6/30/2011

கூகிளுடன் இந்திய அரசு மோதல்

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

6/30/2011 by சசிகுமார் · 11

6/29/2011

புத்தம் புதிய தமிழ் யுனிகோட் எழுதி மற்றும் கன்வெர்ட்டர்

 கணினியில் தமிழ் எழுத நாம் பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறோம். பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்தி தமிழில் எழுதி கொண்டிருக்கிறோம். இந்த முறையில் இன்னும் ஒரு புதிய தமிழ் UNICODE எழுதி அறிமுகப் படுதப்பட்டுள்ளது. இந்த எழுதியில் உள்ள சிறப்பம்சம் கன்வெர்டரும் இதில் உள்ளது உள்ளது. அதாவது பாமினி, அமுதம் போன்ற எழுத்துருக்களில் எழுதி அதை யுனிகோடாக மாற்றி கொள்ளும் வசதி இதில் உள்ளது.

மேலும் வாசிக்க

6/29/2011 by சசிகுமார் · 14

6/28/2011

ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்

வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு சென்றாலும் கூட்டம் எங்கு பார்த்தாலும் கூட்டம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதற்குள் நம்மை கசக்கி பிழிந்து விடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயணம் செய்ய மற்ற வாகனங்களை விட ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர்.  கட்டணமும் குறைவு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லலாம் மற்றும் இரவு முழுவதும் எந்த வித பிரச்சினையுமின்றி தூங்கி கொண்டே செல்லலாம் என்ற பல காரணங்களால் மக்கள் அனைவரும் ரெயிலில் செல்வதை விரும்புகின்றனர். 

மேலும் வாசிக்க

6/28/2011 by சசிகுமார் · 17

6/27/2011

மே பதினேழு இயக்கத்திற்கு என் நன்றியோடு ஒரு வேண்டுகோள் மற்றும் பதிவர்கள் சந்திப்பு

அரக்கர்களால் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட நம் ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று ஜூன் 26 -ல் மே பதினேழு இயக்கம் மெரினாவில் கண்ணகி சிலை அருகே மெழுகுவர்த்தி பேரணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததால் நானும் கரூண், சௌந்தர், மற்றும் சிவக்குமார் ஆகிய நான்குபேரும் சென்ட்ரலில் உள்ள அஞ்சப்பரில் லைட்டா சாப்பிட்டு (நம்புங்க லைட் தான்) அங்கிருந்து ஒரு ஆட்டோ புடிச்சி கண்ணகி சிலை போனோம். (ஒரு ஆட்டோக்காரன் அஞ்சப்பர்ல இருந்து வெளிய வந்த எங்கள என்ன நெனச்சானோ தெரியல கண்ணகி சிலை போறதுக்கு 100 ரூபாய் கேட்டான். ங்கொய்யால எங்க கிட்டயேவான்னு சொல்லிட்டு அவனுக்கு டாட்டா சொல்லி வேறு ஆட்டோ புடிச்சோம்)

மேலும் வாசிக்க

6/27/2011 by சசிகுமார் · 33

6/25/2011

புதுப்பொலிவுடன் வந்தாச்சு பயர்பாக்ஸ் 5 டவுன்லோட் செய்ய

நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். இதில் பயர்பாக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணினி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பாக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும். 

மேலும் வாசிக்க

6/25/2011 by சசிகுமார் · 13

6/24/2011

மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை புதிய கண்டுபிடிப்புகள்

உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் வாசிக்க

6/24/2011 by சசிகுமார் · 12

6/23/2011

தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய வசதி

கூகுள் இணையத்தின் ஜாம்பவான் அடிக்கடி பல்வேறு வசதிகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும். அந்த வகையில் தமிழர்கள் உட்பட மேலும் ஐந்து மொழிகளை Google Translate பகுதியில் சேர்த்து  பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளித்துள்ளது. இதற்க்கு முன்னர் இந்த Google Translate பகுதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இப்பொழுது அதிகரித்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற ஐந்து மொழிகளுக்கு கூகுளின் இந்த translate வசதி புகுத்தப்பட்டுள்ளது.


மேலும் வாசிக்க

6/23/2011 by சசிகுமார் · 19

6/22/2011

பிளாக்கில் புதிய அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் இணைக்க

 பேஸ்புக் கூகுளுக்கு இணையாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு சமூக இணைய தளம். இதில் உள்ள பல எண்ணற்ற வசதிகளால் பேஸ்புக் தளம் பெரும்பாலானவர்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றது. சிலர் காலையில் எழுந்து காப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ இந்த பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் இருக்க மாட்டார்கள். இந்த தளம் பதிவர்களுக்கு பல பயனுள்ள விட்ஜெட்டுக்களை வழங்கி வருகிறது. Like Button , Like Box, Send Button இன்னும் பல வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வசதிகளில் நாம் புதிய வகை அனிமேட்டட் Like Box விட்ஜெட் எப்படி நம் பிளாக்கில் இணைப்பது  என காண்போம்.

மேலும் வாசிக்க

6/22/2011 by சசிகுமார் · 20

6/21/2011

ஆன்லைனில் MP3 பைல்களை சுலபமாக வெட்ட - Online free MP3 cutter

ஆடியோ பைல்கள் பெரும்பாலும் MP3 வடிவிலேயே நம்மிடம் இருக்கும். இந்த வகை பைல்கள் நம்முடைய மொபைல்களிலும் பெரும்பாலும் வைத்திருப்போம். நம்மிடம் இருக்கும் MP3 பைல்கள் நீண்டதாக இருக்கும். இதில் குறிப்பிட்ட சிறு பகுதியை மட்டும் தனியாக வெட்டி நம்முடைய மொபைலுக்கு ரிங்க் டோனாகவோ அல்லது மற்ற நண்பர்களுடன் பகிர நினைப்போம். இந்த வேலையை செய்ய நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் ஆன்லைனில் இலவசமாக மற்றும் சுலபமாக எப்படி நம்முடைய MP3 பைல்களை வெட்டுவது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

6/21/2011 by சசிகுமார் · 11

6/20/2011

கூகுளின் புதிய பயனுள்ள வசதி - Search by Image

கூகுளில் உள்ள அனைத்து வசதிகளை விவரிக்க வேண்டுமென்றால் நடக்கிற காரியமில்லை. இவ்வளவு வசதிகள் இருந்தும் கூகுள் வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர். 

மேலும் வாசிக்க

6/20/2011 by சசிகுமார் · 10

6/18/2011

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 

மேலும் வாசிக்க

6/18/2011 by சசிகுமார் · 20

6/17/2011

இந்திய மொபைல்களுக்கு Anonymous SMS இலவசமாக அனுப்ப

இப்பொழுது மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் சிறியவர்கள் வரை அனைவரும் போன்களை உபயோகிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் மொபைல் போன்களில் விரும்பி உபயோகிப்பது SMS (Short Messaging Service) என்ற குறுஞ்செய்தி வசதியை தான்.

மேலும் வாசிக்க

6/17/2011 by சசிகுமார் · 11

6/16/2011

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. 

மேலும் வாசிக்க

6/16/2011 by சசிகுமார் · 29

6/15/2011

கணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க

கணினிக்கு மிகவும் அவசியமானது சாப்ட்வேர்கள் ஆகும். கணினியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும் சில அதிக்கப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம். மென்பொருட்கள் இல்லாமல் கணினி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும் ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.

மேலும் வாசிக்க

6/15/2011 by சசிகுமார் · 17

6/14/2011

கணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த

கணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள்  நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மேலும் வாசிக்க

6/14/2011 by சசிகுமார் · 8

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

ஏதேதுக்கோ இணையதளங்கள் வந்து விட்ட நிலையில் இந்தயாவில் உள்ள ஊர்களின் பின்கோடுகளை அறிய ஒரு தேடியந்திரம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. பின்கோடுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று ஏதோ கொரியர் அனுப்பவோ அல்லது லெட்டர் அனுப்ப நேரிட்டால் இந்த பின்கோட் என்பது மிகவும் கட்டாயமான ஒன்று சில நேரங்களில் இந்த பின்கோடுகள் தெரியாமல் நாம் சிரம பட்டிருப்போம்.  இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஒரு தேடியந்திரம் உள்ளது. இதில் நமக்கு தேவையான ஊர்களின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும் உடனே  அந்த ஊரின் பின்கோட் வந்துவிடும்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 19

6/13/2011

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் VLC Media Player புதிய வெர்சன்- V1.1.10

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.10 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  

மேலும் வாசிக்க

6/13/2011 by சசிகுமார் · 12

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 14

6/12/2011

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

மேலும் வாசிக்க

6/12/2011 by சசிகுமார் · 13

6/11/2011

கணினியில் ஒரே சாப்ட்வேரில் அனைத்து வகை (70+ formats) பைல்களையும் எளிதாக ஓபன் செய்ய

நம்முடைய கணினியில் ஒரு சில பைல்களை ஓபன் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட பைல்களை மட்டுமே ஓபன் செய்ய முடியும். சில பார்மட் பைல்களை ஓபன் செய்ய வேண்டுமானால் அதற்க்கான மென்பொருள் கட்டாயம் நம் கணினியில் இருந்தால் மட்டுமே நாம் அதை திறக்க முடியும். இதற்காக நாம் ஒவ்வொரு பைல்களை ஓபன் செய்வதற்கும் அந்தந்த மென்பொருள் இணைப்பது தேவையில்லாத வேலை இதனை போக்கவே ஒரு ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மேலும் வாசிக்க

