2/29/2012

பேஸ்புக் வாசகர்களை அதிகரிக்க அழகான Popup Facebook Like Box விட்ஜெட்

கூகுள் பிளாக்கர் தளங்களை இலவசமாக கொடுத்தாலும் அதை பிரபல படுத்த நாம் கொடுக்கும் செலவு அதிகமே. நேரத்தோடு ஒப்பிடுகையில் பணம் பெரிதான காரியம் அல்ல. திரட்டிகளிலும் சமூக தளங்களும் நம் பதிவுகள் பலரை சென்றடைய உதவுகிறது. இதில் சமூக தளங்களில் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தான் வாசகர்களின் எண்ணிக்கையும் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் சமூக தளங்களில் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பதிவர்களின் முதன்மையான செயலாகும். அந்த வகையில் பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் வாசகர்களை அதிகரிக்க ஒரு சூப்பர் விட்ஜெட்டை உங்களை பிளாக்கில் சேர்ப்பது எப்படி என பார்க்கலாம்.


மேலும் வாசிக்க

2/29/2012 by Sasikumar · 10

2/28/2012

நாளையோடு Google Friend Connect வசதியை நிறுத்துகிறது கூகுள்

கூகுள் பிளஸ் தளத்தை பிரபல படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. Google Buzz, Picnic அந்த வரிசையில் Google Friend Connect வசதியை நிறுத்த போகிறது. வலைதள பதிவர்களுக்காக மிகவும் பயனுள்ள 30க்கும் மேற்ப்பட்ட விட்ஜெட்டுக்களை வழங்கும் இலவச சேவையாகும்.(பதிவர்களுக்காக கூகுள் தரும் அசத்தலான 30 வசதிகள்) இதில் முக்கியமான விட்ஜெட் பாலோயர் விட்ஜெட் ஆகும். பெரும்பாலான தளங்களில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான விட்ஜெட் இது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் பிளாக்கர் தளங்கள் தொடர்ந்து இந்த வசதியை பெறலாம். மற்ற ஹோஸ்டிங்(Wordpress, Tumblr) உபயோகிப்பவர்களுக்கு இனி இந்த விட்ஜெட்கள் இயங்காது.


மேலும் வாசிக்க

2/28/2012 by Sasikumar · 16

2/27/2012

புதிய தலைமுறை செய்தி சேனலை இணையத்தில் நேரடியாக(Live) காண

ஒரே செய்தியை ஆறு மணி நேரத்திற்கும் மேல் பார்த்து கொண்டிருந்த நமக்கு புதிய தலைமுறை சேனல் ஒரு நல்ல மாற்று தான். அரசியலும், தொலைக்காட்சியும் பின்னி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் எந்த சேனலிலும் நடுநிலையான செய்திகளை பார்க்க முடியாமல் இருந்த நமக்கு புதியதலைமுறை ஆறுதல் அளிக்கிறது. ஆங்கில சேனல்களுக்கு இணையாக செய்திகளை விரைவாகவும், தெளிவாகவும், விரிவாகவும் அளிப்பதால் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய சேனலாக மாறி உள்ளது புதிய தலைமுறை செய்தி சேனல் என்பதை மறுப்பதற்கில்லை.


வெளிவந்த ஒரு சில மாதங்களிலேயே ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த புதிய தலைமுறையை பாராட்டி தான் ஆக வேண்டும். அரைத்த மாவையே மாற்றி மாற்றி அரைத்து கொண்டு இருக்காமல் வித்தியாசத்தை அளிப்பதும் வெற்றி காரணம் என நினைக்கிறேன். புதிய தலைமுறையின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இதில் பணி புரியும் பெரும்பாலானவர்கள்  இளைஞர்கள் என நினைக்கிறேன். இவர்கள் அளிக்கும் உடல் உழைப்பு தான் இவ்வளவு விரைவில் மக்கள் மனதில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகும்.

மேலும் வாசிக்க

2/27/2012 by Sasikumar · 17

2/26/2012

மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய

பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.

மேலும் வாசிக்க

2/26/2012 by Sasikumar · 16

2/24/2012

PDFZilla Converter மென்பொருள் முற்றிலும் இலவசமாக மதிப்பு $49.95 [Giveaway]

இணையத்தில் ஏராளமான தகவல்கள் PDF வடிவில் கிடைக்கின்றன. ஏனென்றால் PDF பைல்களை நேரடியாக யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் தகவல்களை PDF வடிவில் தருகின்றனர்.  PDF பைல்களை நமக்கு வேண்டிய பார்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன. இருந்தாலும் கட்டண மென்பொருளில் உள்ள வசதிகளையும், தரத்தையும் நாம் இலவச மென்பொருளில் பெறமுடியாது.  PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். சாதரணமாக இந்த மென்பொருளின் விலை $49.95 ஆகும். ஆனால் தற்பொழுது இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் வழங்குகிறார்கள். முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் நாம் மென்பொருளை டவுன்லோட்செய்து கொள்ளலாம்.


