1/31/2012

பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி


கூகுள் வழங்கும் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். கூகுள் தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில் பிளாக்கர் வலைபூக்களில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது வரை நம் பிளாக்கரின் வலைபூக்களின் URL .com முடியும் படி இருக்கும் ஆனால் இனி வலைப்பூக்களின் URL .in என முடியும் படி இருக்கும்.

மேலும் வாசிக்க

1/31/2012 by Sasikumar · 49

1/30/2012

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.11 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

1/30/2012 by Sasikumar · 9

1/29/2012

ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய (29-01-2012)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

மேலும் வாசிக்க

1/29/2012 by Sasikumar · 11

1/28/2012

பேஸ்புக்கிலும் வருகிறது Angry Birds விளையாட்டு இலவசமாக

கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல வெர்சன்கள் வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வர இருக்கிறது. வரும் காதலர் தினத்தன்று பேஸ்புக்கில் Angry Birds விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழலாம்.

மேலும் வாசிக்க

1/28/2012 by Sasikumar · 8

ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?

எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து பலரின் ஜிமெயில் கணக்கை முடக்கிவிடுகின்றனர். கூகுள் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாஸ்வேர்ட்கள் திருடப்படுகிறதாம். ஜிமெயில் சேவைகளுக்கு அனைத்திற்கும் ஒரே ஐடி, பாஸ்வேர்ட் உபயோகிப்பாதால் ஒரு கடவுச்சொல் திருடப்பட்டால் கூட பல கூகுள் சேவைகளையும் உபயோகிக்க முடிவதில்லை. இந்த ஆபத்திலிருந்து காக்க உங்களின் ஜிமெயில் கணக்கு திருடப்படாமல் பாதுகாக்க 2-Step Verification என்ற வசதி கூகுளில் உள்ளது. இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்துங்கள்.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் புதிதாக ஒரு கணினியில் இருந்து  உங்கள் கணக்கில் லாகின் செய்யும் பொழுது சரியாக பாஸ்வேர்ட் கொடுத்தாலும் லாகின் ஆகாது உங்கள் மொபைலுக்கு ஒரு Verification Code வரும் அதனை கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும். லாகின் செய்யும் பொழுது IP மாறினால் இந்த verification code கொடுத்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும். இதனால் உங்கள் கூகுள் கணக்கு பாதுகாக்க படும்.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதற்கு முன் உங்கள் கணினியில் CCleaner பயன்படுத்தி அனைத்தையும் சுத்தம் செய்து விடவும். CCleaner லேட்டஸ்ட் வெர்சன் இல்லாதவர்கள் CCleaner v3.15 இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 • முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து இந்த லிங்கில் 2 Step Verfication கிளிக் செய்யுங்கள்.

 • அடுத்து வரும் விண்டோவில் உள்ள Start setup என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் நாடு மற்றும் மொபைல் என்னை கொடுத்து Send Code என்பதை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும் அதில் உள்ள verfication code கொடுத்து Verify என்பதை அழுத்தவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.

 • இவைகளை சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள உள்ள Next பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் உள்ள TURN ON 2-STEP VERIFICATION என்பதை அழுத்தினால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.

 • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் Backup Phone Number , Printable Codes என்ற மேலும் இரண்டு வசதிகள் இருக்கும்.
Backup Phone number:
ஒருவேளை மேலே நீங்கள் கொடுத்த போன் நம்பர் வேலை செய்யும் நிலையில் இல்லை என்றால் verification Code பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அதனை தவிர்க்க மற்றொரு மொபைல் என்னை கொடுத்து இதில் சேமித்து வைத்து கொண்டால் ஒரு மொபைல் வேலை செய்யவில்லை என்றாலும் மற்றொரு மொபைலில் verification code பெறலாம். அதிலுள்ள Add Phone number கொடுத்து மற்றொரு மொபைல் எண்ணையும் SAVE செய்யுங்கள்.

Save கொடுத்து விட்டால் அடுத்த மொபைல் எண்ணும் உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.

