Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

குறைந்த விலை ஆகாஷ்(Tablet) கணினிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய- Aakash Tablet with Android2.2

இந்தியாவில் முதன் முதலாக Datawind நிறுவனத்தினர் மிகக்குறைந்த விலையே உள்ள Tablet கணினிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்க்கு ஆகாஷ் என்று பெயரிட்டு உள்ளனர். Datawind நிறுவனத்தினர் ரூபாய் 2,250 விலையில் 10,000 கணினிகளை Indian National Mission for Education என்ற அமைப்புக்கு வழங்கி உள்ளனர். அந்த கணினிகளை IIT, REC, BITS களில் பயிலும் மாணவர்கள் உபயோகப்படுத்தி கொண்டு உள்ளனர். இப்பொழுது Datawind நிறுவனத்தினர் இந்த Tablet கணினிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிட உள்ளனர். இதன் விலை Rs 3,000 என நிரனயிதுள்ளனர். இதனுடன் Rs. 400 மதிப்புள்ள கீபோர்ட் ஒன்றும் வழங்குகின்றனர். ஆக மொத்த விலை Rs. 3,400 ஆகும். இதன் சிறப்பம்சங்களும் ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்றும் கீழே காணலாம்.


சிறப்பம்சங்கள்:
  • 7" அளவுடைய இதில் Android2.2 இயங்கு தளங்கள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • முழுவதும் தொடு திரை(touch screen) வசதியுடன் ஆனது.
  • இதில் மாதத்திற்கு 2GB உபயோகப்படுத்த வெறும் Rs. 98 செலுத்தும் வண்ணம் Data Plan அமைக்கப்பட்டுள்ளது.
  • Wi-Fi, USB Port  மற்றும் Micro-SD ஆகிய வசதி உள்ளது.
  • 75MB அளவுள்ள பைலை வெறும் 25MB பைலாக மாற்றி சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் இதில் உள்ளது. 

ஆன்லைனில் முன்பதிவு செய்ய:
Datawind நிறுவனம் இந்த வகை கணினிகளை அடுத்த மாத இறுதிக்குள் இந்தியாவில் வெளியிட உள்ளது. சுமார் 250,000 கணினிகளை ஒரு வருட இலக்காக நிர்ணயித்தது ஆனால் இதுவரைக்குமே சுமார் 300,000 கணினிகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாம். நாளுக்கு நாள் முன்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறதாம். இந்திய மக்களின் அமோக வரவேற்பை பெற்றதனால் இலக்கை 500,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகிறது.



இந்த கணினிகளை முன்பதிவு செய்ய இந்த லிங்கில் Aakash Tablet கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு ஆகாஷ் கணினியின் தளம் ஓபன் ஆகும் அதில் வலது பக்க கீழே Enquiry Now என்ற ஒரு பகுதி இருக்கும் அதில் உங்கள் சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள submit என்ற பட்டனை அழுத்தவும்.


அவ்வளவு தான் உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்படும். உறுதி செய்ய உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள் அந்த மெயிலில் கணினியை பற்றி சில விவரங்களும் அனுப்புவார்கள். 

Toll free: 1800 180 2180 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆகாஷ் tablet கணினிகளை போன் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

பள்ளிகளுக்கோ, தங்களின் நிறுவனத்திற்கோ மொத்தமாக இந்த ஆகாஷ் கணினிகள் வாங்க எண்ணினால் erp@datawind.com என்ற ஈமெயில் ஐடியில் தொடர்பு கொண்டால் மானிய விலையில் கிடைக்கலாம்.

Techshortly

TeamViewer 7 Beta released for Windows [Download Link]

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து பதிவு பலரை சென்றடைய உதவுங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

  1. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  2. நன்றிங்கோ...தகவலுக்கு!

    ReplyDelete
  3. வணக்கம் மாப்பு,
    தாங்கள் நலமாக இருக்கிறீங்களா?
    வேலை பிசி காரணமாக கடந்த வாரம் முழுவதும் வலைப் பக்கம் வர முடியலை!

    உங்கள் அன்பிற்கு, ஆதரவிற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. மாப்பு, நீங்க என்ன எலக்சனில நிற்கப் போறீங்களா?

    நான் நெனைச்சேன் இலவச கணினி சசியும் குடுக்கப் போறார் என்று!

    ஹே...ஹே..
    நல்லதோர் பதிவு பாஸ்!

    ReplyDelete
  5. இதில் மாதத்திற்கு 2GB உபயோகப்படுத்த வெறும் Rs. 98 செலுத்தும் வண்ணம் Data Plan அமைக்கப்பட்டுள்ளது.

    -----இந்த வரிகளை தெளிவு படுத்தவும்...
    அதாவது இவர்களி சிபாரிசு செய்யும் data plan என்று புரிந்து கொள்ள வேண்டுமா... மடிக் கணினி வகைதானே...

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி நண்பரே

    தமிழ் மணம் 6

    ReplyDelete
  7. @BADRINATH

    நண்பரே இந்த இணைய உபயோகம் இதில் சேர்த்து தரப்படும். இது அடிப்படை மட்டுமே தேவை என்றால் நாம் மாற்றி கொள்ளலாம். விற்பனைக்கு வந்தால் தான் இதன் விவரங்கள் அனைத்தும் தெரிய வரும்.

    ReplyDelete
  8. காசு கொடுக்க தேவை இல்லையா?

    ReplyDelete
  9. இது Aircell கனைக்சனுடன் கிடைக்கும் மாதம் 99 பிளானில்
    Relinceம் கொடுக்கிறார்கள் குறைந்தவிலையில்
    பார்தியுடன் இனைந்து...

    ReplyDelete
  10. சிறப்பு இதனால் பலர் பயனடைவார்கள்

    ReplyDelete
  11. வரவேற்பு பெற்றதில் ஆச்சர்யம் இல்லை.பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  12. மிக்க நன்றீங்க ஆனால் நம்மளுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரதே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

    ReplyDelete
  13. enquiry nu thana pottu iruku registration nu podalie. aakash details visarikarathukana form athu. registrationku illai

    ReplyDelete
  14. நன்றி!

    my site http://skumar-computer-tips.blogspot.com

    இன்று நீ தலை குனிந்து பார் நாளை பலர் உன்னை தலை நிமிர்ந்து பார்க்கச் செய்வேன் இப்படிக்கு 'புத்தகம்'

    ReplyDelete
  15. நன்றி!

    my site
    www.skumar-computer-tips.blogspot.com

    இன்று நீ தலை குனிந்து பார் நாளை பலர் உன்னை தலை நிமிர்ந்து பார்க்கச் செய்வேன் இப்படிக்கு 'புத்தகம்'

    ReplyDelete
  16. ungalin nalla pakirvuku mikka nanri nanbare

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press