9/22/2011

கூகுள்/கேபிள் சங்கர்/சுரேகா/நன்றி/பேஸ்புக்/Tech Shortly

கூகுள்: 
இணையத்தில் கலக்கி கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதியதாக Google Wallet என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த மென்பொருளை Spirint Nexus 4G மொபைல்களில் உபயோகிக்கலாம். Citi bank நிறுவனத்தின் Master card சப்போர்ட் செய்கிறது. . இந்த வசதி இருந்தால் என்ன பண்ணலாம் என கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



தற்பொழுது இந்த வசதி அமெரிக்காவில் மட்டும் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வரலாம்.


சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னுடைய ஆங்கில தளமான Tech Shortly. இந்த தளத்திலும் கணினி சம்பந்தமாகவும்,இணையம் சம்பந்தமாகவும், மென்பொருட்கள் சம்பந்தமாகவும் பதிவுகளை இட்டு வருகிறேன். நீங்கள் வந்தேமாதரம் தளத்திற்கு கொடுத்த மேலான ஆதரவை www.techshortly.com தளத்திற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நண்பர்கள் அங்கு உள்ள Followers,Facebook Fan box, Email Subscribe போன்றவற்றில் உறுப்பினர் ஆகிவிட்டால் புதிய பதிவுகள் உங்களை தேடி வரும். 

கேபிள் சங்கர்,சுரேகா-நன்றி
பதிவுலகில் இவர்களை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பதிவுலகில் வெகு நாட்களாக வெற்றி நடை போட்டு கொண்டு இருப்பவர்கள். தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து பேஸ்புக்கில் ஒரு குரூப் உருவாக்கி உள்ளனர். இதற்க்கு "கேட்டால் கிடைக்கும் ASK" என பெயரிட்டு உள்ளனர். 

எதுக்கு இந்த க்ரூப் என நீங்கள் கேட்கலாம் ஒரு சில நேரத்தில் நம்மை சுற்றியே பல தவறுகள் நடக்கும் கடைக்காரன் MRP விட அதிகமாக பணம் கேட்கலாம், பஸ்சில் கண்டக்டர் மீத சில்லறை தராமல் இருக்கலாம், ஹோட்டல்களில் உணவு தரமற்று இருக்கலாம் இப்படி ஏதாவது பல தவறுகள் நடக்கும். அது போன்ற நேரத்தில் நீங்கள் தவறை தட்டி கேட்பீர்கள் ஆனால் கடைக்காரனின் உனக்கு வேணாம்னா கிளம்பு என்று தெனாவெட்டாக பதில் சொல்லுவான். 

நீங்கள் சண்டை போட்டு கொண்டிருக்கும் பொழுதே அருகில் இருப்பவர் கூடுதல் விலை கொடுத்து அந்த பொருளை வாங்கி கொண்டு செல்வார்கள். நீங்கள் தனியாக அங்கே கத்திகொண்டிருக்க வேண்டியது தான். அது போன்ற தவறுகளை தட்டி கேட்க வந்துள்ளது தான் "கேட்டால் கிடைக்கும் ASK" இதில் சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு நேரும் பிரச்சினையை பகிருங்கள். உங்களுக்காக அனைவரும் குரல் கொடுப்பார்கள். அதற்க்கான தீர்வும் கிடைக்கும். ஆக வந்தேமாதரம் வாசகர்களும் "கேட்டால் கிடைக்கும் ASK" க்ரூப்பில் இணைந்து உங்கள் பிரச்சினையை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் Ravi Nag என்பவர் இதில் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவர் மேலும் பல தகவலை பகிர வேண்டும். 

மேலும் இந்த குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் புதியதாக சேரப்போகும் அனைவருக்கும் மிக்க நன்றி.



18 Responses to “கூகுள்/கேபிள் சங்கர்/சுரேகா/நன்றி/பேஸ்புக்/Tech Shortly”

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 11:20 am

முதல் நன்றி..

ask செய்யும் பணி அபாரமானது..
அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்..


விக்கியுலகம் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 11:26 am

மாப்ள பல விஷயங்களை தெரியப்படுத்திய பதிவுக்கு நன்றி!


"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 11:58 am

கலந்துப்போம்


"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 11:58 am

நல்ல தகவல்


ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 12:27 pm

நண்பா! பல தகவல்களை அறிந்துகொண்டேன்! அந்தக் குறூப்பில் நானும் இணையலாமா?


# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 12:47 pm

உண்மையில் அது சிறந்தப்பணி..
அவர்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்...


தற்ப்போது கற்க்கும் பழக்கம் குறைந்து வரும் இந்நிலையில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்


# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 12:48 pm

சில தவறுகள் நடைப்பெரும் போது அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பதிவர் கூட்டத்திலே விவாதித்தார்கள்...

வாழ்த்துக்கள்...


தமிழ் உதயம் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 12:59 pm

உதவிக்கரம். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.


நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 1:07 pm

தகவலுக்கு நன்றி .


கந்தசாமி. சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 2:06 pm

கேட்டால் கிடைக்கும் - நல்ல முயற்சி


NAAI-NAKKS சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 2:26 pm

Thanks for shaering .....


கார்த்தி கேயனி சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 4:26 pm

கேட்டால் கிடைக்கும் - நல்ல முயற்சி. பகிர்வுக்கு நன்றி


Feroz சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 4:38 pm

அன்பின் சசி, பேஸ்புக்கில் லைக் போடும் போதும் கமென்ட் போடும் போதும் அவா்களை தவிர மற்றவா்களுக்கு நோட்டிபிக்கேசன் வரமால் எப்படி தடுப்பது என்பதை அறிய தாருங்களேன். தோழமையுடன்


சசிகுமார் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 5:02 pm

@Feroz

http://www.vandhemadharam.com/2011/09/smart-friend-list.html இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் பாருங்கள். மற்றும் நீங்கள் பிளாக்கில் உள்ள பேஸ்புக் கமென்ட் பெட்டியில் கமெண்ட் போடும் பொழுது அதில் Post to Facebook டிக் மார்க் நீக்கி விட்டால் பேஸ்புக்கில் அப்டேட் ஆகாது.


தமிழ்வாசி - Prakash சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 8:11 pm

அவர்களுடன் இணைந்து விடலாம்,


Feroz சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 9:48 pm

thanks brother


நிரூபன் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 8:47 am

நானும் இணைந்து விட்டேன் பாஸ்.


மோகன் குமார் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 9:21 am

கொஞ்ச நாளாக தான் உனகள் பதிவை தொடர்கிறேன். பலருக்கும் பயனுள்ள தொழில் நுட்ப விஷயங்கள் எளிமையாக சொல்கிறீர்கள். அருமை தொடருங்கள்