3/31/2012

கூகுள் பிளசில் உங்களின் போட்டோக்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ் கொடுக்க

பிரபல போட்டோ எடிட்டிங் இணையதளமான பிக்னிக் இணையதளம் April 19 தேதியோடு மூட படுகிறது என்பதை நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். கூகுள் பிளஸ் தளத்தை பிரபலமாக்கும் நோக்கில் பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் கூகுள் நிறுவனம் பிக்னிக் தளத்தை மூடி அந்த வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் இணைத்து உள்ளது. இனி உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான எபெட்களை கூகுள் பிளஸ் தளத்தில் கொடுக்கலாம். 

மேலும் வாசிக்க

3/31/2012 by Sasikumar · 7

3/30/2012

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய (30-03-12)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

மேலும் வாசிக்க

3/30/2012 by Sasikumar · 6

3/29/2012

கூகுளில் புதிய வசதி Account Activity ஆக்டிவேட் செய்ய

இணையத்தில் பெரும்பாலானவர்களின் இதயத்துடிப்பாக இருப்பது கூகுள் நிறுவனம். பயனுள்ள சேவைகளான Blogger, Gmail, Youtube, Adsense இன்னும் பல சேவைகளை இலவசமாக வழங்கி கொண்டுவருவதால் தான் இன்றும் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவுடன் இன்னும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கூகுள் வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளில் Account Activity என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். 

நீங்கள் ஒரு மாதத்தில் கூகுள் தயாரிப்புகளை எத்தனை முறை உபயோகித்து உள்ளீர்கள் எதற்க்காக உபயோக படுத்தி உள்ளீர்கள், ஒரு மாதத்தில் எத்தனை மெயில் உங்களுக்கு வந்துள்ளது எத்தனை மெயில் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்ற முழு அறிக்கையையும் பார்க்க உதவுவது தான் Account Activity என்ற புதிய வசதி இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என பார்ப்போம்.


மேலும் வாசிக்க

3/29/2012 by Sasikumar · 14

3/26/2012

உங்கள் புகைப்படத்துடன் கூடிய கூடிய அழகான குரோம் தீம் நீங்களே உருவாக்க

கூகுளின் படைப்பான கூகுள் குரோம் உலவி யை பெரும்பாலானவர்கள் விரும்பி உபயோகிக்க காரணம் எளிமை, வேகம், வசதிகள். சாதரணமாக ஒரே தோற்றத்தை பல முறை பார்த்து கொண்டு இருந்தால் அது நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவது தான் மனித இயல்பு. கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் போட்டோவுடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீம் இருந்தால் எப்படி இருக்கும். நெனச்சி பார்க்கவே சூப்பரா இருக்குல்ல!! உங்கள் போட்டோவுடன் கூடிய கூகுள் குரோம் தீம் உருவாக்குவது எப்படி என இங்கு காணலாம்.


மேலும் வாசிக்க

3/26/2012 by Sasikumar · 11

3/25/2012

அடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய - Photoshop CS6 beta

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்திற்கு எப்படி கூகுளோ அது போல போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் என்றால் போட்டோஷாப் தான் அதற்க்கு ஈடான மென்பொருள் இல்லை. உலகம் முழுவதும் போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த மென்பொருளின் புதிய பதிப்பான CS6 Beta வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்பது மேலும் ஒரு இனிப்பான செய்தி.

adobe cs6

மேலும் வாசிக்க

3/25/2012 by Sasikumar · 11

3/24/2012

பிளாக்கரில் புதிய வசதி "Image Properties" [SEO Tricks]