மேலும் வாசிக்க

2/24/2012 by Sasikumar · 11

2/23/2012

ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox

ஜிமெயிலில் ஈமெயில்களை Schedule செய்து அனுப்பவது எப்படி என பார்க்க போகிறோம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டி இருக்கும்.  உதாரணமாக இரவு 12 மணிக்கு என வைத்து கொள்வோம். இதனால் நீங்கள் இரவு 12 மணிவரை கண்விழித்து ஈமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஈமெயிலுக்கு இரவு 12 மணிக்கு Schedule செய்து விட்டால் போதும் உங்களுடைய ஈமெயில் சரியாக நீங்கள் தேர்வு செய்த நேரத்திற்கு மற்றவர்களுக்கு சென்று விடும். ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது பெரிதும் பயன்படும். ஞாபகம் வரும் பொழுது ஈமெயிலை டைப் செய்து Schedule செய்து விடலாம். குறிப்பாக வாழ்த்து செய்திகள் அனுப்ப பெரிதும் பயன்படும்.


மேலும் வாசிக்க

2/23/2012 by Sasikumar · 7

2/22/2012

ஏர்டெல் வழங்கும் இலவச Missed Call Alert சேவை ஆக்டிவேட் செய்ய

பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற நிறுவனங்களோடு உள்ள போட்டியை சமாளிக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஏதாவது வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஆன்லைன் வசதிகளை அளித்தது இப்பொழுது வாசகர்களுக்கு இலவசமாக Missed Call Alert(MCA) வசதியை வழங்குகிறது.

மேலும் வாசிக்க

2/22/2012 by Sasikumar · 11

2/21/2012

விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற

விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.

மேலும் வாசிக்க

2/21/2012 by Sasikumar · 14

2/20/2012

VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய

இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள் திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர்.

மேலும் வாசிக்க

2/20/2012 by Sasikumar · 15

2/18/2012

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய(18-02-2012)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

மேலும் வாசிக்க

2/18/2012 by Sasikumar · 9

2/17/2012

பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.

மேலும் வாசிக்க

2/17/2012 by Sasikumar · 18

2/16/2012

பேஸ்புக்கின் புதிய Lightbox Photo Viewer-ஐ செயலிழக்க செய்ய சுலபமான மூன்று வழிகள்

சமூக தளங்களுக்குள் உள்ள போட்டியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கூகுள் பிளசில் உள்ளது போலவே பேஸ்புக் தளத்திளும் புதிய Photo viewer அறிமுக படுத்தி உள்ளனர். இப்பொழுது பேஸ்புக்கில் ஏதாவது போட்டோவை ஓபன் செய்தால் சைட்பாருடன் கூடிய Pop-up விண்டோவில் புதிய Photo Viewer ஓபன் ஆகும். Lightbox வசதியில் போட்டோ ஓபன் ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு புதிய வசதி பிடிக்காததாலும் இந்த புதிய Photo Viewer-ஐ செயலிழக்க செய்ய சுலபமான மூன்று வழிகளை காணலாம். இதற்க்கு எந்த தளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, எந்த நீட்சியும் இணைக்க வேண்டியதில்லை உங்கள் கீபோர்ட் மூலமாகவே செய்து விடாலம்.

மேலும் வாசிக்க

2/16/2012 by Sasikumar · 10

2/15/2012

Airtel Prepaid வாடிக்கையாளர்களுக்கும் இனி ஆன்லைன் வசதிகள் - புதிய சலுகை

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் கூட செல்போன்கள் பயன்படுத்தும் அளவுக்கும் செல்போன்கள் வளர்ச்சி பெற்று விட்டது. செல்போன் சேவையில் அதிக வாடிக்கையாளர்களைகொண்டு இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 5 இடத்திலும் இருக்கும் நிறுவனம் Airtel நிறுவனமாகும். இந்த Airtel நிறுவனம் இப்பொழுது ஒரு புதிய சலுகையை அறிவித்து உள்ளனர். அதன் படி இனி Pre-Paid வாடிக்கையாளர்களும் ஆன்லைனில் அக்கௌன்ட் ஓபன் செய்து கொண்டு ஆன்லைன் வசதிகளை உபயோகிக்கலாம்.  முன்பு Postpaid வாடிக்கையாளர்கள் மட்டும் தான் இந்த வசதிகளை பயன்படுத்த முடியும் இனி Prepaid வாடிக்கையாளர்களுக்கும்.


