7/30/2011

கணினியை சுத்தம் செய்ய உதவும் CCleaner மென்பொருள் லேட்டஸ்ட் வெர்சன் - V3.09

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில: 
  • பயர்பாக்ஸ் 6 Beta உலவியால் ஏற்படும் தேவையில்லாத பைல்களை அளிக்க உதவுகிறது.
  • மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத பைல்களை நீக்குகிறது.
  • கணினியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.
  • கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history பைல்களை நீக்குகிறது.
  • இது போன்று மேலும் பல தேவையில்லாத பைல்களை நம் கணினியில் இருந்து நீக்கி நம் கணினியை சுத்தமாக வைத்து கொள்கிறது.
  • விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
  • இந்த லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

உபயோகிக்கும் முறை:
  • டவுன்லோட் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால்  உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
/**************/
Check- Download firefox 6.0 beta web browser for latest feature

7/30/2011 by சசிகுமார் · 11

பிளாக்கரின் +1 பட்டனில் யார் ஓட்டு போட்டார்கள் என சுலபமாக அறிய

சிறந்த பதிவுகளை தரம்பிரிக்க கூகுள் சமீபத்தில் கொண்டுவந்த வசதி கூகுள் +1 ஓட்டு பட்டன் வசதி. இந்த பட்டனை வலைப்பூவில் நிறுவி அதில் அதிக ஓட்டுக்களை பெரும் பதிவுகள் கூகுளில் முதன்மை இடத்திற்கு வரும்படி செட்டிங்க்ஸ் செய்து இருந்தனர். இதனால் அனைவரும் அந்த பட்டனை நம் பிளாக்கில் பொருத்தி இருந்தோம். இப்பொழுது அந்த பட்டனில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தியுள்ளனர். அந்த பட்டனில் மீது உங்கள் கர்சரை வைத்தால் ஓட்டு போட்டவர்களின் விவரமும் அதில் தெரியும். இனி நீங்கள் உங்கள் பதிவுக்கு யார்யார் ஓட்டு போட்டார்கள் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். 

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 27

7/29/2011

கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க

நாம் நம்முடைய பதிவில் சில விஷயங்களை வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது சில விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும் அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம் பதிவில் இணைப்போம். பொதுவாக நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Ms Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன் படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் செய்ய முடியும். இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கும் PicPick என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

மேலும் வாசிக்க

7/29/2011 by சசிகுமார் · 18

7/28/2011

கூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்

கூகுல் தளத்திற்கு சென்றால் கூகுளின் மெனுபார் இருக்கும். அந்த மெனுபாரின் நிறம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சற்று மங்கலாக இருப்பதால் சில பேருக்கு இந்த நிறம் பிடிப்பதில்லை. அப்படி நினைப்பவர்கள் இனி கவலை பட தேவையில்லை நமக்கு பிடித்த மூன்று வண்ணங்களில் நாம் சுலபமாக அந்த மெனுபார் கலரை மாற்றி கொள்ளலாம். குரோம் நீட்சியின் உதவியுடன் இந்த மெனுபார் கலரை சுலபமாக மாற்றி கொள்ளலாம். 

மேலும் வாசிக்க

7/28/2011 by சசிகுமார் · 17

யுனிகோடில் இருந்து பாமினிக்கும், பாமினியில் இருந்து யுனிகோடிற்கும் கன்வெர்ட் செய்ய

பாமினி எழுத்துருவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கணினியில் டைப் செய்ய பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் எழுத்துரு(font).  தமிழ் உபயோகப்படுத்தப்படும் கணினியில் நிச்சயம் இந்த எழுத்துரு(font) இருக்கும். நம் கணினியில் உள்ள பெரும்பாலான மென்பொருட்கள் இந்த எழுத்துருவை சப்போர்ட் செய்வதால் பெரும்பாலனவர்கள் இதை உபயோகிக்கிறோம். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த எழுத்துருவை உபயோகிக்க நமக்கு தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதிகமான பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த எழுத்துருவை பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய முடியும்.இல்லையேல் பயன்படுத்துவது மிகவும் சிரமம். மற்றும்  இணையத்தில் தமிழில் எழுத இந்த எழுத்துருவை பயன்படுத்த முடியாது. அதற்க்கு பாமினி எழுத்துருவை யுனிகோடாக மாற்றினால் தான் பயன்படுத்த முடியும். 

