கூகுள் +1 பட்டனில் புதிய பயனுள்ள "RECOMMENDED" வசதி

இணையத்தில் கிடைக்கும் தகவல்களை சுலகமாக உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் பகிர உதவுவது +1 பட்டன். இந்த +1 பட்டனை பெரும்பாலானவர்கள் தங்கள் தளங்களில் சேர்த்திருப்பார். கூகுளின் +1 பட்டனில் RECOMMENDED புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். இனி நீங்கள் ஏதாவது ஒரு தளத்தில் உள்ள +1 பட்டனில் மீது உங்கள் மவுஸ் கர்சரை நகர்த்தினால் அந்த தளத்தின் மற்ற பிரபலமான இடுகைகளையும் நீங்கள் காணலாம். இந்த வசதியை கூகுள் பிளசில் உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் பார்க்க முடியும்.


இந்த வசதி பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள வசதியாகும் இதன் மூலம் தங்கள் தளத்தின் ஹிட்ஸ் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வாசகர்களும் அந்த தளத்தின் சிறந்த இடுகைகளை சுலபமாக கண்டறியலாம். 

இந்த புதிய வசதியை தற்பொழுது preview Group பயனர்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளனர். உங்களுக்கு இந்த வசதி தெரிய வேண்டுமெனில் இந்த குழுவில் சேர்ந்து கொள்ளவும். இன்னும் சில வாரங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வர இருக்கிறது. 

இந்த வசதிக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கூகுள் +1 பட்டனை உங்கள் தளத்தில் இணைத்திருந்தாலே போதும் இந்த வசதி தானாக ஆக்டிவேட் ஆகிவிடும். 


பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற