ற சூப்பரான ஐடியா பாஸ்.

    ReplyDelete
  7. file scr format ல மாறிட்டா என்ன பண்றது ?

    ReplyDelete
  8. உபயோகமான தகவல் .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  9. Really useful information...bookmarked

    ReplyDelete
  10. நன்றி நண்பரே.. இத்தனை நாள் வைரஸ் வந்தவுடன் format செய்து விட்டேன்.தகவல்களையும் இழந்துவிட்டேன்

    இனி பிரச்சினையில்லை

    நன்றி

    நட்புடன்
    சம்ப்தகுமார்

    ReplyDelete
  11. நன்றி நண்பரே !!!!

    ReplyDelete
  12. பயனுள்ள பதிவு நன்றி.

    ReplyDelete
  13. இனி எந்த வைரஸ் வந்தாலென்ன .சசியிருக்க பயம் ஏன்?

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  15. //நண்பர்கள் இந்த பதிவு தற்பொழுது உங்களுக்கு உபயோகப்படாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் தேவைப்படும். புக்மார்க் செய்து கொள்ளுங்கள்//

    100% கரெக்ட்!

    ReplyDelete
  16. எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு

    சசி

    ReplyDelete
  17. பயனுள்ள பதிவு சசி.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. என் நண்பனுக்கு நிச்சயம் உதவும்....

    ReplyDelete
  19. உங்கள் தகவல் நன்றி

    ReplyDelete
  20. Does it suitable for memory card?

    ReplyDelete