10/20/2011

இன்ட்லியின் புதிய Follower Widget பிளாக்கரில் இணைக்க

தமிழ் திரட்டிகளில் முக்கிமானதும் வாசகர்களுக்கு அதிக வாசகர்களை அளிப்பதும் இன்ட்லி எனும் திரட்டியாகும்.  இன்ட்லி தளம் சமீப காலமாக புதிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் சில பேரிடம் அதிருப்தியை தந்தாலும் இன்ட்லி தளம் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் தனது மாற்றங்களில் முனைப்பாக உள்ளது.  இந்த வரிசையில் இப்பொழுது புதிய Indli Follower விட்ஜெட்டை அறிமுகம் செய்து உள்ளது. இன்ட்லியில் நம்மை தொடர்வதனால் நம்முடைய இடுகைகளை வாசகர்கள் முகப்பு பக்கத்தில் பெறலாம் என்பது நாம் அறிந்ததே. இதனால் Followers எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இன்ட்லி தளம் Followers விட்ஜெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விட்ஜெட்டை நம் பிளாக்கில் இணைப்பதனால் நம்முடைய இன்ட்லி Followers மேலும் உயரும். வாசகர்களும் இந்த விட்ஜெட்டில் உள்ள தொடர்க என்ற பட்டனை அழுத்தி சுலபமாக நம்மை பின்தொடரலாம். இதற்க்கு இன்ட்லி தளம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

மேலும் வாசிக்க

10/20/2011 by sasikumar · 20

கூகுள் லோகோவை(Doodles) உங்கள் விருப்பம் போல மாற்ற - Google Doodles

உலகளவில் சில பிரபலமான நபர்களின் பிறந்த நாள் மற்றும் சில முக்கியமான நாட்களில் அந்த அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கூகுல் தனது   லோகோவை மாற்றி அமைக்கும் இது Google Doodles என்று அழைக்கப்படுகிறது. இந்த Google Doodles சேவையை 1998 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வருகிறது. அறிஞர்களை தனது லோகோ மூலம் கவுரவிக்கிறது. இப்படி உருவாக்கப்படும் Google Doodles வாசகர்களை ரசிக்கவும் வைக்கிறது. ஒரு சில லோகோ அனைவரின் மனதையும் கவரும் அனைவரும் இந்த லோகோவே தொடர்ந்து இருக்காதா என நினைப்பார்கள் ஆனால் மறுநாளே அந்த லோகோ மறைந்து பழைய படி Google லோகோ வந்திருக்கும். இப்பொழுது கூகுள் வாசகர்களுக்கு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. நீங்கள் நினைக்கும் Google Doodle உங்கள் தேப்பல்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

by sasikumar · 5

10/19/2011

ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக உபயோகிக்க - Free Online Photoshop editor

போட்டோக்களை எடிட் செய்யும் மென்பொருட்களில் அடோப் நிறுவனம் வழங்கும் போட்டோஷாப் மென்பொருள் தான் எப்பவுமே நம்பர் 1. பல மென்பொருட்கள் இருந்தாலும் இந்த போட்டோஷாப் மென்பொருளுக்கு ஈடாக எதுவும் போட்டி போட முடியவில்லை. பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கின்றனர். ஆனால் இந்த போட்டோஷாப் மென்பொருளை பணம் கொடுத்து வாங்கினால் தான் உபயோகிக்க முடியும். ஆனால் ஆன்லைனில் இந்த மென்பொருளை இலவசமாக உபயோகிக்க ஒரு அருமையான தளம் உள்ளது.