Printable backup codes
ஒருசில நேரங்களில் இந்த இரண்டு மொபைல் எண்களும் வேலை செய்யாத நேரத்தில் அவசரத்தில் உதவுவதற்காக ஒரு 10 verification code கொடுத்து இருப்பார்கள் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொண்டால் இது போன்ற சமயங்களில் உபயோகிக்கலாம். இந்த ஒவ்வொரு கோடிங்கும் ஒரு முறை தான் உபயோகிக்க முடியும். 


print எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொண்டால் அவசரத்தில் உதவும். அல்லது Save to test file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியிலும் சேமித்து கொள்ளலாம். ஒருவேளை பத்து கொடிங்கையும் உபயோகித்து விட்டால் Generate new codes கொடுத்து புதிய கோடிங் எடுத்து கொள்ளலாம். 

அவ்வளவு தான் உங்கள் கணக்கிற்கு 2-Step Verification வசதியை ஆக்டிவேட் செய்தாச்சு இனி உங்கள் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

டிஸ்கி: நவீன தொழில்நுட்பத்தில் இந்த வசதி ஆக்டிவேட் செய்திருந்தாலும் ஒரு சில கணக்குகள் திருடப்படுகிறது.

by சசிகுமார் · 11

1/27/2012

கூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்

கூகுள் நிறுவனம் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல தளங்களும் சில பிரபலமாகாத தளங்களும் உள்ளன. கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கையாக சமீபத்தில் கூகுள் பஸ் சேவையை மூடியது. தனது புதிய சமூக வலைத்தளமான கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அந்த வரிசையில் ஆன்லைனில் போட்டோக்களை எடிட் செய்ய உதவும் பயனுள்ள தளமான picnik தளம் மூடப்பட்டு இந்த தளம் கூகுள் பிளசோடு இணைகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த தளத்தின் சேவை மூடப்பட இருக்கிறது. ஆக ஏப்ரல் மாதத்தில் இருந்து கூகுள் பிளசிலேயே போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம். 


இந்த தளம் மூலம் கூகுள் பிளசில் வர இருக்கும் சில வசதிகள்:
 • வெட்டுதல்(Crop), அளவை குறைத்தல்(Resize), திருப்புதல்(Rotate) போன்றவைகளை செய்து கொள்ளலாம்.
 • போட்டோக்களுக்கு அழகான எபெக்ட்ஸ் சேர்த்தல்
 • போட்டோக்களில் சேர்க்க விதவிதமான Frames 
இப்படி மேலும் பல பயனுள்ள வசதிகளை கூகுள் பிளசிலேயே வாசகர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த நடவடிக்கையால் பிக்னிக் தளத்தின் premium கணக்கில் உள்ள வசதிகளை இனி இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம். 

1/27/2012 by சசிகுமார் · 5

1/26/2012

VLC மீடியா பிளேயரில் மறைந்துள்ள மூன்று பயனுள்ள வசதிகள் (பாகம்-2)

பிரபல மீடியா பிளேயரான VLC மீடியா பிளேயரில் உலகம் முழுவதும் பெரும்பாலான கணினிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மீடியா பிளேயர் வெறும் பாடல்களை கேட்கவும் பார்க்கவும் மட்டுமல்லாமல் பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளது. முந்தைய பதிவான VLC மீடியா பிளேயரில் மறைந்துள்ள மூன்று பயனுள்ள வசதிகள் என்ற பதிவில் மூன்று முக்கிய வசதிகளை பற்றி பார்த்தோம். இப்பொழுது அந்த வரிசையில் மேலும் மூன்று பயனுள்ள வசதிகளை பற்றி இன்று பார்ப்போம்.

மேலும் வாசிக்க

1/26/2012 by சசிகுமார் · 13

1/25/2012

மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

கூகுள் நவீன உலகில் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமக்கு தேவையான பல அறிய விஷயங்களையும் அறிந்து கொண்டு நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் கூகுள் தேடியந்திரதினால் மனித மூலையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University  உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க

1/25/2012 by சசிகுமார் · 19

1/24/2012

விக்கிபீடியாவில் அதிகம் அறியப்படாத பல பயனுள்ள சேவைகள்

கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது. விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம். இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் ஏனைய பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

