BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா?

இந்தியாவில் விலை குறைவாக கொடுக்கும் பொருட்களுக்கு கிராக்கி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. முதலில் ஆகாஷ் டேப்லெட் வருதுன்னு பீதிய கிளப்பினாங்க சொல்லி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வந்த பாடில்லை. அடுத்து இந்த வரிசையில் BSNL கம்பெனியும் குறைந்த விலை டேப்லெட் கணினிகளை அறிமுக படுத்தியது. சரி நாமும் ஒன்னும் வாங்குவோமேன்னு ஒன்னு புக் பண்ணி வாங்கியும் விட்டேன். இதுல எனக்கு பிடிச்ச சில விஷயங்களையும், பிடிக்காத விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

Read more »

by Sasi Kumar · 17

பதிவுகளை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் அப்டேட் செய்ய

பேஸ்புக்கில் க்ரூப் என்ற வசதி உள்ளது அனைவருக்கும் தெரியும். பேஸ்புக் க்ரூப்பில் நம் பதிவுகளை பகிர்ந்தால் அந்த அந்த குழுவில் சேர்ந்துள்ள அனைவருக்கும் சென்றடையும் ஆதலால் உங்கள் பிளாக்கின் வாசகர் வரத்து அதிகரிக்கிறது. பேஸ்புக்கில் ஏராளமான பேஸ்புக் குழுக்களில் நீங்கள் சேர்ந்து இருக்கலாம். அதனால் ஒவ்வொரு முறை போஸ்ட் போட்ட பிறகு ஒவ்வொரு க்ரோப்பாக அனைத்து குழுவிற்கும் சென்று உங்கள் பதிவினை அப்டேட் செய்ய வேண்டும். நான் சுமார் 20 க்ரூப்களில் சேர்ந்து உள்ளதால் 20 குழுவிற்கும் சென்று என்னுடைய போஸ்ட்டை அப்டேட் செய்ய வேண்டும். இனி அந்த பிரச்சினை இல்லை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் க்ரூப்களிலும் சுலபமாக அப்டேட் செய்து விடலாம்.

இதற்க்கு Multiple Post என்ற பேஸ்புக் அப்ளிகேஷன் பயன்படுகிறது. முதலில் Multiple Post இந்த லிங்கில் செல்லவும் அங்கு உள்ள Connect என்ற பட்டனை அழுத்தி இந்த அப்ளிகேஷனுக்கு பெர்மிசன் கொடுக்கவும்.




அடுத்து உங்களுக்கு இன்னொரு பக்கம் ஓபன் ஆகும் அதில் நீங்க பகிர வேண்டிய பதிவின் URL, இமேஜ், போன்ற விவரங்களை கொடுக்கவும். அடுத்து நீங்கள் பகிர வேண்டிய பேஸ்புக் குரூப்களை தேர்வு செய்து கொள்ளவும். (தமிழ் எழுத்துக்களுக்கு சப்போர்ட் செய்யாததால் தமிழ் க்ரூப்களை தேர்வு செய்வதில் சற்று சிரமம் இருக்கும். ஆனால் இது பழக பழக பழக சரியாவிடும்).



பகிரவேண்டிய குரூப்களை தெரு செய்தவுடன் கீழே உள்ள POST என்ற பட்டனை அழுத்தி உங்கள் பதிவை பகிர்ந்து விடவும். அவ்வளவுதான் நீங்கள் தேர்வு செய்ய அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் உங்களின் பதிவுகள் பகிரப்பட்டு விடும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

by Sasi Kumar · 19

பேஸ்புக்கின் புதிய வெளியீடு - Facebook Camera இலவச மென்பொருள்

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் Facebook Camera என்ற ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளது. இந்த மென்பொருளை ஐபோன்களில் உபயோகிக்க முடியும். இந்த மென்பொருள் மூலம் மொபைழிலில் எடுக்க கூடிய போட்டோக்களை நேரடியாக பேஸ்புக் தளங்களில் பகிரலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான போட்டோக்களை உங்கள் மொபைலில் இருந்து பகிரலாம். 4.9 MB அளவுடைய இந்த மென்பொருளை இலவசமாக வழங்குகிறது பேஸ்புக் நிறுவனம். சாதாரண பேஸ்புக் மொபைல் அப்ளிகேசனை விட இந்த மென்பொருள் வேகமாக இயங்கும் என்று அறிவித்து உள்ளது. 