தேடியந்திரங்கள் தான் அனைத்து வலைப்பூக்களுக்கும் முதுகெலும்பு என்று கூறலாம் ஏனென்றால் பெரும்பாலான வாசகர்கள் தேடியந்திரங்கள் மூலமாக தான் வலைப்பூக்களுக்கு வருகின்றனர். உங்கள் பதிவுகள் தேடலில் முதல் பக்கத்தில் வர தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை உங்கள் வலைப்பூக்களில் செய்ய வேண்டும். இது SEO(Search Engine Optimization) என்று அழைக்கப்படுகிறது. தேடியந்திரங்களில் புகைப்பட தேடல் (IMAGE SEARCH) என்பதும் முக்கியமான ஒன்று. இந்த பகுதியில் உங்கள் பதிவில் உள்ள போட்டோக்களை வரவைப்பதன் மூலம் கணிசமான வாசகர்களை பெற முடியும்.போட்டோக்களில் ALT மற்றும் TITLE tag சேர்ப்பதன் மூலம் Image Search பகுதியில் நம் பதிவின் போட்டோக்களை வரவைக்க முடியும். இப்பொழுது பிளாக்கர் தளம் "Image Properties" என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இதன் மூலம் Title மற்றும் ALT சொற்களை சுலபமாக நம் வலைப்பூ போட்டோக்களுக்கு கொடுக்கலாம்.

மேலும் வாசிக்க

3/24/2012 by Sasikumar · 15

3/22/2012

தேடியந்திரங்களுக்காக பிளாக்கரில் சில புதிய வசதிகள் [SEO Tricks]

கூகுளின் இலவச தளங்களான பிளாக்கர் இலவச வலைப்பூக்களை பெரும்பாலனவர்கள் உபயோகித்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக பல தளங்கள் இலவச வலைப்பூக்களை வழங்குவதால் இவற்றிக்கு இடையில் மிகுந்த போட்டி காணப்படுகிறது. பிளாக்கர் நிறுவனமும் அவர்களின் வலைப்பூக்களுக்கு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி வாசகர்களை கவர்கின்றனர். இந்த வரிசையில் இன்று சில புதிய வசதிகளை அறிமுகபடுத்தி உள்ளனர். இந்த புதிய வசதிகள் தேடியந்திரங்களில் வலைப்பூக்கள் தெரிவதை மயப்படுத்தி உருவாக்கி உள்ளனர்.

மேலும் வாசிக்க

3/22/2012 by Sasikumar · 18

3/21/2012

விற்பனையில் சாதனை படைத்த ஆப்பிளின் The new iPad

கணினிகளை கையடக்கத்தில் கொண்டு வந்த பெருமை ஆப்பிள் நிறுவனத்தையே சாரும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீது எப்பொழுதும் நன்றாக இருக்கும் என்ற தனி நம்பிக்கை இருக்கும். ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் மார்ச்16 ஒரு புதிய டேப்லெட் கணினியை அறிமுக படுத்தினர். இதற்க்கு New iPad என்று பெயர் சூட்டினர். உலகில் இப்பொழுது இருக்கும் எந்த ஒரு டேப்லெட் கணினிகளிலும் இல்லாத வசதிகளை உள்ளடக்கி இந்த புதிய New iPad வெளியிட்டு உள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் அனைவருக்குமிடையில் இது மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இந்த டேப்லெட் கணினிகள் மூன்றே நாட்களில் 30 லட்சம் டேப்லெட் கணினிகளை விற்று தீர்ந்து விட்டன.

மேலும் வாசிக்க

3/21/2012 by Sasikumar · 9

3/20/2012

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு VLC2.0.1 டவுன்லோட் செய்ய

உலகம் முழுவதும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் VLC Media Player. சமீபத்தில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டது. இப்பொழுது இதன் புதிய பதிப்பான VLC2.0.1 பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பில் மேலும் பல மீடியா பைல்களை சப்போர்ட் செய்யும் படி உருவாக்கி உள்ளனர். முக்கியமாக ஆப்பிள் கணினிகளில் இருந்த சில பிழைகளை நீக்கி புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர்.


மேலும் வாசிக்க

3/20/2012 by Sasikumar · 6

3/19/2012

அபார வளர்ச்சியில் PINTEREST சமூக இணைய தளம் INVITE வேண்டுமா?

சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம். பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும் ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.