1/24/2012 by சசிகுமார் · 12

1/23/2012

Angry birds போல பிரபலமான விளையாட்டு Cut the Rope இலவசமாக

கடந்த ஆண்டு விளையாட்டு பிரியர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டு Angry Birds ஆகும். இப்பொழுது Angry Birds போலவே மிகப்பிரபலமாக அனைவரும் விரும்பும் விளையாட்டாக இந்த Cut the Rope விளையாட்டு உள்ளது.  Smart போன்களில் Game விளையாடும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும்.  இந்த விளையாட்டிலும் பல பல படிகள் உள்ளது. மொத்தம் 27 level உள்ளது. விளையாட்டின் நோக்கம் சுலபம் அங்கு கயிறில் ஒரு பந்து தொங்கி கொண்டிருக்கும் சில நட்சத்திரங்களும் அங்கு இருக்கும் உங்களிடம் இருக்கும் பிளேடினால் கயிறை அறுத்து அந்த நட்சத்திரங்களை பெற வேண்டும்.  உங்கள் பந்து விழுங்கப்படும் முன் எத்தனை நட்சத்திரங்கள் பெருகிறீர்களோ அதுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு படியும் மிக சுவாரஸ்யமாக உள்ளது.


கீழே உள்ள வீடியோவை பார்த்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் வாசிக்க

1/23/2012 by சசிகுமார் · 5

கூகுளில் தேடல் சந்தேகங்களை நேரடியாக பிளஸ் நண்பர்களிடம் கேட்கும் வசதி

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை நமக்கு சரியாக கண்டறிந்து தரும் வேலையை தேடியந்திரங்கள் செய்கின்றன. இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் இருந்தாலும் தேடல் முடிவுகளை துல்லியமாக காட்டுவதால் அனைவரும் கூகுளையே விரும்புகின்றனர். அதே சமயம் நாம் கூகுளில் முக்கியமான ஒன்றை தேடுவோம், எவ்வளவு தேடியும் நம்மால் சரியான முடிவை பெற முடியில்லை ஆனால் உங்களின் சந்தேகத்திற்கு சரியான தீர்வு உங்கள் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சந்தேகங்களை கூகுளில் இருந்தே நேரடியாக கூகுள் பிளஸ் நண்பர்களிடம் கேட்கும் வசதியை கூகுள் தளம் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 11

1/22/2012

சினிமா நடிகர்களின் கிரிக்கெட் போட்டியை இணையத்தில் லைவாக காண - CCL T20 LIVE

இந்தியா கிரிக்கெட் விளையாட்டின் அடிமை என்று கூறலாம். வேறு எந்த போட்டிக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்திய மக்கள் கிரிக்கெட் போட்டிக்கு கொடுக்கின்றனர். தோல்வியின் அதிர்ச்சியில் உயிரை விட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த அளவுக்கு தீவிரமாக கிரிக்கெட்டை காதலிக்கின்றனர். கிரிக்கெட்டிற்கு அடுத்து இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது சினிமா. இந்த இரண்டு விஷயங்களுக்கும் இந்தியர்கள் அடிமை என்றே கூறலாம்.  இதில் இன்னும் சுவாரஸ்யமாக இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். அது தான் சினிமா நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி CCL T20. 20 ஓவர்களை கொண்ட இந்த போட்டி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது வெற்றிகரமாக இரண்டாவது சீசன் இந்த வருடம் நடந்து கொண்டுள்ளது. இந்த போட்டியை இணையத்தில் லைவாக காண்பது என பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

1/22/2012 by சசிகுமார் · 6

1/21/2012

விண்டோஸ் 7 கணினிகளுக்கு அழகழகான தீம்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய

உங்கள் கணினியை ஒரே தோற்றத்தில் பார்த்து போர் அடித்து விட்டதா கவலையே படாதிங்க உங்கள் கணினியை உங்கள் விருப்பப்படி அழகாக மாற்றலாம்.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 மென்பொருளில் உள்ள பல வசதிகளில் தீம்கள் வசதியும் ஒன்று. இந்த தீம்களை நாம் விதவிதமாக மாற்றலாம். இந்த தீம்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே இலவசமாக அனைவருக்கும் அளிக்கிறது. விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் எப்படி இந்த தீம்களை இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போம்.


மேலும் வாசிக்க

1/21/2012 by சசிகுமார் · 9

பேஸ்புக் போட்டோக்களுக்கு சுலபமாக விதவிதமான Effects கொடுக்க

பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் பலவிதமான போட்டோக்களை நாம் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த போட்டோக்களுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக போட்டோக்களுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன ஆனால் அந்த தளங்களில் நேரடியாக பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் பேஸ்புக்கில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து அந்த தளத்தில் அப்லோட் செய்து டிசைன் பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து பிறகு பேஸ்புக்கில் அப்லோட் செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக போட்டோக்களுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் வாசிக்க

by Sasikumar · 9

1/20/2012

குரோமில் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?

ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

1/20/2012 by சசிகுமார் · 11

1/19/2012

அட்சென்ஸ் பயனாளிகளுக்கு புதிய வசதி கூகுள் வெளியிட்டது - Adsense Publisher Toolbar

இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள், ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்புவது கூகுள் அட்சென்ஸ் விளம்பர சேவையாகும். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் அட்சென்ஸ் தான். தற்பொழுது கூகுளின் அட்சென்ஸ் விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் தீட்டி வருகின்றன. நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வர முக்கிய காரணமாக இருப்பது கூகுள் அட்சென்ஸ் என்றால் மிகை அல்ல.

மேலும் வாசிக்க

1/19/2012 by சசிகுமார் · 18

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்(நேற்று ஆணி அதிகம் இணையம் பக்கமே வர முடியல இதனால் இன்று எழுதுகிறேன்).  அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 12

1/17/2012

SOPAக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்கிபீடியா அதிரடி முடிவு- Stop SOPA

சமூக தளங்களை பார்த்து இப்பொழுது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கலங்கி போய் உள்ளன. ஏற்க்கனவே இந்த சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்த வரிசையில் அமெரிக்க அரசாங்கமும் குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்யும் SOPA(Stop Online Piracy Act) என்ற புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்க்கு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பிரபல இணைய நிறுவனங்களான Facebook, Google, Twitter, LinkedIn, wikipedia போன்ற அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. (SOPA க்கு ஆதரவு: ஒரு வாரத்தில் 72000 டொமைனை இழந்தது GoDaddy நிறுவனம்)

மேலும் வாசிக்க

1/17/2012 by சசிகுமார் · 8

1/16/2012

ஜிமெயில் Attachment பைல்களை நேரடியாக கூகுள் டாக்சில்(Docs) சேமிக்க

இணையம் உபயோகப்படுத்தப்படும் அனைவராலும் பயன்படுத்தப்படும் வசதி என்று சொன்னால் அது மெயில் சேவையாக தான் இருக்கும். இதில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்களின் ஈமெயில் சேவைகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக இதில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மிக அதிகம். இதில் உள்ள பல்வேறு வசதிகள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் வாசகர்களை இதனை விரும்பி பயன்படுத்துகிறார்கள்.  இணையத்தில் கோப்புகளை சேமிக்க உதவுவது கூகிள் டாக்ஸ் வசதியாகும். ஜிமெயிலில் வரும் அட்டாச்மென்ட் பைல்களை எப்படி நேரடியாக கூகுள் டாட்சில் சேமிப்பது என இன்று பார்ப்போம்.

மேலும் வாசிக்க

1/16/2012 by சசிகுமார் · 9

1/15/2012

விண்டோஸ் கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி(XP, Windows7)

விண்டோஸ் கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் System Restore Point உங்கள் கணினி செட்டிங்க்சை பேக்கப் எடுத்து வைப்பது என கூறலாம்.

மேலும் வாசிக்க

1/15/2012 by சசிகுமார் · 7

1/14/2012

வலைப்பூக்களுக்கு இலவச டொமைன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

வந்தேமாதரம் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 5 வாசகர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச (.in)டொமைன் பெயர் வழங்கப்படும் என்று சென்ற வாரத்தில் அறிவித்து இருந்தேன். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கமென்ட் பகுதியில் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தேன். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால் கூறிய படி இன்று வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

1/14/2012 by சசிகுமார் · 26

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை யூடியூபில் Live Streaming காண

இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை வைத்துள்ள தளம் யூடியுப் தளமாகும். யூடியுப் தளம் தற்பொழுது நிகழ்ச்சிகளை லைவ் வீடியோவாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. மெக்காவில் லைவ் வீடியோ, IPL கிரிக்கெட் போட்டிகளை லைவில் காட்டியது இந்த வரிசையில் வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் தொடங்க இருக்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை Live Streaming யூடியூபில் காணும் வசதியை உருவாக்கி உள்ளது.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்றாலே ஆட்டத்தில் அனல் பறக்கும் ரசிகர்களையும் வெகுவாக கவரும்.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 3

1/13/2012

பிளாக்கர் கமென்ட்டில் Reply வசதி கிடைக்காதவர்களுக்கு தீர்வு

வாசகர்கள் நெடுநாளாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Reply Comment வசதியை பிளாக்கர் தளம் அறிமுகபடுத்தியது. இதனை பற்றி விரிவாக நேற்றைய பதிவில் பார்த்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த Reply  வசதி பெரும்பாலான வலைபூக்களில் தெரியவில்லை. நேற்றைய பதிவில் உள்ள வழிமுறையை செய்தும் உங்கள் பிளாக்கரில் இந்த வசதி தெரிய வில்லையா ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது தான். உங்கள் டெம்ப்ளேட்டில் சில கொடிங்க்ஸ் சேர்ப்பதன் மூலம் இந்த வசதியை கொண்டு வரலாம் அது எப்படி என கீழே பார்ப்போம்.


மேலும் வாசிக்க

1/13/2012 by சசிகுமார் · 20

ஆப்லைனில் ஜிமெயில் உபயோகிப்பதில் மேலும் சில புதிய வசதிகள்

வந்தேமாதரத்தில் முந்தைய பதிவில் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் ஜிமெயிலை உபயோகிப்பது எப்படி என்று பார்த்து இருந்தோம். இப்பொழுது அந்த ஆப்லைன் சேவையில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது ஜிமெயில் நிறுவனம். (ஜிமெயிலை ஆப்லைனில் உபயோகிப்பது எப்படி என இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.)


Download Mai from Past:
ஆப்லைன் உபயோகத்தில் இனி ஒரு மாதத்திற்கு முன் வந்த ஈமெயிலை கூட டவுன்லோட் செய்து பார்த்து கொள்ளலாம். மற்றும் இன்பாக்ஸில் எவ்வளவு நாளுக்கு முந்தைய மெயில் வர வேண்டும் என்பதை  இதில் கிளிக் செய்து நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

Attachment download:
உங்கள் ஈமெயிலுக்கு வந்துள்ள attachment பைல்களை இனி ஆப்லைனிலேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Shortcuts:
உங்கள் ஜிமெயில் கணக்கில் ஷார்ட்கட் உபயோகத்தை ஆக்டிவேட் செய்து வைத்து இருந்தால் இனி ஆப்லைனிலும் Shortcut உபயோகிக்கலாம். ஜிமெயில் கணக்கில் shortcut வசதியை ஆக்டிவேட் செய்ய இந்த பதிவில் சென்று பாருங்கள்.

மற்றும் ஆப்லைன் வசதியில் இதற்க்கு முன்பு இருந்த சில பிழைகளையும் கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

by சசிகுமார் · 7

1/12/2012

பிளாக்கரில் வந்தாச்சு Comment Reply வசதி ஆக்டிவேட் செய்ய -Threaded Comment system

வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Comment Reply வசதி பிளாக்கரில் வந்துவிட்டது. பிளாக்கரில் இது வரை குறையாக இருந்து வந்த இந்த வசதியை பிளாக்கர் தளம் வெளியிட்டுள்ளது. வேர்ட்பிரசில் உள்ள கமென்ட் சிஸ்டம் போலவே நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
Reply அழுத்தி அவருடைய கேள்விக்கு கீழேயே பதில் போடலாம்.

மேலும் வாசிக்க

1/12/2012 by sasikumar · 35

1/11/2012

கூகுள் தேடலில் புதிய வசதி அறிமுகம் - Search Plus

ஒட்டுமொத்த இணைய பயனர்களின் நாடித்துடிப்பு கூகுள் தேடியந்திரம். இணையத்தில் இருக்கும் தகவல்களை சல்லடை போட்டு சலித்து சரியான முடிவுகளை மட்டுமே வாசகர்களுக்கு கொடுப்பதால் தான் உலகளவில் இன்றும் கூகுள் தேடியந்திரம் முதல் இடத்தில் உள்ளது. கூகுள் நிறுவனம் அடிக்கடி ஏதாவது ஒரு புதிய வசதியை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும்.  வாசகர்களுக்கு தேடல் முடிவுகளை சிறப்பாக கொடுக்க இப்பொழுது Search+ என்ற புதிய வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது. இனி நீங்கள் கூகுளில் தேடும் பொழுது கூகுள் பிளசில் உங்கள் நண்பர்கள் Private ஆகவோ அல்லது Public-காகவோ பரிந்த தளங்களும் வரிசைப்படுத்தி காட்டும்.


மேலும் வாசிக்க

1/11/2012 by சசிகுமார் · 13

கணினியில் உங்களின் முக்கியமான பாஸ்வேர்ட்களை கவனமாக பாதுகாக்க - KeePass Safe2.18

போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகில் ஹாக்கிங் செயல்களில் இருந்து உங்கள் கணக்குகளை பாதுகாக்க மிகவும் கடினமான கடவுச்சொற்களை உங்கள் கணக்குகளுக்கு கொடுத்து இருப்பீர்கள். இது போல ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொற்களை கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது இயலாத காரியம். ஏதாவது ஒரு கணக்கை ஒரு வாரம் கழித்து ஓபன் செய்தால் ஒரு சிலருக்கு சுத்தமாக அந்த பாஸ்வேர்ட் மறந்து விடும். ஒரே பாஸ்வேர்ட் கொடுத்தாலும் ஹாக்கிங் பிரச்சினை வெவ்வேறு பாஸ்வேர்ட் கொடுத்தாலும் மறந்து விடும் பிரச்சினை என ஒரே பிரச்சினையாக உள்ளதா உங்களுக்காகவே ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் உள்ளது.


மேலும் வாசிக்க

by sasikumar · 12

1/10/2012

ஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய (9-01-2012)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

மேலும் வாசிக்க

1/10/2012 by சசிகுமார் · 13

1/09/2012

உங்கள் பிளாக்கிற்கு என ஒரு Android App இலவசமாக உருவாக்க - AppsGeyser

Android மொபைல்களில் உபயோகிக்க லட்சகணக்கான மென்பொருட்கள்(Apps) உள்ளது. நீங்களும் உங்கள் பிளாக்கிற்கென ஒரு Android மென்பொருளை உருவாக்கி உங்கள் வாசகர்கள் சுலபமாக உங்கள் தளத்தை மொபைலில் படிக்கும் வசதியை அளிக்கலாம். இந்த Android App உருவாக்க அதிகளவிலான தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அதிக நேரமும் செலவாகாது. அதிக பட்சம் ஐந்து நிமிடத்திற்குள் மென்பொருளை உருவாக்கிவிடலாம். கீழே உள்ள வழிமுறையை தொடருங்கள்.

மேலும் வாசிக்க

1/09/2012 by சசிகுமார் · 14

1/08/2012

பேஸ்புக்கின் தற்கொலை பாதுகாப்பு படை - புகார் அளிப்பது எப்படி?

உலகளவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 1மில்லியன் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இரண்டு நிமிடம் யோசிக்காமல் தங்கள் உயிர்களை மாய்த்து கொள்ளும் நபர்களை அந்த செயலில் இருந்து காக்கும் நோக்கிலும் உயிர் வாழ்வதின் அவசியத்தை அவர்களுக்கு தெரிவிக்கவும் பிரபல சமூக தளமான பேஸ்புக் தற்கொலை பாதுகாப்பு பகுதியை உருவாக்கியுள்ளது. நீங்கள் பேஸ்புக்கில் எங்கேனும் இது போன்ற செய்திகள் பகிரப்பட்துள்ளதை\ கண்டால் உடனே இந்த தற்கொலை பாதுகாப்பு பகுதியில் புகார் தெரிவிக்கலாம். 

மேலும் வாசிக்க

1/08/2012 by சசிகுமார் · 11

ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற

ஜிமெயில் மட்டுமின்றி அனைத்து ஈமெயில் சேவைகளிலும் மெயிலில் attachment வந்திருந்தால் ஒரு பின்  போன்ற லோகோ தெரிவதை பார்த்து இருப்பீர்கள். அட்டாச்மென்ட்டில் எந்த பைல் வந்திருந்தாலும் அனைத்திற்கும் இந்தே ஒரே மாதிரியான லோகோ காட்டுவதால் மெயிலை திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையான பைல் உள்ளது என்பதை கண்டறிய முடியாது. இதனை மாற்றி எந்த பைல் அட்டாச்மென்ட்டில் உள்ளதோ அந்த பைலின் லோகவை தெரிய வைப்பது எப்படி என கீழே பாருங்கள். கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள் இதற்க்கு உள்ள வித்தியாசம் தெரியும்.

மாற்றுவதற்கு முன் 


மாற்றிய பிறகு 

ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற:

குரோம் நீட்சி என்பதால் குரோம் இது போன்று அட்டாச்மென்ட் லோகோவை மாற்ற குரோம் பிரவுசர் உபயோகப்படுத்த வேண்டும். முதலில் குரோம் பிரவுசரில் இந்த லிங்கில் சென்று மேலே உள்ள Added to Chrome என்பதை கொடுக்கவும். சிறிய விண்டோ வரும் அதில் Install என்பதை கொடுக்கவும்.