மேலும் வாசிக்க

10/19/2011 by sasikumar · 19

10/18/2011

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண

இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க

10/18/2011 by சசிகுமார் · 15

10/14/2011

கூகுளின் தொடர்பு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள்

1996 ஆம் ஆண்டு Stanford பல்கலை கழக மாணவர்களான Larry Page, Sergey Brin இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரம் Backrub. இதுவே 1998ஆம் ஆண்டு கூகுள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை இணையத்தில் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறி உள்ளது. இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கூகுள் நிறுவனத்தை பற்றி. உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பும் அளவுக்கு ஒரு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு நாள் இந்த தளம் செயல்படவில்லை எனில் இணையத்தின் செயல்பாடே முடங்கி விடும் அளவிற்கு பல கிளை தளங்களை தன்னுள் வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.

மேலும் வாசிக்க

10/14/2011 by சசிகுமார் · 15

10/13/2011

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி - Youtube Space Lab

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் முயற்சியாக யூடியுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்களுக்கு வழங்கி உள்ளது.

மேலும் வாசிக்க

10/13/2011 by சசிகுமார் · 12

ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க பிளாக்கரில் பதிவுக்கு கீழே அழகான Email Subscribe Widget

நம்முடைய பதிவு பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புவாகள். ஒரு தளத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வாசகர்களே. ஆகவே வாசகர்களை பெருக்க நாம் பல வழிகளை கையாள்கிறோம். இதில் முக்கியமான வசதியான feedburner வழங்கும் Email Subscribe Widget நம் பிளாக்கில் வைத்து அதன் மூலம் ஈமெயில் வாசகர்களை பெருக்கி கொள்கிறோம். அந்த விட்ஜெட்டை பெரும்பாலும் நமது பிளாக்கின் Sidebar-ல் வைத்து இருப்போம். வாசகர்கள் பெரும்பாலும் நம் பதிவை மட்டும் படித்து விட்டு சென்று விடுவார்கள் சைட்பாரில் என்ன உள்ளது என பார்ப்பதில்லை. ஆகவே அந்த Subscribe Widget ஐ அனைத்து வாசகர்களும் பார்க்கும் படி பதிவு க்கு கீழே வைத்தால் ஈமெயில் வாசகர்களை கணிசமாக உயர்த்தமுடியும்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 17

10/12/2011

பில்கேட்ஸ் VS ஸ்டீவ் ஜாப்ஸ் | Windows VS Apple [பயோடேட்டா]

கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வவளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள். 

மேலும் வாசிக்க

10/12/2011 by சசிகுமார் · 15

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையான ஜிமெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வசதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட்டிங் வசதி இந்த வசதி மூலம் நம் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் என்றாலும் இலவசமாக அரட்டை அடிக்கிறோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட்டோக்களை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது.  நம் கணினியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோவையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டிங்கில் எப்படி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 17

10/11/2011

20,000 அதிகமான சிறந்த ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய - Icon Wanted

ஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென் ஒரு லோகோவை உருவாக்கி வைத்து கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது விட்ஜெட்டில் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்த்துகிரார்கள். மற்றும் பல்வேறு செயல்களுக்கு இந்த ஐகான்கள் தேவைப்படுகிறது. இது போன்று ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் உள்ள ஒரு தளத்தை பற்றி இங்கு காண்போம். இந்த தளம் தேடியந்திரம் போலவே செயல்பட்டாலும் மேலும் பல வசதிகள் இதில் உள்ளது. உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமாக உள்ளது.

மேலும் வாசிக்க

10/11/2011 by சசிகுமார் · 17

10/10/2011

இந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள் - Top 75 Indian blogs

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் இணையதளம் தொடங்கி அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதுவும் இலவச சேவையாக கிடைப்பதால் நாளுக்கு நாள் வலைப்பூக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய அளவில் மிகச்சிறந்த 75 வலைப்பூக்களை ஒரு தளம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலை கீழே படத்தில் உள்ள வகைகளின் படி பிரித்து பட்டியலிட்டுள்ளது.


இந்த பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் பிரபல் தொழில்நுட்ப தளமான Digital Inspiration தளமே பிடித்துள்ளது. 