மேலும் வாசிக்க

2/15/2012 by Sasikumar · 15

2/14/2012

கணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro மென்பொருள் இலவசமாக [worth $19.95]

கணினியில் தீங்கிழைக்கும் வைரஸ்கள், மால்வேர்கள் மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற கிளீனிங் மேன்போருட்கலோத் ஒப்பிடுகையில் 300% மேல் சிறப்பாக இயங்குகிறது. தேவையில்லாத Registry பைல்களை அழித்து சுத்தமாக்கி உங்கள் கணினியின் பழைய வேகத்தை கொண்டு வருகிறது. அதே சமயம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிமானவர்கள் இந்த மென்பொருளை உபயோகித்து கொண்டு உள்ளனர்.

மேலும் வாசிக்க

2/14/2012 by Sasikumar · 11

2/13/2012

குரோமில் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவியலில் எல்லாமே சாத்தியமாகி உள்ளது. Text to Speech என்பது எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றி நமக்கு வழங்கும் தொழில்நுட்பமாகும். உதாரணமாக தினமும் பல்வேறு இணைய தள செய்திகளை நீங்கள் படிப்பவராக இருந்தால் இனி ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் கண்களை உறுத்தி நீங்கள் பார்த்து படிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் படிக்க வேண்டிய பகுதியை செலக்ட் செய்து இந்த வசதியை கொடுத்தால் போதும் நீங்கள் படிக்க வேண்டியதை உங்கள் கணினியே படித்து காட்டும் அதுவும் அழகான பெண் குரலில்.  குரோம் உலவியில் அந்த வசதியை எப்படி கொண்டுவருவது என கீழே உள்ள வழிமுறையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விரிவாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

மேலும் வாசிக்க

2/13/2012 by Sasikumar · 15

2/11/2012

கூகுள் பிளசில் Translate வசதியை கொண்டு வர [Chrome]

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுளால் களமிறக்கப்பட்ட கூகுள் பிளஸ் இணையதளம் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வருட முடிவிற்குள சுமார் 400 மில்லியன் வாசகர்களை கூகுள் பிளஸ் பெறும் என இணைய வல்லுனர்கள் கணித்துள்ளனர். மேலும் வாசகர்களை கவர நாளுக்கு நாள் பல்வேறு வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் புகுத்தி கொண்டு உள்ளனர். அந்த வரிசையில் கூகுளின் மிக சிறந்த சேவையான Google Translate வசதியை எப்படி கூகுள் பிளஸ் தளத்தில் கொண்டு வருவது என இங்கு பார்ப்போம்.

மேலும் வாசிக்க

2/11/2012 by Sasikumar · 9

2/09/2012

இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும் ஆனால் போட்டோஷாப் மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் போட்டோஷாப் மென்பொருளை கிராக் செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் போட்டோஷாப் போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோசாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கொடுப்பது தான் ஆச்சர்யம்.  இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

மேலும் வாசிக்க

2/09/2012 by Sasikumar · 13

2/08/2012

கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க - Terminal for Google

கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும் வாசிக்க

2/08/2012 by Sasikumar · 10

2/06/2012

மொபைல் உபயோகிப்பவர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

மொபைல் போன்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிமிதமாக உள்ளது. உலகிலேயே சீனா தான் மொபைல் போன்கள் உபயோகத்தில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த இரு நாடுகளில் உள்ள அதிகமான மக்கள் தொகையும் இதற்க்கு காரணம் என சொல்லலாம். மொபைல் போன்கள் உபயோகம் உலகில் பெருமாளான நாடுகளில் உள்ளதால் ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் உபயோகிப்பவர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.


மேலும் வாசிக்க

2/06/2012 by Sasikumar · 12

யூடியுப் வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க - Skip Ads on Youtube

இணையத்தில் வீடியோக்களை பார்க்க அனைவரும் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது யூடியுப் தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக அப்லோட் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர். குறிப்பாக இந்திய பயனர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 55 வீடியோக்களுக்கு மேல் பார்க்கிறார்களாம்.  யூடிபில் நாம் ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் ஓடும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அது வரை நாம் காத்துகொண்டு இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.

மேலும் வாசிக்க

by Sasikumar · 14

2/05/2012

கூகுளில் மறைந்துள்ள Pacman Game விளையாடுவது எப்படி?

எத்தனை முறை தாங்க இந்த கூகுளை பற்றி சொல்லிகிட்டே இருப்பது எத்தனை பதிவு போட்டாலும் இதில் உள்ள வசதிகளை ஓட்டு மொத்தமாக கூற முடியாது. அவ்வளவு வசதிகள் இந்த கூகுள் தேடியந்திரத்தில் உள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் சில இதர வசதிகளும் மறைந்து உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கூகுள் முகப்பு பக்கத்தில் விளையாடும் வசதி. பிரபல விளையாட்டான Pacman விளையாட்டு பெருமாலானவர்களுக்கு தெரிந்திர்க்கும். இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டால் நிறுத்த மனம் வராது. மிக சுவாரஸ்யமான இந்த விளையாட்டை கூகுளின் முகப்பு பக்கத்தில் எப்படி விளையாடுவது என பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

2/05/2012 by Sasikumar · 4

2/04/2012

மொபைல் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள்

தற்போது எதற்கும் எங்கும் காத்து கொண்டிருக்க மக்கள் விரும்பதில்லை. அனைத்து வேலைகளும் கஷ்ட படாமல் சுலபமாக முடியவேண்டும் என்றே எண்ணுகிறோம். மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடந்து கவுண்டர் கிட்ட போனவுடன் டிக்கெட் காலி என்று சொன்னவுடன் நமக்கு வரும் கோபத்தை எழுத்தில் சொல்ல முடியாது. டிக்கெட் முன்பதிவு செய்யும் வேலையை சுலபமாக்க அனைத்து திரையரங்குகளிலும் இணையம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தனர். இதை மேலும் சுலபமாக்க உங்கள் மொபைலில் இருந்தே சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய உதவும் ஐந்து இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருட்களை பற்றி இங்கு பாப்போம்.

மேலும் வாசிக்க

2/04/2012 by Sasikumar · 7

பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து சாதனைசமூக தளங்களில் முதல் நிலையில் இருக்கும் இணையதளம் பேஸ்புக். தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இந்தியர்களிடையே பேஸ்புக் தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

மேலும் வாசிக்க

by Sasikumar · 13

2/03/2012

பேஸ்புக் போட்டோக்களை ஒன்றிணைத்து வீடியோ உருவாக்க - Timeline Movie Maker

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான போட்டோக்கள் தினமும் பகிரப்படுகிறது. நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த போட்டோக்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்குவது எப்படி என இங்கு காண்போம்.

மேலும் வாசிக்க

2/03/2012 by Sasikumar · 6

2/02/2012

URL மாற்றத்தினால் இயங்காத தமிழ்மண ஓட்டு பட்டையில் பதிவை இணைத்து ஓட்டு போடுவது எப்படி

கூகுளின் URL மாற்றத்தினால் தமிழ் திரட்டிகளில் பெருமாலானவர்கள் உபயோகித்து கொண்டிருக்கும் தமிழ்மண திரட்டியில் புதிய பிளாக்கில் இருந்து பதிவுகளை இணைக்க முடியவில்லை. மீண்டும் அப்ரூவல் வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஓட்டு பட்டையும் புதிய பிளாக்குகளில் வேலை செய்ய வில்லை. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு கூடுதல் சுமை அளித்துள்ளதால் அனைத்து புதிய பிளாக்கிர்க்கும் அப்ரூவல் வழங்க கால தாமதம் ஏற்படலாம். அதுவரை தற்காலிகமாக இந்த பிரச்சினைகளை தவிர்த்து தமிழ்மணத்தில் பதிவை இணைக்கவும், ஓட்டு பட்டையில் ஓட்டு போடுவது எப்படி எனவும் காணலாம்.

மேலும் வாசிக்க

2/02/2012 by Sasikumar · 21

2/01/2012

சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகள் [Jan 2012]

வலைப்பூவில் தினமும் ஏதாவது ஒரு தலைப்பில் ஏராளமான பதிவுகள் வந்து கொண்டுள்ளது. அனைத்து பதிவுகளும் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் பல பேர் பயன்பெற வேண்டும் என்று நினைத்தாலும் குறிப்பிட்ட ஒரு சில பதிவுகள் தான் அதிக வாசகர்களை கவர்கிறது. அப்படி சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 இடுகைகளை பற்றி பதிவு இது.

மேலும் வாசிக்க

2/01/2012 by Sasikumar · 16