9/21/2011

சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுக படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ். இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது. சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது. சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம். (அறியாதவர்கள் வந்தேமாதரத்தின் இணைய வரலாற்றில் கூகுள் பிளசின் மெகா சாதனைமுந்தைய பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.)

சோதனை தளமாக இருந்ததால் பல வாசகர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு யார் invite தேவையில்லை கூகுளில் ஒரு அக்கௌன்ட் இருந்தாலே போதும் நீங்கள் கூகுள் பிளஸ் வசதியை உபயோகிக்க முடியும். 

கூகுள் பிளஸ் சேவையை பெற www.google.com/+ இந்த தளத்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்களை கொடுத்து கூகுள் தளத்தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களின் தகவல்களையோ அனுபவத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதிய வசதிகள்:
Hangouts: more places, more people, more to do 
Hangout எனப்படும் வீடியோ காலிங்கில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். மொபைலில் ஹாங்கவுட் வசதி ஆனால் Android V2.3 உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை தற்பொழுது பெற முடியும். விரைவில் ios மொபைல்களுக்கும் வர இருக்கிறது. மேலும் சில வசதிகளை இந்த Hangout பிரிவில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவைகளை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம். 

+Search : Find the people and posts you care about.
கூகுள் பிளஸ் தேடியந்திரத்தில் மேலும் சில வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேடி கொள்ளலாம் உதாரணமாக சமையல் பற்றி ஏதாவது டிப்ஸ் வேண்டுமா அந்த பதிவுகளை மட்டும் தனியாக பிரித்து கொடுக்கும் அல்லது ஏதேனும் மருத்துவக்குறிப்பு வேண்டுமா தேடினால் கிடைக்கும் இப்படி உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் சுலபமாக தேடி கொள்ளலாம். 


மற்றும் இதில் சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் கூகுள் பிளஸ் வெளிவந்து சுமார் 90 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் கூகுள் பிளஸ் 91 புதிய வசதிகளை வாசகர்களுக்கு அளித்துள்ளதாம். இந்த புதிய வசதிகளை வெளியிட்ட தேதி வாரியாக பார்க்க இந்த லிங்கில் Google New Features செல்லவும். மற்றும் கூகுள் பிளசில் வெளிவர இருக்கும் புதிய வசதிகளையும் ஏற்க்கனவே வந்த வசதிகள் பற்றியும் விளக்கமாக அறிய இந்த லிங்கில் Google plus Upcoming Featuresசெல்லவும்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும். 


Tech Shortly



17 Responses to “சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்”

தமிழ்வாசி - Prakash சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 4:49 pm

பகிர்வுக்கு நன்றி மாப்ளே


விக்கியுலகம் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 4:50 pm

thank you maapla!


சி.பி.செந்தில்குமார் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 4:54 pm

ரைட்டு...


சம்பத்குமார் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 5:09 pm

thanks for sharing


நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 5:12 pm

உபயோகமான பதிவு .


MHM Nimzath சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 5:25 pm

பயனுள்ள பதிவு


MHM Nimzath சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 5:28 pm

//கூகுள் பிளஸ் சேவையை பெற www.google.com/+ இந்த தளத்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்களை கொடுத்து கூகுள் தளத்தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களின் தகவல்களையோ அனுபவத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

சரிப்பா...

Screen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது


# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 7:36 pm

ரைட்டு...

அவ்வளவும் நமக்குதான்...


Arun Kumar சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 8:22 pm

பகிர்வுக்கு நன்றி சசி சார்


எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 8:45 pm

useful


IlayaDhasan சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 9:59 pm

முக நூலை முந்துமா?

சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?

பெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக்

முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா


S.Menaga சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 11:02 pm

உபயோகமான பதிவு!!


GEETHA ACHAL சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 7:10 am

மிகவும் பயனுள்ள பதிவு....


நிரூபன் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 7:24 am

பாஸ்..
கூகிள் ப்ளஸ், பேஸ்புக் போட்டி போட்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தினாலும் நமக்கு ஜாலி தானே..


மாய உலகம் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 10:45 am

நல்ல தகவல் நண்பரே .. நன்றி


Kannan சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 11:33 am

பயன்னுள்ள பதிவு.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com


வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 3:38 pm

இன்னமும் முகநூல் தான் விருப்பமாக இருக்கிறது. ஒரு வேளை பழக்கமோ; இல்லை அதன் சிறப்பம்சங்களை (நான்) சரிவர பயன்படுத்தவில்லையா - தெரியவில்லை.