Read more »

by Sasi Kumar · 9

Blogger in Draft சேவையை நிறுத்தியது கூகுள்

பிளாக்கர் வலைபூக்களை பதிவர்களுக்கு Blogger in Draft வசதியை பற்றி தெரிந்திருக்கும். பிளாக்கர் நிறுவனம் ஏதேனும் புதிய வசதியை அறிமுக படுத்தினால் சோதனை ஓட்டமாக முதலில் Blogger in Draft தலத்தில் தான் அறிமுகப்படுத்தும். பின்பு பதிவர்களிடம் இருந்து வரும் குறைகளை சரி செய்து பின்பு அனைவருக்கும் புதிய சேவையை வழங்கும். இப்பொழுது Blogger in Draft சேவையை நிறுத்தி விட்டது கூகுள் நிறுவனம். இனி Blogger in Draft தளத்தில் எந்த பதிவும் வெளிவராது என அறிவித்து உள்ளது.



கூகுள் தனது புதிய தயாரிப்பான கூகுல் பிளஸ் சேவையை பிரபலமாக்குவதில் முழு மூச்சாக உள்ளது. அதற்காக சில தளங்களை மூடவும் செய்தது. முதலில் Buzz அடுத்து பிக்னிக் இப்பொழுது Blogger in Draft. இனி நீங்கள் பிளாக்கரில் வரும் புதிய வசதிகளை அறிய வேண்டுமானால் www.buzz.blogger.com என்ற தளத்திலும் அதனுடைய கூகுள் பிளஸ் Blogger on Google+ பக்கத்தை தொடர்வதாலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.


சமூக தளங்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த வரிசையில் மைக்ரோசாப்டும் தன பங்குக்கு so.col என்ற சமூக இணையதளத்தை அறிமுக படுத்தி உள்ளது. இதை பிரபல படுத்த நோக்கில் விண்டோஸ் இயங்கு தளம் உபயோகிக்கும் அனைவரும் இந்த புதிய சமூக இணைய தளத்தை கட்டாயம் உபயோகிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடும் போலிருக்கே.

கூகுளின் அறிவிப்பை காண - http://bloggerindraft.blogspot.in/

by Sasi Kumar · 8

குரோமில் Sign in to Chrome வசதியை பயன்படுத்துவது எப்படி, பயன்கள் என்ன?

மிக வேகமான வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கும் இணைய உலவி கூகுல் குரோம். இப்பொழுது IE உலவியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து உள்ளதாக Stats Counter அறிவித்து உள்ளது. இதில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் பெரும்பாலானவர்கள் கூகுள் குரோமை பயன்படுத்து கின்றன. இதில் உள்ள வசதிகளில் முக்கியமான வசதியான Sign in to Chrome வசதியை பற்றி இன்று காணலாம்.

Read more »

by Sasi Kumar · 11

ஜிமெயிலில் விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத விட்ஜெட்களை நீக்க

இலவச மெயில் சேவையில் ஜிமெயிலை யாரும் அசைக்க முடியாது. மிகப்பயனுள்ள வசதிகளை கொண்டிருப்பதாலும் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதாலும் ஜிமெயிலை உலகம் முழுவதும் விரும்பி பயன்படுத்துகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல ஜிமெயிலை ஓபன் செய்தால் விளம்பரங்களும், விட்ஜெட்டுகளும் நிறைய காணப்படுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு ஜிமெயில் தோற்றம் பிடிக்க வில்லையா குறிப்பாக ஜிமெயிலில் உள்ள விளம்பர பேனர்கள் போன்று தேவையில்லாதவைகளை நீக்க வேண்டுமா? உங்களுக்காகவே ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது.

முதலில் இந்த லிங்கில் சென்று Gmelius என்ற நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் இணைய உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். நீட்சியை இணைத்தவுடன் நீட்சியின் Options பகுதிக்கு சென்றால் கீழே உள்ளதை போல ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் ஜிமெயிலில் உங்களுக்கு வேண்டாதவைகளுக்கு நேராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள Save My Settings என்பதை அழுத்தி சேமித்து கொள்ளவும்.




இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்து பாருங்கள் நீங்கள் நீக்கிய பகுதி வந்திருக்காது. இந்த நீட்சியின் மூலம் Ads, People Widget, Chat, Chat availability, chat search box, calender widget போன்றவைகளை ஜிமெயிலில் இருந்து நீக்கலாம்.

