2/02/2012
URL மாற்றத்தினால் இயங்காத தமிழ்மண ஓட்டு பட்டையில் பதிவை இணைத்து ஓட்டு போடுவது எப்படி
கூகுளின் URL மாற்றத்தினால் தமிழ் திரட்டிகளில் பெருமாலானவர்கள் உபயோகித்து கொண்டிருக்கும் தமிழ்மண திரட்டியில் புதிய பிளாக்கில் இருந்து பதிவுகளை இணைக்க முடியவில்லை. மீண்டும் அப்ரூவல் வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஓட்டு பட்டையும் புதிய பிளாக்குகளில் வேலை செய்ய வில்லை. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு கூடுதல் சுமை அளித்துள்ளதால் அனைத்து புதிய பிளாக்கிர்க்கும் அப்ரூவல் வழங்க கால தாமதம் ஏற்படலாம். அதுவரை தற்காலிகமாக இந்த பிரச்சினைகளை தவிர்த்து தமிழ்மணத்தில் பதிவை இணைக்கவும், ஓட்டு பட்டையில் ஓட்டு போடுவது எப்படி எனவும் காணலாம்.
மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே உள்ள கருத்துரைகளில் கேட்கலாம்.
1) பதிவர்கள் பதிவை பப்ளிஷ் செய்தவுடன் நேரடியாக பதிவிற்கு செல்லாமல் முதலில் உங்கள் பிளாக்கின் URL உடன் ncr என்பதை சேர்த்து பிளாக்கை ஓபன் செய்யவும்.
உதாரணமாக
2) இது போல கொடுத்து ஓபன் செய்தால் உங்களுடைய பிளாக்கின் முகப்பு பக்கம் Redirect ஆகாமல் .com சேர்ந்து வரும் அதில் கடைசியாக போட்ட பதிவின் லிங்கை கிளிக் செய்து பதிவை ஓபன் செய்யுங்கள்.
3) இப்பொழுது பதிவில் உள்ள திரட்டி ஓட்டு பட்டைகளை கிளிக் செய்து வழக்கம் போல பதிவை இணையுங்கள். எந்த சிரமும் இன்றி உங்களின் பதிவு இனைந்து விடும். இந்த முறையில் இணைக்கும் பொழுது இன்டலி பரிந்துரை பக்கத்தில் உள்ள பதிவுகளும் சரியாக பரிந்துரை பக்கத்தில் வந்துவிடும்.
4) இப்பொழுது பதிவு இணைத்து விட்டீர்கள் ஆனால் உங்கள் பதிவிற்கு வரும் வாசகர்கள் தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியாது. அவர்களுக்கு ஓட்டு பட்டை இயங்காது. அதனை தீர்க்க நீங்கள் தமிழ்மணத்தில் ஓட்டு போடும் போது அந்த URL காப்பி செய்து கொள்ளுங்கள்.
![]() |
பதிவின் முடிவில் "தமிழ்மணத்தில் ஓட்டு போட" என்று லிங்க் கொடுத்தால் வாசகர்கள் அதன் மூலம் ஓட்டு போட முடியும்.
தமிழ்மண ஓட்டு பட்டையின் மாதிரியோடு கூடிய லிங்க் இணைக்க:
தமிழ்மண மாதிரி ஓட்டு பட்டையுடன் கூடிய கோடிங் கீழே உள்ளது. அதில் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடத்தில் இந்த URL மாற்றி உங்கள் பதிவின் தமிழ்மண URL கொடுக்கவும்.
<a href="http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=11368" target="_blank"><img border="0" src="http://3.bp.blogspot.com/-uX_Ku2sTLyA/TyosrVnzZwI/AAAAAAAAIk8/brRftptdm68/s1600/tamilmanam+logo.png" /></a>
மாதிரி
இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பதிவின் முடிவில் Edit HTML பகுதியில் கொடுத்தால் வாசகர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக இருக்கும்.
Note1: ஒவ்வொரு பதிவிற்கும் தமிழ்மண URL மாறும் ஆகவே ஒவ்வொரு பதிவிலும் இந்த URL கட்டாயம் மாற்ற வேண்டும்.
Note2: உங்கள் பதிவிற்கு எத்தனை தமிழ்மண ஓட்டு வந்துள்ளது என்பதை உங்கள் பதிவில் பார்க்க முடியாது.
மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே உள்ள கருத்துரைகளில் கேட்கலாம்.
பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)







நிறைய பதிவர்களுக்கு உதவியாக இருக்கும்... பகிர்வுக்கு நன்றி மாப்ளே,
ReplyDeleteநல்ல பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள்.
Hello sir...i tried for this. but its showing the vote thats ok. but when i click the votebox for my blog, it is now working in firefox...its showing error message why ? - my blog azifair-sirkali.blogspot.com. just click it.and give me a solution please
ReplyDeleteசார் நேரடியாக தமிழ்மண ஓட்டு பட்டையின் மூலம் உங்கள் பதிவுகளை இணைக்க முடியாது. இந்த பதிவில் உள்ள வழிமுறையை பயன்படுத்துங்கள்.
Deleteமாப்ள எனக்கீல்லீங்க..இருந்தாலும் பழக்க தோஷம் நன்றிங்க!
ReplyDeleteபலருக்கு பயன்படும் தகவல் பாஸ்
ReplyDeleteவிளக்கமான பதிவு சசிகுமார். அக்கறையுடன் அளித்திருக்கும் தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteஆஹா ஆபத்பாந்தவா
ReplyDeleteஇன்னிய தேதிக்கு தேவையான பகிர்வு. நன்றி.
ReplyDeleteஅவசியமான நேரத்தில் தேவையான பதிவை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteஉடனடித்தீர்வு..! சூப்பர் மாப்ள..!!
ReplyDeleteஅட.. உண்மையாகவே ஓட்டு போடமுடிகிறது.. உங்களுக்கும் ஓட்டு போட்டாச்சு..
ReplyDeleteஇந்த யூ.ஆர்.எல். தானே இந்த பதிவுக்கான தமிழ்மண ஓட்டுப்போட பயன்படுத்தியிருக்கீங்க..??
http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=1137940
மச்சி, அனைவருக்கும் பயனுள்ள பதிவு!
ReplyDeleteவிளக்கப் பகிர்விற்கு நன்றி
உடனடி மாற்றம் ....தகவலுக்கு நன்றி ..அண்ணா
ReplyDeleteகாலத்துக்கேற்ற அருமையான பதிவு. மிக்க நன்றி சார்.
ReplyDeleteதேவையான பதிவை தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஉடனடி தீர்வு! நன்றி சார்!
ReplyDeleteமாதிரி வாக்குப்பட்டையை உபயோகித்ததில் தொடக்க எண் 0 ஆக இருப்பினும் உங்கள் படத்தால் 6 எனக்காட்டுகிறதே. சரி செய்து 0 வரும்படி புதிய படம் ஒன்றை இங்கு மாற்றித் தாருங்களேன்.
ReplyDeleteசசி என்னுடைய ஒட்டுப்பட்டை சிலகாலமாகவே வேளை செய்யவில்லை. என் இடுகையை இணைப்பதில் பிரச்சினை இல்லை. என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு இருந்தால் உதவவும்.
ReplyDeleteபுள்ளைக்குட்டியோட நீங்க நல்லா இருக்கனும் சாமி. இதுப்போல ஒரு பதிவை போட்டதுக்கு.
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு . ஆனா நமக்கு இதெல்லாம் தேவையில்லை.என்பதிவுக்கு நானேதான் ஒட்டு போட்டுக்கணும்.
ReplyDelete