மேலும் வாசிக்க

3/19/2012 by Sasikumar · 36

3/16/2012

இந்திய தொலைக்காட்சி சீரியல்களை யூடியுபில் காண [19000+ Episodes]

 இந்தியர்கள் பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். சீரியல் எல்லாமே நடிப்பு என்பதை மறந்து அதனுடன் ஒன்றிப்போய் துக்க காட்சிகளுக்கு வருத்தப்படுவதும், சந்தோச காட்சிகளுக்கு சந்தோசப்படும் அளவுக்கு சீரியல்கள் இவர்களை அடிமையாக்கி உள்ளது.  வீடியோக்களின் தகவல் களஞ்சியமான யூடியுப் தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக யூடியுப் தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய எபிசோட்களை பார்க்க விரும்பினாலோ இனி யூடியுப் தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பகுதிகளை பார்த்து கொள்ளலாம்.


முடிந்து போன சீரியல்களின் முழு தொகுப்பும் இங்கு உள்ளது. இந்திய மொழிகளில் சுமார் 6 மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்சிகளை கண்டு களிக்கலாம். 

அனைத்து மொழிகளிலும் காண - Indian Serials on Youtube

தமிழ் நிகழ்சிகளை காண - Tamil Serials on Youtube

தொடர்புடைய இடுகை

டிஸ்கி: தமிழில் பெரும்பாலான சீரியல்களின் ராதிகா போட்டோ தான் இருக்கு. ஒருவேளை இவுங்க தான் சின்னத்திரை சூப்பர் ஸ்டாரோ?

3/16/2012 by Sasikumar · 11

3/15/2012

ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star

உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் ஜிமெயிலில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். ஜிமெயிலில் ஏதாவது மெயிலை அனுப்புவதற்கு முன் அந்த மெயிலுக்கு label மற்றும் star பொருத்தி கொள்ளலாம். இந்த புதிய வசதியினால் நாம் ஏதாவது ஒரு முக்கியமான மெயிலை அனுப்பி அதற்க்கான பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்போம் துரதிஷ்ட வசமாக இரண்டு நாள் உங்களால் மெயிலை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்ப்படலாம் அதற்குள் உங்கள் இன்பாக்ஸ் நிரம்பி வழியும் குறிப்பிட்ட அந்த மெயிலுக்கு ரிப்ளை வந்துள்ளதா என்பதை நீங்கள் தேடி கண்டறிய வேண்டும். இந்த சிரமத்தை தவிர்க்க மெயிலை அனுப்புவதற்கு முன் அந்த மெயிலுக்கு குறிப்பிட்ட Label அல்லது Star பொருத்தி விட்டால் எத்தனை நாள் கழித்து வந்து பார்த்தாலும் அந்த குறிப்பிட்ட லேபிளை மற்றும் Star குறியீட்டை பார்த்து சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த பயனுள்ள வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

3/15/2012 by Sasikumar · 7

3/14/2012

Youtube வீடியோ பிளேயரில் புதிய பயனுள்ள வசதிகள்

இணையத்தில் வீடியோக்களின் சுரங்கம் யூடியுப் என்றால் மிகை அல்ல. வீடியோக்கள் பகிர பல தளங்கள் இருந்தாலும் அனைவரின் விருப்பத்திற்கு உரியது யூடியுப் தான். கடந்த வருட கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு நாளும் சுமார் 3 Billion வீடியோக்கள் youtube தளத்தில் பார்க்க படுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து 148 மில்லியன் வாசகர்களை கொண்டுள்ள ஒரே வீடியோ பகிரும் தளம் Youtube தான். இப்படி இதனுடைய சாதனையை சொல்லி கொண்டே போகலாம். அனைவரும் youtube தளத்தை விரும்ப காரணம் இதிலுள்ள வசதிகளும், வீடியோக்களின் தரமும் தான் காரணம். Youtube தற்பொழுது ஒரு புதிய பயனுள்ள வசதியை அறிமுகபடுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க

3/14/2012 by Sasikumar · 6

3/13/2012

பேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்பது எப்படி

உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும். சமூக இனியதலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பேஸ்புக் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளது. பேஸ்புக் உச்சத்தில் இருந்தாலும் அதன் வாசகர்களை கவர அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்பொழுது பேஸ்புக்கில் Interest என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

3/13/2012 by Sasikumar · 7

3/12/2012

உஷார்: 2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [Infographic]

இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம்.  வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது.

குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் இந்த படிவத்தை சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும் என்று வரும், அல்லது வெளிநாட்டில் ஆள் இல்லாத சொத்து உங்களுக்கு வேண்டுமா என்று இப்படி ஏதாவது ஒரு வகையில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான இணைய மோசடிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

இணைய மோசடிகளுக்கு மிக முக்கியகாரணம் மக்களின் பேராசையும், அறியாமையும் தான். இப்படி 2011இல் அதிக அளவு நடைபெற்ற பத்து வகையான இணைய மோசடிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Top 10 Scams of 2011 [Infographic]

பிரபல இணையதளமான bbb இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளது. ஆகவே நண்பர்களே மேலே கூறிய அனைத்து வகையிலும் ஹாக்கர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம் ஆகவே உஷாராக இருக்கவும்.

3/12/2012 by Sasikumar · 13

3/11/2012

கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் மாற்றுவது எப்படி?

பொதுவாக அனைவருக்கும் பிடித்த விஷயம் அவர்களின் தாய்மொழி மற்ற மொழிகளில் படித்து அறிந்து கொள்வதை விட தாய்மொழி என்றால் சுலபமாக படித்து விடுவர். ஆதலால் இணையதளங்களும் தங்களது தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புவர்.  இதனை கருத்தில் கொண்டு மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளஸ் தற்பொழுது 60 மொழிகளில் கிடைக்கிறது. இதற்க்கு முன் 44 மொழிகளில் கிடைத்தது. இந்திய அளவில் தமிழ், மலையாளம், மராத்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, இந்தி ஆகிய எட்டு மொழிகளில் கிடைக்கிறது. இனி நம் தாய்மொழியான தமிழ் மொழியில் உங்களின் கூகுள் பிளஸ் தளத்தை மாற்றுவது எப்படி பார்க்கலாம்.


மேலும் வாசிக்க

3/11/2012 by Sasikumar · 7

3/10/2012

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய(10-03-12)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

மேலும் வாசிக்க

3/10/2012 by Sasikumar · 10

3/09/2012

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்]

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

மேலும் வாசிக்க

3/09/2012 by Sasikumar · 12

3/08/2012

ஜிமெயில் மற்றும் கூகுள்+ தளங்களை திறக்காமலே நண்பர்களுடன் சாட் செய்ய [குரோம்]

இணையத்தில் ஜிமெயில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மெயில் சேவையாகும் மற்றும் கூகுள்+ தளமும் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமாகும். இவை இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான வசதி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் chat வசதியாகும். இதுவரை இந்த தளங்களுக்கு சென்று தான் அதில் ஆன்லைனில் உள்ள நண்பர்களிடம் சாட் செய்து வந்தோம் இனி நீங்கள் சாட் செய்ய அந்தந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அந்த தளங்களை திறக்காமலே ஜிமெயில் மற்றும் கூகுள்+ நண்பர்களுடன் எப்படி சாட் செய்வது என்று இன்று காணலாம். தற்பொழுது குரோம் பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.

மேலும் வாசிக்க

3/08/2012 by Sasikumar · 13

3/06/2012

BSNL vs ATab vs Aakash மலிவு விலை டேப்லேட் கணினிகளில் எது சிறந்தது?