இந்த தளத்தில் பிளாக்கை இனைதவர்களை மட்டுமே பட்டியலில் இந்த தளம் எடுத்துள்ளது. இந்த தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைக்கலாம். குறைந்தது 8 இருந்து 10 மாதங்கள் வரை ஆகுமாம் அவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு.இந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்கள் எதுவும் இடம் பெறவில்லை.

பட்டியலை பார்க்க -top 75 india blogs

10/10/2011 by சசிகுமார் · 19

உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் ஓட்டு போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம் அறிய

இப்பொழுது தமிழகம் முழுக்க பற்றி கொண்டிருக்கும் ஒரு பரபரப்பு இந்த உள்ளாட்சி தேர்தல். எங்க பார்த்தாலும் ஒரு சிறிய கூட்டம் அவர்களுக்குள் அரசியல் விவாதங்கள் என பல இடங்களில் காணமுடிகிறது. வேட்பாளர்களும் வித்தியாச வித்தியாசமாக வாக்களர்களுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சட்டமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் பணம் அதிகமாக விளையாடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சட்டமன்ற தேர்தலை நியாமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு இந்த உள்ளாட்சி தேர்தலையும் நியாயமாக நடத்தமுடியுமா என்பது சவாலான விஷயமே.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 14

10/08/2011

Angry Birds Rio விளையாட்டை இலவசமாக நேரடி டவுன்லோட் செய்ய

கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார். விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள்.


மேலும் வாசிக்க

10/08/2011 by சசிகுமார் · 14

10/07/2011

இந்திய நடிகர்களில் முதலாவதாக ஷாருக்கான் இப்பொழுது கூகுள் பிளசில்- Shah Rukh Khan now on Google+

சமூக தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் பல பிரபலங்களும் உறுப்பினர் ஆகி அவர்களுடைய கருத்துக்களை ரசிகர்களிடம் நேரடியாக பகிர்கின்றனர். பிரபல சமூக தளமான ட்விட்டரில் இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து பிரபலங்களும் உறுப்பினராகி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் உருவாக்கி இருக்கும் மிகப்பெரிய சமூக தளமான கூகுள் பிளசில் இந்தி உலகின் முன்னணி நடிகரான Shah Rukh Khan சேர்ந்துள்ளார். இந்திய அளவில் நடிகர்களில் முதன் முதலில் கூகுள் பிளசில் சேர்ந்து இருப்பவர் இவர் தான்.

மேலும் வாசிக்க

10/07/2011 by சசிகுமார் · 16

தேவையில்லாத பைல்களை நீக்கி கணினியை வேகமாக இயங்க வைக்க - CCleaner 3.11

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும். இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம் மற்றும் பயனும் அதிகம் என்பதால் அனைவரும் இதை உபயோகிக்கின்றனர்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 10

10/05/2011

போர்ட்டபிள் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய - Portable Apps

இணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்டண மென்பொருட்களும் குவிந்து உள்ளன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் இன்ஸ்டால் செய்து பின்னர் அந்த மென்பொருளின் பயனை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் மேன்போருட்கலாக உபயோகப்படுதுகிறோம். போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உகயோகிக்கலாம். மற்றும் நம்முடைய பெண்ட்ரைவில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம் கணினியில் மால்வேர் பிரச்சினை மற்றும் registry சுத்தமாக இருக்கும்.

மேலும் வாசிக்க

10/05/2011 by சசிகுமார் · 15

பேஸ்புக்கின் பிரபலமான CityVille Game தற்பொழுது கூகுள் பிளசில்

பேஸ்புக் இந்த இமாலய வெற்றியை பெற முக்கிய காரணங்களில் பேஸ்புக்கின் விளையாட்டு பகுதியும் ஒன்று. பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக ஒவ்வொன்றையும் செய்து வரும் கூகுள் பிளஸ் தற்பொழுது கவனத்தை பேஸ்புக் Games மீது வைத்துள்ளது. அதன்படி பேஸ்புக்கின் சிறந்த விளையாட்டான CityVille விளையாட்டு தற்பொழுது கூகுள் பிளசிலும் வந்து விட்டது. இனி இந்த விளையாட்டை கூகுள் பிளஸ் வாசகர்களும் விளையாடி மகிழலாம்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 11

10/04/2011

இன்ட்லியின் புதிய மாற்றங்கள் - நன்மைகள் மற்றும் தீமைகள்

பதிவுலகில் திரட்டிகள் என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். அது ஆங்கிலமாகட்டும், தமிலாகட்டும் வேறு எந்த மொழியாக இருந்தாலும் இந்த திரட்டிகள் முக்கியமான ஒன்றாகும். தமிழ் பதிவுலகம் முழுக்க முழுக்க இந்த திரட்ட்டிகளையே நம்பி உள்ளது. தமிழ் திரட்டிகளில் முக்கியமானது இன்ட்லி,தமிழ்மணம்,தமிழ்10,உலவு,தமிழ்வெளி போன்ற திரட்டிகளாகும். இதில் ஒவ்வொரு தளங்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. முக்கிய தளமான இன்ட்லியில் தற்பொழுது சில மாற்றங்களை செய்துள்ளது. அவற்றை இங்கு காண்போம்.

மேலும் வாசிக்க

10/04/2011 by சசிகுமார் · 36

10/03/2011

கடந்த மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 இடுகைகள் [வந்தேமாதரம் Sep2011]

நாம் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும் என்று தான் நினைப்போம் ஆனால் குறிப்பிட்ட பதிவுகள் மட்டுமே வாசகர்கள் விரும்புகிறார்கள். ஒரு பதிவுக்கு கிடைக்கும் வெற்றி என்பது அந்த பதிவு எவ்வளவு பேரால் படிக்கப் படுகிறது மற்றும் நாம் சொல்கிற விஷயம் எத்தனை பேருக்கு போய் சேருகிறது என்பதை பொறுத்தே அமைகிறது. வந்தேமாதரத்தில் கடந்த ஒரு மாதத்தில் 34 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளை இங்கே காணலாம். இதன் மூலம் முன்பு சிறந்த இடுகைகளை மட்டும் ஒரே பக்கத்தில் வாசகர்கள் பார்த்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

10/03/2011 by சசிகுமார் · 22

10/02/2011

PDF பைல்களில் சுலபமாக Water mark போட

நம்முடைய தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

மேலும் வாசிக்க

10/02/2011 by சசிகுமார் · 12

10/01/2011

பிளாக்கில் உள்ள லிங்க்குகள்(Links) பல்வேறு நிறங்களில் ஜொலிக்க - Rainbow Effects

பிளாக்கர் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் பிளாக் அழகாக இருக்கவே ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு லிங்க்குகள் இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc.. இப்படி எல்லாமே லிங்க் ஆக தான் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்தால் தான் வாசகர்களால் முழு பதிவையும் படிக்க முடியும். அந்த லிங்க்குகள் ஒரே நிறத்தில் தான் அனைவரின் பிலாக்கிலும் காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த லிங்க்குகளை பல்வேறு நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

10/01/2011 by சசிகுமார் · 17

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

எழுத்தாளர்கள் செய்திதாள்களுக்கு எழுதி மாத கணக்கில் வெளியிடுவார்களா மாட்டார்களா என்று சந்தேகத்துடனே இருந்து வந்த எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் இந்த பிளாக். நவீன தொழில்நுட்ப உலகில் இணையத்தில் எழுதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இலவச சேவை என்பதாலும் கருத்தை பதிவு செய்த உடனே உலகில் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம் என்பதால் தற்பொழுது இணைய எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சில பேர் பொழுது போக்கிற்காவவும், சில பேர் தங்கள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் மேலும் சில பேர் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் இப்படி பல காரணங்களுக்காக பதிவு எழுதுகின்றனர்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 30