Google I/O 2012 இரண்டாம் நாள் அறிவிப்பில் சிறந்தவைகள்

நேற்றைய பதிவில் கூகுள் கருத்தரங்கில் முதல் நாள் அறிவிப்புகளில் சிறந்தவைகளை பார்த்தோம். பார்க்காதவர்கள் இங்கு Google I/O 2012 முதல் நாள் அறிவிப்பில் சிறந்தவைகள் சென்று பார்த்து கொள்ளுங்கள். இன்று இரண்டாம் நாளில் என்ன உபயோகமான அறிவிப்புகளை வெளியிட்டனர் என பார்ப்போம்.

Chrome has 310M active users:
IE மற்றும் பயர்பாக்ஸ் உலவிகள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் கூகுளும் இணைய உலவிகளுக்கான போட்டியில் குதித்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கூகுள் குரோம் என்ற உலவியை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் பிடித்து போக நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் வாசகர்களை பெற்று அபார வளர்ச்சியை அடைந்து உள்ளது. இன்று முதல் இடத்தில் உள்ள உலவியும் இது தான். இந்த கருத்தரங்கில் முதலில் அறிவிக்க பட்டது இது தான் அதோடு கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி வரும் பயனர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் அருமையான வீடியோவை கீழே பாருங்கள்.



Chrome for Android moves Stable :
கணினி வழியே இணைய உபயோகிப்பில் அபார வளர்ச்சியை அடைந்த குரோம் உலவி சில வாரங்களுக்கு முன்னர் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் மென்பொருளை வெளியிட்டனர். ஆன்ராய்ட் 4.0 மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த வெளியிட்ட குரோம் மென்பொருள் இது நாள் வரை பீட்டா நிலையிலேயே இருந்தது. சோதனை கட்டங்களை தாண்டி தற்பொழுது Stable வெர்சனாக வெளியிட்டு உள்ளனர். இதனை டவுன்லோட் செய்ய Chrome for Android

Chrome for iOS :
ஆன்ட்ராய்டை தொடர்ந்து குரோம் பிரவுசரை iOS சாதனங்களான iPhone, iPad, iPod  touch ஆகியவற்றிலும் உபயோகிக்க புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். டெஸ்க்டாப் வெர்சனில் உள்ளது போன்றே இதிலும் signed in வசதி உள்ளதால் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, பாஸ்வேர்ட்ஸ் போன்றவைகளை சுலபமாக கையாளலாம். இந்த லிங்கை கிளிக் செய்து ஆப்பிள் ஆப்ஸ்டோரில் இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். 


Google Drive for iOS :
பெரும்பாலானவர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் வசதிக்கு மாறிவரும் நிலையில் கூகுளும் தனது பங்குக்கு Google Drive வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த சமயத்தில் கூகுள் டிரைவை உபயோகிப்பதற்கான மென்பொருளை டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கான மென்பொருளை மட்டும் வெளியிட்டனர். iOS சாதனங்களுக்கு பின்பு வெளியிடப்படும் என அறிவித்து இருந்தனர் அதன் படி இப்பொழுது iOS சாதனங்களுக்கான மென்பொருளை வெளியிட்டுள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய Google Drive for iOS


Google Docs Offline :
கூகுள் டிரைவில் ஒரு பகுதியான கூகுள் டாக்ஸ் வசதியை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இணையத்தில் டாகுமெண்ட்களை (Text file, spread sheet, presentation) போன்றவைகளை உருவாக்க உதவுவது. இனி இந்த வசதியை இணையம் இல்லாமலும் உபயோகிக்கலாம். இணையம் இல்லாத நேரத்திலும் புதியதாக பைல்கள் உருவாக்கலாம் அல்லது ஏற்க்கனவே உருவாக்கிய பைல்களையும் எடிட் செய்து கொள்ளலாம். மீண்டும் உங்கள் கணினியில் இணையம் வேலை செய்யும் பொழுது இந்த மாற்றங்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். ஆப்லைன் வசதியை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதை இந்த லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.



பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற