1/27/2012
கூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்
கூகுள் நிறுவனம் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல தளங்களும் சில பிரபலமாகாத தளங்களும் உள்ளன. கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கையாக சமீபத்தில் கூகுள் பஸ் சேவையை மூடியது. தனது புதிய சமூக வலைத்தளமான கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அந்த வரிசையில் ஆன்லைனில் போட்டோக்களை எடிட் செய்ய உதவும் பயனுள்ள தளமான picnik தளம் மூடப்பட்டு இந்த தளம் கூகுள் பிளசோடு இணைகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த தளத்தின் சேவை மூடப்பட இருக்கிறது. ஆக ஏப்ரல் மாதத்தில் இருந்து கூகுள் பிளசிலேயே போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் மூலம் கூகுள் பிளசில் வர இருக்கும் சில வசதிகள்:
- வெட்டுதல்(Crop), அளவை குறைத்தல்(Resize), திருப்புதல்(Rotate) போன்றவைகளை செய்து கொள்ளலாம்.
- போட்டோக்களுக்கு அழகான எபெக்ட்ஸ் சேர்த்தல்
- போட்டோக்களில் சேர்க்க விதவிதமான Frames
இப்படி மேலும் பல பயனுள்ள வசதிகளை கூகுள் பிளசிலேயே வாசகர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நடவடிக்கையால் பிக்னிக் தளத்தின் premium கணக்கில் உள்ள வசதிகளை இனி இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.
பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)







recently, google has introduced new privacy policies and informs that it will be effective from 1st March 2012. For an innocent internet user doing blogging etc., i hope the changes may not affect much. But since they say they will be collecting information, do you feel, they will be planting cookies to see other information such as passwords to net banking etc.
ReplyDeletesubbu rathinam
http://Sury-healthiswealth.blogspot.com
புதிய தகவல்! நன்றி நண்பரே!
ReplyDeleteநல்ல தகவல் நன்றி பாஸ்
ReplyDeleteநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவரவேற்கத் தக்க விடயம் நண்பா,
ReplyDeleteகூகிள் தளத்தின் வளர்சிக்கு இந்த முயற்சி இன்னும் பங்களிப்பு நல்கும் என நினைக்கிறேன்.