1/23/2012

Angry birds போல பிரபலமான விளையாட்டு Cut the Rope இலவசமாக

கடந்த ஆண்டு விளையாட்டு பிரியர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டு Angry Birds ஆகும். இப்பொழுது Angry Birds போலவே மிகப்பிரபலமாக அனைவரும் விரும்பும் விளையாட்டாக இந்த Cut the Rope விளையாட்டு உள்ளது.  Smart போன்களில் Game விளையாடும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும்.  இந்த விளையாட்டிலும் பல பல படிகள் உள்ளது. மொத்தம் 27 level உள்ளது. விளையாட்டின் நோக்கம் சுலபம் அங்கு கயிறில் ஒரு பந்து தொங்கி கொண்டிருக்கும் சில நட்சத்திரங்களும் அங்கு இருக்கும் உங்களிடம் இருக்கும் பிளேடினால் கயிறை அறுத்து அந்த நட்சத்திரங்களை பெற வேண்டும்.  உங்கள் பந்து விழுங்கப்படும் முன் எத்தனை நட்சத்திரங்கள் பெருகிறீர்களோ அதுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு படியும் மிக சுவாரஸ்யமாக உள்ளது.


கீழே உள்ள வீடியோவை பார்த்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள். 

Cut the Rope விளையாட்டினை இலவசமாக அனைத்து உலவிகளிலும் விளையாடலாம். இந்த விளையாட்டை HTML5 இல் வடிவமைதுள்ளதால் Chrome, Firefox, Safari, IE 9 என அனைத்து உலவிகளிலும் சப்போர்ட் செய்கிறது.

Cut the Rope இலவசமாக விளையாட - PLAY



பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற

5 comments:

  1. நண்பா,
    ஓட்டு மட்டும் போட்டு விட்டு கிளம்புறேன்,
    பதிவினை அப்புறமா வந்து படித்து கமெண்ட் போடுறேன்.

    ReplyDelete
  2. படித்தேன் விபரம் அறிந்தேன் நன்றி மக்கா...!!!

    ReplyDelete
  3. அட சூப்பர் விளையாட்டு போல விளையாடி பார்த்தால் போச்சு பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  4. நல்லதொரு அறிமுகம் நண்பா.

    ReplyDelete
  5. வணக்கம் சதீஷ் சார்!அருமை!உடனும் விளையாடினேன்! நன்றி!!!!

    ReplyDelete