6/11/2011 by சசிகுமார் · 8

பிளாக்கரில் புதிய வசதி பிளாக்கின் பெவிகானை சுலபமாக மாற்றலாம்

கூகுல் வழங்கும் பிளாக்கர் சேவையை பயன்படுத்தி வரும் நாம் நம்முடைய தளங்களில் பிளாக்கரின் லோகோ டீபால்ட் பெவிகானாக இருக்கும். முன்பு அந்த டீபால்ட் பெவிகானை மாற்றி நம்முடைய பெவிகானை கொண்டு வர கோடிங்கில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். இது பல பேருக்கு கொஞ்சம் கடினமான வேலையாக இருந்தது.  இதனால் சில பேர் தங்களுடைய பெவிக்கானை மாற்றாமலே இருந்தனர். ஆனால் இனி கோடிங் எதுவும் நாம் மாற்றமோ சேர்க்கவோ செய்ய தேவையில்லை தினம் தினம் புதுபுது வசதிகளை வாசகர்களுக்கு அறிமுக படுத்தி வரும் பிளாக்கர் தளம் இந்த பெவிகானை சுலபமாக மாற்றுவதற்கும் ஒரு புதிய வசதியை வழங்கி உள்ளது.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 8

6/10/2011

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நிறைவேற உங்கள் ஆதரவை பதியுங்கள், நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்

நம் நாட்டின் ஊழலை பற்றி திரும்பவும் இங்கு சொல்ல வேண்டியதில்லை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் குழந்தை பிறந்ததிலிருந்து அவன் சுடுகாடுக்கு போகும் வரை லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் இந்தியாவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஊழலை ஒழிக்கும் என்று வீராவேசமாக பேசினாலும் ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர் மீது அது இதுன்னு சொல்லி ஏதேதோ வழக்குகள் போட்டு அவர்களை படாத பாடு படுத்திடுவாங்க.

மேலும் வாசிக்க

6/10/2011 by சசிகுமார் · 17

6/08/2011

Youtube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.

மேலும் வாசிக்க

6/08/2011 by சசிகுமார் · 19

6/07/2011

2010ல் உலகில் அதிக கணினிகளில் தடை செய்யப்பட்ட பத்து இணைய தளங்கள்

இணையத்தில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளனவோ அதை விட அதிகமாக தீமைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற தளங்களை நாம் கணினியில் திறக்க முடியாத தடை செய்துவிடுவோம். மற்றும் அலுவலங்களிலும் இந்து போன்ற தளங்களில் நேரம் அதிகமாக செலவழிப்பார்கள் என்ற நோக்கில் குறிப்பிட்ட தளங்களை தடை செய்து விடுவார்கள் அந்த வரிசையில் உலகில் உள்ள பெரும்பாலான கணினிகளில் தடை செய்யப்பட்டுள்ள முதல் பாத்து தளங்களை பார்ப்போம்.

மேலும் வாசிக்க

6/07/2011 by சசிகுமார் · 16

கூகுளின் புதிய Follow Button பிளாக்கில் இணைத்து பாலோயரை அதிகமாக்க

கூகுள் வழங்கும் Google Friend Connect சேவை அனைவரும் அறிந்ததே இதில் பிளாக்கர் தளத்திற்கு தேவையான பல விட்ஜெட்டுக்கள் உள்ளது. அதிலும் கூகுளின் Followers விட்ஜெட் அனைவரின் தளத்திலும் பெரும்பாலும் இருக்கும் ஒரு விட்ஜெட் இந்த விட்ஜெட் இல்லாத தளத்தை பார்ப்பது அரிது அந்த விட்ஜெட்டையே தற்போது சுருக்கி போட்டோக்கள் தெரியாமல் வெறும் Follow Button மட்டும் எப்படி பிளாக்கில் சேர்ப்பது என பார்ப்போம்

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 19

6/02/2011

ட்விட்டரின் புதிய Follow Button பிளாக்கில் இணைக்க

சமூக தலைமகளின் வளர்ச்சி மிக பிரம்மிக்கும் வைக்கும் உள்ளது. அதிலும் பேஸ்புக் தளத்தின் வளர்ச்சி பிரம்மிக்கும் வகையில்  அமைந்துள்ளது.நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்தி பேஸ்புக் தளம் அதன் வாசகர்களை அதிகரித்து கொள்கிறது. ஆதலால் மற்றொரு பிரபல தளமான  ட்விட்டர் தளமும் அதனுடைய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது அந்த வகையில் தற்போது Follow பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டனை உங்கள் பிளாக்கில் இணைப்பதனால் வாசகர்கள் உங்கள் ட்விட்டர் கணக்கில் சுலபமாக பின்தொடரலாம் மற்றும்  உங்கள் ட்விட்டர் கணக்கின் பின்தொடர்பவர்களை (Followers) கணிசமாக அதிகமாக்கலாம். 

மேலும் வாசிக்க

6/02/2011 by சசிகுமார் · 23

6/01/2011

2011 ஆம் ஆண்டின் உலகளவில் பிரபலமான 50 இணையதளங்கள்

உலகளவில் கோடிக்கணக்கான இணையதளங்கள் உள்ளன நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே உள்ளன. கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் தகவல்களை தரும் தளங்களே இறுதிவரை நிலைத்து வெற்றியும் பெறுகின்றன. இது போன்று உலகளவில் அனைவராலும் விரும்பப்பட்டு தர வரிசையில் முதல் ஐம்பது இடத்தை பெற்றுள்ள இணைய தளங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் பாருங்கள். 

மேலும் வாசிக்க

6/01/2011 by சசிகுமார் · 24