 மற்றும் உங்கள் மெயிலுக்கு ஏதாவது அட்டாச்மென்ட் வந்தால் அதற்க்கு ஏற்ற ஐகானும் தெரியும். உதாரணமாக PDF பைலை அட்டாச் செய்து அனுப்பி இருந்தால் அந்த மெயிலில் சாதாரண அட்டாச்மென்ட் ஐகான் தெரியாமல் PDF ஐகான் தெரியும். இதன் மூலம் மெயிலை ஓபன் செய்யாமலே எந்த வகையான பைல் அட்டாச்மென்ட் வந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். மற்றும் மேலும் பல வசதிகள் இந்த நீட்சியில் உள்ளது.

இந்த நீட்சி தற்பொழுது குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஒபேரா உலவிகளில் வேலை செய்கிறது.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

by Sasi Kumar · 4

பேஸ்புக் குரூப்பில் Upload File என்ற புதிய பயனுள்ள வசதி

உலகம் முழுவதும் சுமார் 380 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் பேஸ்புக் க்ரூப் வசதியை உபயோகித்து வருகின்றனர். இப்பொழுது பேஸ்புக் க்ரூப்பில் Upload File என்ற ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்த வசதியின் மூலம் உங்களிடம் உள்ள பைல்களை மற்ற தளங்களின் உதவி இல்லாமல் நேரடியாக அப்லோட் செய்து பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக உங்களிடம் ஒரு பிடிஎப் பைல் இருக்கிறது என வைத்து கொள்வோம் இதற்க்கு முன்னர் மற்ற தளங்களில் அப்லோட் செய்து அந்த லிங்கை தான் பேஸ்புக்கில் பகிர முடியும். இனி அப்படி செய்ய தேவையில்லை நேரடியாக பேஸ்புக்கிலேயே பகிர்ந்து கொள்ளலாம்.

Read more »

by Sasi Kumar · 10

குரோம் உலவியில் உள்ள ரகசியங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

நீங்கள் தொடர்ந்து ஒரே கணினியில் குரோம் உலவியை உபயோகித்து வந்தால் ஒவ்வொரு தடவையும் பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு சிரமப்பட்டு கொண்டு பாஸ்வேர்டை சேமித்து வைத்திருப்போம். இதன் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்காமல் நேரடியாக இந்த தளங்களுக்குள் செல்லலாம். ஆனால் இதில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை பாதுகாப்பு. மற்றவர்கள் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்தாலும் உலவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை கண்டறிந்து உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பயர்பாக்சில் Master Password என்ற வசதி இருப்பதால் ஓரளவு ஆபத்து குறைவு ஆனால் குரோமில் அந்த வசதி இல்லை என்பதால் யார் வந்து ஓபன் செய்தாலும் சுலபமாக உங்கள் ஆன்லைன் கணக்கின் பாஸ்வேர்ட்களை அறிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை தவிர்க்க உள்ளது தான் Simple Password Startup வசதி. 


Read more »

by Sasi Kumar · 10

அழகான கூகுள்+ கவர் போட்டோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்

பேஸ்புக்கில் கவர் போட்டோவின் வெற்றியை தொடர்ந்து கூகுள் பிளஸ் சமூக தளத்தில் சமீபதில் கவர் போட்டோ வசதியை அறிமுகபடுத்தியது கூகுள் நிறுவனம். இதில் அழகான போட்டோக்களை உங்களின் ப்ரோபைல் பக்கத்தில் சேர்த்து உங்களின் ப்ரோபைல் பக்கத்தை அழகாக மாற்றலாம். கீழே அழகான கவர் போட்டோக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய பத்து தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். அந்த தளங்களில் விதவிதமான வகைகளில் கவர் போட்டோக்களை வரிசை படுத்தி வைத்து உள்ளன். இந்த போட்டோக்களை டவுன்லோட் செய்து உங்கள் கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்தில் இணைத்து அழகாக மாற்றுங்கள்.

1. Google Cover+


Link - Click Here

2. Google Plus Covers


Link - Click Here

3. BST Cover Photo


Link - Click Here

4. G-Covers


Link - Click Here

5. Google Covers


Link - Click Here

6. Google Covers


Link - Click Here

7. G+ Mass Covers


Link - Click Here

8. gplus Profile Lift


Link - Click Here

9. Google Plus Cover Photo


Link - Click Here

10. Google plus Cover Photos



by Sasi Kumar · 9

பேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ தளங்களில் பகிர்ந்தால் பணம் தரும் இணையதளம்

சமூக தளங்களின் வளர்ச்சியை பார்க்கையில் அபாரமாக உள்ளது. நாளுக்கு நாள் புதிய நண்பர்கள், சேட்டிங், வீடியோ காலிங் இப்படி பல வசதிகள் இருப்பதால் சமூக தளங்கள் மிக வேகமாக வளர்ந்து உள்ளது. சமூக தளங்கள் நேரத்தை வீணடிக்கும் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது என்று பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சமூக தளங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்க முடியும் என்கிறது ஒரு தளம். Have you seen என்ற இந்த தளம் சமூக தளங்கள் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்று வழிகாட்டுகிறது.