மிக சிறிய நீட்சி என்பதால் உடனே உங்கள் பிரவுசரில் இனைந்து விடும். இப்பொழுது உங்கள் ஜிமெயிலில் வந்துள்ள அட்டாச்மென்ட் ஈமெயில்களை பாருங்கள் லோகோ மாறி இருக்கும். இனி மெயில்களை திறக்காமலே உள்ளே என்ன வகையான பைல் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளது என காணலாம்.

ஜிமெயில் Search Box ல் has:attachment என கொடுத்தால் அனைத்து அட்டாச்மென்ட் மெயில்களையும் காணலாம்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

by சசிகுமார் · 13

1/07/2012

வலைப்பூவின் பேஜ்வியுஸ் அதிகரிக்க ஒரு புதிய சூப்பர் விட்ஜெட் - RECOMMENDED FOR U

இந்த பதிவில்(சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 2)) வலைப்பூவின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்ஜெட்களை மட்டும் உங்களின் வலைப்பூவில் இணையுங்கள் என்று சொல்லி இருந்தேன் அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட் மிக அற்ப்புதமான விட்ஜெட். இந்த Recomended விட்ஜெட் மூலம் வலைப்பூவின் pageviews அதிகரிக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும். நம் பதிவிற்கு வரும் வாசகர்கள் பதிவின் கீழ் பகுதிக்கு சென்றால் இந்த விட்ஜெட் தோன்றும். உங்களின் பாப்புலர் பதிவுகள் மட்டும் இதில் தெரிவதால் வாசகர்கள் கிளிக் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விட்ஜெட் அதிக இடமும் எடுத்து கொள்வதில்லை. சமூக தள பட்டன்களும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.

மேலும் வாசிக்க

1/07/2012 by சசிகுமார் · 23

1/06/2012

மூன்றாம் ஆண்டில் வந்தேமாதரம் முன்னிட்டு வலைப்பூக்களுக்கு இலவச டொமைன்

எதுவுமே தெரியாமல் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாண்டுகளை கடந்து வந்துவிட்டது வந்தேமாதரம் தளம். தமிழில் தொழில்நுட்ப செய்திகளை வழங்கி வரும் வந்தேமாதரம் இணையதளம் இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து கொண்டு மூன்றாம் ஆண்டை தொடங்குகிறது. நம் குழந்தைக்கு  பிறந்தநாள் கொண்டாடினால் ஏற்ப்படும் சந்தோசமான தருணம் போல இதையும் உணர்கிறேன். இதற்க்கு பின் என்னுடைய உழைப்பு, நேரச் செலவு, பொருட்செலவு, மனக்கஷ்டம் ஆகியவை இருந்தாலும் அதில் என்னுடைய தளத்திற்காக செய்கிறோம் என்ற ஒரு சுயநலமும் உள்ளது. ஆனால் ஒரு லாப நோக்கமின்றி இரண்டாண்டுக்களுக்கு மேல் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களாகிய உங்களால் தான் இது முழுக்க முழுக்க சாத்தியமானது.

மேலும் வாசிக்க

1/06/2012 by சசிகுமார் · 66

1/05/2012

இரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து ஆகாஷ் கணினி உலக சாதனை

ஆகாஷ் டேப்லேட் கணினிகளை பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான விலையுள்ள டேப்லேட் கணினி முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலில் Rs.2500 க்கு இதன் முதல் பதிப்பு வெளியாக அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இதன் அடுத்த வெர்சனான Ubislate 7 இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பெருமாலானவர்கள் இந்த கணினிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் Datawind நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் ஆர்டர்கள் குவிகிறது. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே வாரத்தில் 14லட்சம் கணினிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு 1,00,000 கணினிகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய சாதனை ஆகும்.  இதற்க்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின் iPad நான்கு வாரத்தில் 1,000,000 விற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. ஆகாஷ் இந்த இமாலய இலக்கை இரண்டே வாரத்தில் முறியடித்து விட்டது. 

இவ்வளவு ஆர்டர்களை எதிர்பார்க்காத Datawind நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இந்த முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் கொச்சின்,நொய்டா மற்றும் ஹைதராபாத் என இந்தியாவில் மூன்று உற்பத்தி நிறுவனங்களை தொடங்க உள்ளது. 