இந்தியாவில் முதல் முறையாக மிகவும் குறைவான விலையில் Datawind நிறுவனம் Aakash என்ற மலிவுவிலை டேப்லட் கணினிகளை வெளியிட்டது. அடுத்து இதன் அப்டேட்டட் வெர்சன் UBISLATE7 கணினிகள் வர இருக்கிறது என அறிவிப்பு வந்தவுடன் ஆர்டர்கள் குவிந்தன. சில சிறந்த வசதிகளுடன் மலிவான விலையில் கிடைத்தால் ஆளாளுக்கு போட்டி போட்டுகொண்டு இந்த டேப்லேட்களை முன்பதிவு செய்தனர். ஆனால் இன்று வரை அது யாருக்குமே கிடைக்க வில்லை என்பது தான் உண்மையான நிலை. அரசுக்கும் Datawind நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாட்டினால் Datawind நிறுவனம் இதிலிருந்து விலகியது. இப்பொழுது Ubislate7 டேப்லேட்டை இந்திய அரசே வெளியிட போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

மேலும் வாசிக்க

3/06/2012 by Sasikumar · 16

3/05/2012

சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகள் [Feb 2012]

வலைப்பூவில் தினமும் ஏதாவது ஒரு தலைப்பில் ஏராளமான பதிவுகள் வந்து கொண்டுள்ளது. அனைத்து பதிவுகளும் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் பல பேர் பயன்பெற வேண்டும் என்று நினைத்தாலும் குறிப்பிட்ட ஒரு சில பதிவுகள் தான் அதிக வாசகர்களை கவர்கிறது. அப்படி சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 இடுகைகளை பற்றி பதிவு இது.

மேலும் வாசிக்க

3/05/2012 by Sasikumar · 10

3/03/2012

பேஸ்புக் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டும் காட்ட - Facebook Chat Fix

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் தளத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. உலகம் 800 மில்லியன் வாசகர்கள் உள்ள ஒரே சமூக இணையதளம் பேஸ்புக். இதில் உள்ள முக்கியமான வசதிகளுள் ஒன்று பேஸ்புக் சாட் வசதியாகும். பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க உதவுவது இந்த பேஸ்புக் சாட் வசதியாகும். இதில் உள்ள ஒரு குறை என்ன வென்றால் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஆப்லைனில் உள்ளவர்களையும் காட்டும். இதனால் தேவையில்லாமல் பட்டியலின் நீளம் பெரியதாக காணப்படும். இந்த பிரச்சினையை தவிர்த்து பேஸ்புக் சாட்டில் ஆன்லைனில் இருப்பவர்களை மட்டும் தெரியவைப்பது எப்படி என பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

3/03/2012 by Sasikumar · 10

3/02/2012

பிளாக்கரில் எந்த கோடிங்கும் சேர்க்காமல் Recent Post விட்ஜெட் வைக்க

பிளாக்கரில் சில குறிப்பிட்ட விட்ஜெட்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானது. (பிளாக்கரில் எந்தெந்த அவசியம் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் சென்று பார்க்கவும்.) முக்கியமான விட்ஜெட்களில் Recent Post விட்ஜெட்டும் ஒன்று. இந்த விட்ஜெட்டை பல வழிகளில் உங்கள் பிளாக்கர் தளங்களில் இணைக்கலாம். அந்த வரிசையில் இன்று எந்த மூன்றாம் தள கொடிங்கையும் சேர்க்காமல் சுலபமாக நம் பிளாக்கரில் உள்ள டீபால்ட் வசதியின் மூலம் Recent Post விட்ஜெட் இணைப்பது எப்படி என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

3/02/2012 by Sasikumar · 7

3/01/2012

பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி

பிளாக்கர் வலைப்பூக்களை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் பிளாக்கர் தளங்கள் வாசகர்களின் இருப்பிடத்திற்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் (CCTLD) டொமைனுக்கு தானாகவே Redirect ஆகியது. இதனால் பெரும்பாலான வலைபூக்கள் சில பிரச்சினைகளை சந்தித்தது. அதில் அலெக்சா ரேங்க், கூகுள் பேஜ் ரேங்க், திரட்டிகள் பிரச்சினை போன்றவை முக்கியமானது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சுலபமான தீர்வு கிடைத்து விட்டது. இனி உங்களுடைய பிளாக் ccTLD டொமைன்களுக்கு redirect ஆகாமல் எந்த நாட்டில் இருந்து ஓபன் செய்தாலும் பழைய blogspot.com வரவைப்பது எப்படி  என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

3/01/2012 by Sasikumar · 30