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 19

7/27/2011

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் Group Chat செய்ய

இலவசமாக மெயில் சேவை வழங்கும்  நிறுவனங்களில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. ஜிமெயில் பல வசதிகள் வாசகர்களை கவர்ந்துள்ளது அதில் Chat எனப்படும் அரட்டை பகுதியும் ஒன்று. நம் நண்பர்களுடன் எளிதாக அரட்டை அடிக்கும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது.ஜிமெயிலில் ஒரு நண்பருடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு நண்பர் நமக்கு சாட்டில் அழைப்பார் இந்த நண்பர் நாம் ஏற்கனவே அரட்டை அடித்து கொண்டிருப்பவருக்கும் நண்பராக இருப்பார் அப்படியென்றால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக அரட்டை அடிப்பதை தவிர்த்து ஒரே க்ரூப்பில் மூன்று பேரும் சேர்ந்து விட்டால் அனைவரும் ஒன்றாக அரட்டை அடிக்கலாம். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மொபைலில் Conference call உள்ளதல்லாவா அதே தான் ஒரே நேரத்தில் பலருடன் பேசி மகிழலாம்.

மேலும் வாசிக்க

7/27/2011 by சசிகுமார் · 24

7/26/2011

புதிய வசதிகளுடன் VLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு - V1.1.11

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.11 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  

மேலும் வாசிக்க

7/26/2011 by சசிகுமார் · 17

7/25/2011

கூகுள் பிளசில் உங்கள் அப்டேட்களை பார்க்க முடியாதவாறு ஒருவரை தடை செய்ய

பேஸ்புக்கை காட்டிலும் கூகுள் பிளஸ் சமூக இணைய தளம் உபயோக படுத்த மிகவும் சுலபமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த தளம் 20 மில்லியன் வாசகர்களை தாண்டி விட்டதாக அறிவிக்க படுகிறது. ஆனால் இன்னும் சோதனை பதிப்பிலேயே வைத்திருக்க காரணம் வாசகர்களின் கருத்துக்களை கண்டறியவே. சமூக இணைய தளங்களில் பெரும்பாலும் நாம் பகிரும் தகவல்கள் நம்முடைய கணக்கில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் சென்றடையும் அவர்களும் தகவல்கள் பார்த்து அதற்க்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கூகுள் பிளசில் நாம் பகிரும் தகவலை ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்காத வண்ணம் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

7/25/2011 by சசிகுமார் · 22

7/23/2011

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க

 இந்திய கட்டிட கலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம்முடைய கட்டிட கலைகளை காண்பவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிருக்கு படை எடுக்கின்றனர். தமிழகத்திலும் பல பிரசித்தி பெற்ற கோவில்களும்,தேவாலயங்களும், மசூதிகளும்  நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம் வாருங்கள். 

மேலும் வாசிக்க

7/23/2011 by சசிகுமார் · 23

7/22/2011

உங்கள் கணினியை வைரஸ் தாக்கி உள்ளதா கூகுளின் எச்சரிக்கை

நம் கணினியில் மால்வேர்களும்,வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே. நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து (திறந்து வீட்டுக்குள் நாய் நுழைவதை போல ஹி ஹி ) நம்முடைய முக்கிய பைல்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்முடைய கணினி பாதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.

மேலும் வாசிக்க

7/22/2011 by சசிகுமார் · 25

7/21/2011

ஜிமெயிலில் இனி ZIP, RAR பைல்களையும் டவுன்லோட் செய்யாமல் ஆன்லைனிலேயே பார்க்கலாம்

கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே இருக்கின்றனர்.  நமக்கு யாரேனும் ஜிமெயிலில் போட்டோக்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF பைல்களை அனுப்பினால் நாம் இந்த பைல்களை நம்முடைய கணினியில் டவுன்லோட் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு டவுன்லோட் செய்யும் நேரம் குறைவதுடன் லிமிட்டட் இணைய இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நமக்கு அனுப்பப்படும் பைல்களை கம்ப்ரெஸ்(.zip .rar) பைல்களாக இருந்தால் நம்மால் ஆன்லைனில் அந்த பைல்களை பார்க்க முடியாது டவுன்லோட் செய்து தான் பார்க்க முடியும். 

மேலும் வாசிக்க

7/21/2011 by சசிகுமார் · 19

7/20/2011

பேஸ்புக்கை வீழ்த்துமா கூகுள் + - கருத்து கணிப்பு

இணையத்தில் ஜாம்பவானான கூகுளையே ஆட வாய்த்த தளம் என்றால் அது பேஸ்புக் தான். பேஸ்புக் தளம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து. பல கிளை இணைய தளங்களை வைத்துள்ள கூகுளால் பேஸ்புக் எனும் ஒரே தளத்தின் வளர்ச்சிக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனை சமாளிக்க Buzz வசதியை புகுத்தியது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெற வில்லை. அதனால் பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டு படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு எடுத்த ஆய்வின் படி பேஸ்புக் தளம் கூகுள் தேடியந்திரத்தை விட ரேங்கில் உயர்ந்தது. ஆனால் பல கிளை (youtube,blogger,Gmail) தளங்களை கூகுள் வைத்திருந்ததால் அவைகளின் துணையோடு முதலிடத்தை தக்கவைத்தது.

மேலும் வாசிக்க

7/20/2011 by சசிகுமார் · 26

7/19/2011

கூகுளின் 199 அழகிய எழுத்துருக்களை(Fonts) கணினியில் டவுன்லோட் செய்து உபயோகிக்க

 இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது. எழுத்துரு என்பது கணினிக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதன் மூலமாக தான் நம்முடைய கணினியில் தகவல்களை பதிய முடியும். மற்றும் போட்டோ ஷாப் போன்ற மென்பொருட்களில் டிசைன் செய்ய பல வகையான எழுத்துருக்கள் இருந்தால் தான் நன்றாக வடிவமைக்க முடியும். கூகுள் 199 புது வகையான எழுத்துருக்களை நமக்கு வழங்குகிறது. அந்த எழுத்துருக்களை எவ்வாறு நம் கணினியில் டவுன்லோட் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

7/19/2011 by சசிகுமார் · 18

7/18/2011

கூகுள் Buzz, Plus, Picasa தளங்களில் நீங்கள் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் டவுன்லோட் செய்ய

இணையம் உபயோகிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் பயனை அனுபவிக்கின்றனர். இணைய நிறுவனங்களில் கூகுள் தான் எப்பொழுதும் முதல் இடம். கூகுள் பல வசதிகளை நமக்கு வயங்கி வருகிறது. நம்முடைய செய்திகளை உடனுக்குடன் பகிர Google Buzz, நம்முடைய போட்டோக்களை பகிர Picasa , தற்பொழுது புதிய வசதியாக இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர Google Plus என இதன் சேவைகள் நீள்கிறது. நாம் இந்த தளங்களில் தகவல்களை பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த தளங்களில் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம்

மேலும் வாசிக்க

7/18/2011 by சசிகுமார் · 19

7/16/2011

கூகுள் பிளஸ் மூலம் வரும் தேவையில்லாத ஈமெயில்களை நிறுத்த

சமூக இணைய தளங்களின் குறிப்பிட்ட ஒரு பிரச்சினை என்னவென்றால் Notification ஈமெயில்கள் வந்து நம்முடைய இன்பாக்சை குப்பை கூடையாக மாற்றி விடும். அதே தான் கூகுள் பிளசிலும் நாம் பகிரும் போஸ்ட்க்கு யாரேனும் கமென்ட் போட்டாலும், நம் பதிவை ரீஷேர் செய்தாலும், நம்மை யாராவது வளையத்தில்(Circle) சேர்த்தாலும் இப்படி பல செயல்களுக்கு நமக்கு மெயில்கள் வந்து நம் இன்பாக்சை நிரப்பி விடுகின்றன. இதற்க்கு இடையில் நம்முடைய முக்கியமான மெயில்களும் கண்டறிவதில் சிரமமாக உள்ளது ஆகவே இந்த தேவையில்லாத மெயில்களை எப்படி தடை செய்வது என காண்போம்.

மேலும் வாசிக்க

7/16/2011 by சசிகுமார் · 21

7/15/2011

ஆன்லைனில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

7/15/2011 by சசிகுமார் · 17

7/14/2011

கூகுள் + சுலபமாக உபயோகிக்க கீபோர்ட் ஷார்ட்கட் கீகள்

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்க போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள சமூக இணைய தளம் தான் கூகுள் பிளஸ். தற்போது இணையத்தில் எங்கு பார்த்தாலும் கூகுள் பிளஸ் என்ற குரல் தான் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த சமூக இணைய தளத்தில் வசதிகள் ஏராளம். இன்னும் பல வசதிகளை கூகுள்  புகுத்தப்பட உள்ளது. இந்த வசதிகளை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம் இந்த வரிசையில் இன்று கூகுள்+ சுலபமாக உபயோகிக்க நம்முடைய கீபோர்ட் ஷார்ட்கட் கீகள் என்ன வென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

7/14/2011 by சசிகுமார் · 21

7/13/2011

கூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா? சுலபமாக பெற

பேஸ்புக் சமூக தளத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுக படுத்தியுள்ள சமூக இணைய தளம் கூகுள் + ஆகும். இந்த தளத்தை முதலில் பீட்டா நிலையில் அறிமுக படுத்தினார்கள் ஆனால் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வாசகர்கள் குவிந்தனர். சர்வர்கள் ஸ்தம்பித்தது. இவ்வளவு பெரிய ஆதரவை சற்றும் எதிர்பார்க்காத கூகுள் தற்காலிகமாக புதிய வாடிக்கையாளர்கள் இணைவதை நிறுத்தினர். விரும்புவர்கள் invite அனுப்பினால் கூகுள் பிறகு அவர்களுக்கு வசதியை தர தீர்மானித்து அதன் படி வசதிகளை ஏற்படுத்தினர்.

மேலும் வாசிக்க

7/13/2011 by சசிகுமார் · 335

7/12/2011

SMS மூலம் கூகுள்+ ல் செய்திகளை உடனுக்குடன் பகிர

இப்பொழுது இணைய உலகில் சூடான விஷயம் இந்த கூகுள் + தான். கூகுள் துவங்கியுள்ள சமூக இணைய தளமான இந்த கூகுள் + தளத்திற்கு ஆதரவுகள் குவிகிறது. இந்த கூகுள் + தளத்தில் ஏராளமான வசதிகள் உள்ளன இவைகள் அனைத்தும் சொல்ல ஒரு பதிவு பத்தாது. ஆகவே ஒவ்வொரு வசதியாக பார்ப்போம். அந்த வரிசையில் நம்முடைய சாதாரண மொபைல் போனில் இருந்து SMS மூலம் கூகுள் + அப்டேட் செய்வது எப்படி என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

7/12/2011 by சசிகுமார் · 36

7/11/2011

Youtube-ன் புதிய அழகான தோற்றம் மற்றும் புதிய வசதிகளை நீங்களும் பெற

கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வருகின்றது. கூகுளின் தேடியந்திரம், ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும் பிளாக்கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங்களை கூகுள் தற்பொழுது செய்துள்ளது. அடுத்து கூகுளின் வீடியோ தளமான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறயில் தான் இப்பொழுது விட்டுள்ளது. வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுதல்கள் தேவைபட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய தோற்றத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் விடப்படும்.

மேலும் வாசிக்க

7/11/2011 by சசிகுமார் · 11

7/09/2011

பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல்

நாளுக்கு நாள் இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. பிளாக்கர் தளம் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதற்கு முன்னர் சோதனை ஓட்டமாக டிராப்ட் தளத்தில் முதலில் வெளியிடும். வாசகர்களின் வரவை பொருத்து அந்த சேவை முழு பயன்பாட்டிற்கு வரும். அதன் படி பிளாக்கர் டிராப்ட் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.  பழைய தோற்றத்திற்கும் புதிய தோற்றத்திற்கும் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. இதனால் பிளாக்கர் டிராப்ட் உபயோகிப்பவர்கள் வசதிகளை தேடுவதில் சற்று சிரமம் ஏற்ப்படுகிறது. இந்த புதிய தோற்றத்தின் வசதிகளை பற்றி ஒரு விரிவான அலசலை பார்ப்போம்.