மிக மலிவான விலையில் கிடைப்பதாலும் சிறந்த வசதிகள் இருப்பதாலும் இவ்வளவு கணினிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கும் டேப்லேட் கணினிகளோடு இதனை ஒப்பிட்டு பார்த்து இதன் தரம் சரியில்லை என கூறுவது ஏற்புடையதல்ல. சாதரணமாக Android OS கொண்ட மொபைல் போன்கள் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்கும் நிலையில் அதை விட அதிக வசதிகள் கொண்ட இந்த கணினிகள் Rs. 2999 க்கு கிடைப்பது பாராட்டுக்குரியது தான் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த Ubislate7 கணினியின் வசதிகளை விவரமாக அறியவும் முன்பதிவு செய்யும் வழிமுறையை அறியவும் இந்த பதிவிற்கு ஆகாஷ் கணினியின்(Tablet) அடுத்த வெர்சன் UBISLATE 7 முன்பதிவு செய்ய செல்லுங்கள்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Tech Shortly

10 best chrome extension for better Gmail experience

1/05/2012 by சசிகுமார் · 10

மொபைல்களுக்கான மிக வேகமான பிரவுசர் UC Browser 8 இலவசமாக டவுன்லோட் செய்ய

மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும். இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
 • இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.
 • Multi Tabs வசதி.
 • மிகச்சிறந்த தேடியந்திரம்
 • மிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.
 • மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.
 • Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
 • பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
 • இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

Download Links


மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/ 

by sasikumar · 16

1/04/2012

மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு

மணிக்கணக்கில் வரிசையில் காத்துகிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு இது நாள் வரை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது வாசகர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடி செல்லவோ வேண்டாம் எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யலாம். இதற்க்கு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு(GPRS) செயல்பாட்டில் இருப்பது அவசியம்.

மேலும் வாசிக்க

1/04/2012 by சசிகுமார் · 11

1/03/2012

VLC மீடியா பிளேயரை அழகழகான தோற்றத்திற்கு மாற்ற - VLC SKINS

VLC மீடியா பிளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது. சில வசதிகள் இதில் மறைந்து உள்ளது(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்). இன்று நாம் பார்க்க போகும் வசதியும் ஒரு விதத்தில் மறைந்து உள்ளதுதான். எந்த ஒரு தோற்றத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தால் நாளடைவில் அது நமக்கு பிடிக்காமல் போய்விடும் அது தான் மனித இயல்பு. அப்படி வருடக்கணக்கில் உபயோகித்து கொண்டிருக்கும் VLC மீடியா பிளேயரை ஒரே தோற்றத்தில் பார்த்து சலித்து விட்டதா? கவலையை விடுங்கள். VLC மீடியா பிளேயரை வெவ்வேறு அழகழகான உங்களுக்கு பிடித்த தோற்றத்திற்கு ஒரே நிமிடத்தில் மாற்றி விடலாம். உதாரணத்திற்கு கீழே உள்ளதை பாருங்கள்.

மேலும் வாசிக்க

1/03/2012 by சசிகுமார் · 11

1/02/2012

கோடிங் எழுத தெரியாதவர்களும் இனி அழகான HTML டேபிள்கள் உருவாக்க

பிளாக்கர் பதிவுகளில் ஏதேனும் டேபிள் சேர்க்க விரும்பினால் அதற்க்கான கோடிங் எழுதி டேபிள் உருவாக்க வேண்டும். ஆனால் பதிவு எழுதும் அனைவருக்கும் கோடிங் எழுத தெரியாது ஆதலால் அவருடைய பதிவுகளில் டேபிள்கள் சேர்க்க வேண்டிய தேவை இருந்தும் சேர்க்காமல் விட்டு விடுவர். அப்படி பட்டவர்களும் சுலபமாக அவர்களின் பதிவுகளில் HTML Table வைப்பது எப்படி என இன்று பார்ப்போம். இரண்டே நிமிடத்தில் அழகழகான டேபிள்கள் உருவாக்கலாம்.

சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்க போகும் தளம் மிக சுலபமாக உள்ளது. இந்த தளத்திற்கு சென்றவுடன் உங்கள் கணினி விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும்.

மேலும் வாசிக்க

1/02/2012 by சசிகுமார் · 18