Google I/O 2012 முதல் நாள் அறிவிப்பில் சிறந்தவைகள்
இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனம் ஆண்டிற்கு ஒரு முறை தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கை நடத்தி வருவது வழக்கம். இதில் பல முக்கியமான அறிவுப்பகளையும், புதிய வசதிகளையும் கூகுள் நிறுவனம் வெளியிடும். உலகமே இந்த கருத்தரங்கை உற்று நோக்கும். இந்த ஆண்டிற்கான கருத்தரங்கு நேற்று தொடங்கியது. முதலில் பல அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமான அறிவிப்புகளை பற்றி இங்கு பார்க்கலாம்.
Android 4.1 (Jelly Bean):
ஸ்மார்ட் போன் உலகில் அதிக நபர்கள் உபயோகிக்கும் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் புதிய வெர்சனை அறிமுக படுத்தி உள்ளனர். Android 4.0 (ICS) இருந்து சில மாறுதல்கள் மற்றும் சில புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி Android 4.1 (Jelly Bean) என்ற இந்த புதிய வெர்சன் உருவாக்கி உள்ளனர். இது தான் கருத்தரங்கின் முதல் அறிவிப்பு.
Nexus 7:
உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் முதல் டேப்லெட்டான Nexus 7 டேப்லேட் கணினியை வெளியிட்டது. Asus நிறுவனத்தின் உதவியுடன் Quad-core Tegra3 processor-ல் இயங்க கூடிய டேப்லெட்டை உருவாக்கி உள்ளது கூகுள். 8GB ($199) , 16GB ($249) ஆகிய இரண்டு மெமரி வகைகளில் வெளியிடப்படுகிறது. மற்றும் புதிய வரவான Android4.1 தொழில் நுட்பத்தில் இயங்க கூடியது மற்றும் 1GB RAM உள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்கள் அறியவும் முன்பதிவு செய்யவும் Nexus 7 Specs & Features செல்லவும்.
Nexus Q:
இந்த கருத்தரங்கில் Nexus Q என்ற புதிய மீடியா பிளேயர் சாதனத்தை வெளியிட்டுள்ளனர். உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்களில் இருந்து உங்கள் ஆடியோ மற்றும் வீடியோவை synchronization செய்து வீட்டில் உள்ள பெரிய திரையில் மற்றும் Google Play மற்றும் Youtube மென்பொருட்களின் உதவியுடன் அனைத்து வீடியோ மற்றும் ஆடியோக்களை உங்கள் வீட்டில் பெரிய திரையில் பார்த்தும் கேட்டும் மகிழலாம். இதனை பற்றி மேலும் அறிய Nexsus Q Features இங்கு செல்லவும். இதன் விலை $299.
Google+ App for Tablets:
சுமார் 250 மில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கும் சமூக தளமான கூகுள் பிளஸ் கடந்த மே மாதம் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் மொபைல்களில் கூகுள் பிளசை உபயோகிக்க புதிய மென்பொருளை வெளியிட்டனர். அந்த வரிசையில் இப்பொழுது டேப்லெட் சாதனங்களில் உபயோகபடுத்த எதுவாக கூகுள் பிளஸ் மென்பொருளை வெளியிட்டுள்ளனர். ஆன்ட்ராய்ட் வெர்சனை இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். iOS டேப்லெட்களுக்கு விரைவில் வெளியிடப்படும்.
Google+ Events:
கூகுள் பிளசில் Events வசதியை புதிதாக சேர்த்து உள்ளனர். இந்த வசதி ஏற்க்கனவே பேஸ்புக்கில் இருப்பதை அனைவரும் அறிவோம். ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்களுக்கு ஆன்லைனில் அழைப்பிதழ் கொடுக்க உதவுவது என சுருக்கமாக சொல்லலாம்.
Google Drive version 2 :
கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் டிரைவ் என்ற புதிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை அறிமுகபடுத்தியது கூகுள் நிறுவனம். இதில் சில புதிய மாற்றங்களை செய்துள்ளனர். முக்கியமாக கூகுள் டிரைவில் உபயோகிக்க பல புதிய மென்பொருட்களை அறிமுக படுத்தியுள்ளனர். இதற்க்கு குரோம் வெப்ஸ்டோர் பகுதியில் கூகுள் டிரைவ் என்ற தனி பிரிவை உருவாக்கி உள்ளனர்.
Offline Maps for Android :
கூகுள் மேப் மொபைல்களில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மென்பொருளாகும். இனி இந்த மென்பொருள் இணையம் இல்லாமலும் இயங்கும். சுமார் 150 நாடுகளுக்கான வரைபடங்களை இணையம் இல்லாமலே கண்டு ரசிக்கலாம். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும். இதனை பற்றி மேலும் அறிய Offline Maps
New Youtube Mobile App:
மொபைலில் யூடியுப் தளத்தை சுலபமாகவும் வேகமாகவும் உபயோகிக்கும் வகையில் புதிய மென்பொருளை ஆன்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கு உருவாக்கி உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய Youtube for Android Mobile இதனை பற்றி மேலும் அறிய Mobile Youtube இங்கு செல்லவும்.
மேலும் பல புதிய அறிவிப்புகளை அறிய இங்கு https://developers.google.com/events/io/ செல்லவும். இந்த கருத்தரங்கு மேலும் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. அதில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகளை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
மற்றும் நேரம் கிடைப்பின் இந்த வசதிகளை பற்றி மேலும் விரிவாக காணலாம். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
|
|










