1/17/2012
SOPAக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்கிபீடியா அதிரடி முடிவு- Stop SOPA
சமூக தளங்களை பார்த்து இப்பொழுது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கலங்கி போய் உள்ளன. ஏற்க்கனவே இந்த சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்த வரிசையில் அமெரிக்க அரசாங்கமும் குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்யும் SOPA(Stop Online Piracy Act) என்ற புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்க்கு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பிரபல இணைய நிறுவனங்களான Facebook, Google, Twitter, LinkedIn, wikipedia போன்ற அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. (SOPA க்கு ஆதரவு: ஒரு வாரத்தில் 72000 டொமைனை இழந்தது GoDaddy நிறுவனம்)இப்பொழுது அடுத்த கட்டமாக SOPA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விக்கிபீடியா நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது நாளை புதன் கிழமை விக்கிபீடியா தளம் செயல் படாது என விக்கிபீடியா உரிமையாளர் ஜிம்மி வேல்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஒரு நாளைக்கு 25 மில்லியன் வாசகர்கள் பார்வையிடும் விக்கிபீடியா தளத்தின் ஆங்கில பதிப்பு நாளை ஒரு நாள் வேலை செய்யாது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்.
ஏற்க்கனவே இந்த போராட்டத்தில் Reddit தளமும் 12 மணி நேரத்திற்கு முடக்கப்படும் என அந்த தளம் அறிவித்து உள்ளது. இப்பொழுது அந்த போராட்டத்தில் விக்கிபீடியா தளமும் பங்கு கொண்டுள்ளது.
விக்கிபீடியா தளம் 300 மொழிகளுக்கு மேல் சேவையை வழங்கினாலும் இந்த ஆங்கில பதிப்பு தான் உலகளவில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஏதேனும் முக்கிய தகவலை விக்கிபீடியாவில் அறிய வேண்டுமென்றால் இன்றே பார்த்து கொள்ளுங்கள். நாளை இந்த தளம் வேலை செய்யாது.
இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)









அது சரி கதை அப்படி போகுதா - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅப்போ கூகுளும் தம் சார்பில் பிளாக்கரை போராட்டத்தில் குதிக்க வைத்தால்... நமக்கெல்லாம் ஒரு நாளைக்கு பதிவு எழுதுதல்... கமென்ட் போடுதல்... ஓட்டு போடுதல்... என்று எந்த வேலையும் இன்றி ஒரு முழு நாள் ஜாலியா ரெஸ்ட்... ஹைய்யா....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteஅறிந்துகொண்டேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
வணக்கம் தல,
ReplyDeleteபுத்தம் புதிய தகவலைத் தந்திருக்கிறீங்க. வீக்கிப்பீடியாவின் முடிவினைத் தொடர்ந்து இன்னும் சில நிறுவனங்கள் இவ் வழியைப் பின்பற்றும் என நினைக்கிறேன்.
ரைட்டு ...
ReplyDeleteThank for your informations
ReplyDeleteகூகுளும் போராட்டத்தில் குதிக்காமல் இல்லை.
ReplyDeletehttps://www.google.com/landing/takeaction/