மேலும் வாசிக்க

7/09/2011 by சசிகுமார் · 21

7/08/2011

கூகுளின் புதிய பயனுள்ள வெப்சைட் - What do you love?

இணையத்தில் கூகுள் நிறைய வசதிகளை வாசகர்களுக்கு தருகிறது. பிளாக்கர்,யூடியூப்,ஜிமெயில்,மேப், என கூகுளின் சேவை விரிகிறது. இந்த சேவைகள் அனைத்தையும் கூகுள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த வரிசையில் கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது தான் What do you Love? என்பது.

மேலும் வாசிக்க

7/08/2011 by சசிகுமார் · 12

7/07/2011

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க

இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

7/07/2011 by சசிகுமார் · 24

7/06/2011

கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள்

உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கபடுகிறது. இந்த ஐ.பி. எண்ணை வைத்து ஒரு கணினியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் ஹாக்கர்கள் கணினியின் ஐபி எண்ணை அடிப்படையாக கொண்டே கணினியை முடக்குகின்றனர்.  (ஆகையால் உங்கள் கணினியின் ஐபி எண்ணை யாரிடமும் பகிந்து கொள்ள வேண்டாம்). கணினியின் ஐ.பி. எண்  சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள் கீழே கொடுத்துள்ளேன். இந்த ஐபி எண்களை நாம் ஆப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். 

மேலும் வாசிக்க

7/06/2011 by சசிகுமார் · 16

7/05/2011

பேஸ்புக் ஸ்டைலில் மெனுபார் உங்கள் பிளாக்கில் இணைக்க

நம்முடைய பிளாக்கில் பதிவுகளை தனித்தனி லேபிள்களாக பிரித்து உருவாக்கி வைத்திருப்போம். இந்த லேபிள்களை மெனுபாரில் பொருத்துவதன் மூலம் வாசகர்கள் எளிதாக பதிவுகளை படித்து கொள்ளலாம். இப்பொழுது வரும் சில டெம்ப்ளேட்டுகளில் மெனுபார் சேர்ந்தே இருக்கும். இந்த மெனுபார் இல்லாத டெம்ப்ளேட்டுகளில் எப்படி மெனுபார் இணைப்பது என பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் சமூக தளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக் வடிவிலேயே நம்முடைய பிளாக்கிர்க்கும் மெனு பார் வைத்து நம்முடைய பிளாக்கை அழகாக்கலாம் வாருங்கள். 

மேலும் வாசிக்க

7/05/2011 by சசிகுமார் · 21

7/04/2011

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

 இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக  இணையத்தை தேடவில்லை  என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

மேலும் வாசிக்க

7/04/2011 by சசிகுமார் · 28

7/03/2011

கணினியில் தேவையில்லாத பைல்களை சுலபமாக நீக்க CCleaner - V3.08

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 

மேலும் வாசிக்க

7/03/2011 by சசிகுமார் · 14

7/02/2011

ஜிமெயிலின் புதிய அழகான தோற்றத்தை நீங்களும் பெற

இணையத்தில் ஜாம்பவானான கூகுளின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவை தளம்(இதை பற்றி மேலும் அறிமுகம் தேவையில்லை. ) தனது தளங்களின் தோற்றத்தை அழகாக மாற்றி கொண்டு வரும் கூகுள் ஜிமேயிளிளிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது.  இந்த தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமின்றி வேகம் குறைந்த கணினிகளிலும் திறக்கும் வண்ணம் இதனை வடிவமைத்துள்ளது.

மேலும் வாசிக்க

7/02/2011 by சசிகுமார் · 27

7/01/2011

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்க கூகுளின் அதிரடி திட்டம்

பேஸ்புக் தான் இப்பொழுது இணையத்தில் வேகமாக வளர்ந்து கொண்டுவரும் இணைய தளம். இணையத்தில் கூகுளை அடிச்சிக்க ஆளே இல்லை என்ற நிலையை மாற்றி வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்று பேஸ்புக் நிரூபித்து காட்டியுள்ளது. இந்த தளத்தின் தற்போதைய வளர்ச்சியை பார்க்கும் பொழுது கூடிய விரைவில் கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் அமர்ந்து கொள்ளும் என இணைய நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் வாசிக்க

7/01/2011 by சசிகுமார் · 13