Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.

பதிவு பயனுள்ள தாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. உபயோக தகவல் நன்றி

    ReplyDelete
  2. தரவிறக்க இணைப்பு இல்லையே அன்பரே

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் இணைப்பு தர மறந்து விட்டேன்... நன்றி

      Delete
  3. தரவிறக்க இணைப்பு இல்லையே அன்பரே yes

    ReplyDelete
  4. மிக்க நன்றி சார். ஆனால் இதற்காக தனியே சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யாமலேயே http://www.onlinebarcodereader.com என்ற தளத்தில் ஆன்லைனில் அப்லோட் செய்தால் நமக்கு விபரங்கள் கிடைக்கும் என்பது கூடுதல் செய்தியாக இங்கு பதிய விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே ஆனால் இன்டர்நெட் இல்லாத கணினியிலும் இந்த முறை பயன்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.. தகவலுக்கு நன்றி

      Delete
  5. migavum payanulla padhivaaga irundhadhu padhivittamaikku nandri
    surendran

    ReplyDelete
  6. Replies
    1. தமிழ்மணம் பதிவுபட்டையைகூட இணைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு விளக்கி கூறியதற்கு தங்களுக்கும், நண்பர் சௌந்தர்க்கும் மிக்க நன்றி.

      நான் பார்த்தவரையில் தாங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாய் இருகின்றன. மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

      Delete
  7. தங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது சசிகுமார் சார். தங்களின் வலைப்பதிவை பின் தொடர போகிறேன்.

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  9. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு
    மிக்க நன்றி...........

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press