Read more »

by Sasi Kumar · 11

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க

நீங்கள் இணையத்தில் சுற்றும் பொழுது பார்த்து இருக்கலாம் சில பெரிய தளங்கள் அவர்களுக்கு என ஒரு நீட்சியை உருவாக்கி வைத்து இருப்பார்கள் அதை நம் உலவியில் இணைத்து கொண்டால் அவர்களின் புதியபதிவுகள் உட னுக்குடன் அதில் அப்டேட் ஆகிவிடும். அது போன்று உங்கள் தளத்திற்கும் சுலபமாக ஒரு பிரவுசர் நீட்சியை உருவாக்குவது எப்படி என இங்கு பார்ப்போம். இதனை உருவாக்க அதிக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை மற்றும் இரண்டே நிமிடங்களில் உங்கள் தளத்திற்கான நீட்சியை உருவாக்கி விடலாம். இந்த நீட்சியை உருவாக்குவதால் உங்கள் வாசக்ராகளுக்கு உடனுக்குடன் உங்களின் பதிவு சென்றடையும் மற்றும் கடைசி 25 பதிவுகளை வாசகர்கள் அவர்களின் உலவிகளில் பார்த்து கொள்ளலாம்.

கீழே உள்ள பட்டனை அழுத்தி வந்தேமாதரத்தின் நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்து சோதித்து கொள்ளுங்கள். 

Extension Factory Builder


Read more »

by Sasi Kumar · 11

இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்

இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.

Read more »

by Sasi Kumar · 14

கூகுள் டிரைவை பயன்படுத்தி PDF, DOC, XLS பைல்களை பிளாக்கரில் தெரிய வைக்க

கூகுளின் சமீப வரவான கூகுல் டிரைவை பற்றி கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். இன்று
கூகுள் டிரைவ் அளிக்கும் ஒரு பயனுள்ள வசதியை பற்றி காண்போம். பிளாக்கர் வலைபூக்களில்
நேரடியாக PDF பைல்களை அப்லோட் செய்ய முடியாது என்பதால் கூகுள் டிரைவை பயன்படுத்தி எப்படி PDF பைல்களை வலைபூக்களில் தெரிய வைப்படி
எப்படி என காணலாம். 
documents on blogger using drive

Read more »

by Sasi Kumar · 10

கூகுள் டிரைவில் பகிரும் பைல்களை மற்றவர்கள் டவுன்லோட் செய்ய முடியாமல் தடுக்க

கூகுளின் சமீப வெளியீடு கூகுள் டிரைவ் எனப்படும் Cloud Storage வசதியாகும். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவ் சேவையை வழங்கியது.
இதன் மூலம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து வைத்து பின்பு எங்கு இருந்து எந்த நேரத்திலும் கணினி மற்றும் Android சாதனங்களில் இருந்து இயக்க முடியும். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட பைல்களை நண்பர்களிடமும் சமூக தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

மற்றவர்களிடம் நாம் பகிரும் பைல்களை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி கூகுள்  
டிரைவில் உள்ளது. ஆதலால் மற்றவர்களிடம் பகிரும் பைல்களைகளை டவுன்லோட் செய்ய முடியாதபடி  தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.


  • முதலில் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் நுழைந்து நீங்கள் பகிர வேண்டிய பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் File மெனுவை ஓபன் செய்து அதில் உள்ள Prevent Viewers from Downloading என்ற லிங்கை அழுத்தவும்.



  • பிறகு எப்பொழுதும் போல Share பட்டனை அழுத்தி உங்கள் பைலை சமூக தளங்களிலும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். 
  • நீங்கள் பகிர்ந்த லிங்கில் பைலை ஓபன் செய்தால் அவர்களுக்கு டவுன்லோட் வசதி செயலற்று இருக்கும். 
  • அவர்களால் உங்கள் பைலை நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. 



இனி டவுன்லோட் செய்து கொள்வார்கள் என்ற பயம் இல்லாமல் உங்கள் பைலை மற்றவர்களிடத்தில் பகிரலாம்.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

by Sasi Kumar · 8

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய(02-05-2012)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

Read more »

by Sasi Kumar · 7