6/30/2012

கூகுள் குரோமின் புதிய வெர்சன் 20.0 , சுலபமாக அப்டேட் செய்வது எப்படி

chrome logo

கூகுளின் இணைய உலவியான கூகுள் குரோம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து குறைந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியன் பயணிகள் குரோம் உலவியை பயன்படுத்துகின்றனர். இந்த அபார வளர்ச்சிக்கு எளிமையும், பிரவுசிங் வேகமும் தான் முக்கிய காரணம். மேலும் கூகுள் குரோமில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி புதிய குரோம் வெர்சனை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.

சாதரணமாக கூகுள் குரோம் வெளியிட்ட இரண்டு நாட்களுக்குள் அனைவருக்கும் தானாக அப்டேட் ஆகிவிடும். அப்படி டவுன்லோட் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை சுலபமாக குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்க்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை எதையும் டவுன்லோட் செய்ய தேவையில்லை ஒரு சுலபமான வழி உள்ளது.

குரோம் உலவியில் ஓபன் செய்து வலது ஓரத்தில் உள்ள ஸ்பேனர் போன்ற ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.


About Google Chrome என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி குரோமின் புதிய வெர்சன் தானாகவே இன்ஸ்டால் ஆக தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் உங்கள் குரோம் உலவி அப்டேட் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Relaunch என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் குரோம் உலவி reload புதிய வெர்சன் அப்டேட் ஆகிவிடும். இதை உறுதி செய்ய மறுபடியும் About Google Chrome பகுதிக்கு சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும். 


இது போன்று சுலபமாக உங்களின் குரோம் இணைய உலவியை அப்டேட் செய்து கொள்ளலாம். 

இந்த முறை பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாத சில நண்பர்களுக்காக இந்த பதிவு.

6/30/2012 by Sasikumar · 9

6/29/2012

Google I/O 2012 இரண்டாம் நாள் அறிவிப்பில் சிறந்தவைகள்

நேற்றைய பதிவில் கூகுள் கருத்தரங்கில் முதல் நாள் அறிவிப்புகளில் சிறந்தவைகளை பார்த்தோம். பார்க்காதவர்கள் இங்கு Google I/O 2012 முதல் நாள் அறிவிப்பில் சிறந்தவைகள் சென்று பார்த்து கொள்ளுங்கள். இன்று இரண்டாம் நாளில் என்ன உபயோகமான அறிவிப்புகளை வெளியிட்டனர் என பார்ப்போம்.

Chrome has 310M active users:
IE மற்றும் பயர்பாக்ஸ் உலவிகள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் கூகுளும் இணைய உலவிகளுக்கான போட்டியில் குதித்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கூகுள் குரோம் என்ற உலவியை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் பிடித்து போக நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் வாசகர்களை பெற்று அபார வளர்ச்சியை அடைந்து உள்ளது. இன்று முதல் இடத்தில் உள்ள உலவியும் இது தான். இந்த கருத்தரங்கில் முதலில் அறிவிக்க பட்டது இது தான் அதோடு கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி வரும் பயனர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் அருமையான வீடியோவை கீழே பாருங்கள்.Chrome for Android moves Stable :
கணினி வழியே இணைய உபயோகிப்பில் அபார வளர்ச்சியை அடைந்த குரோம் உலவி சில வாரங்களுக்கு முன்னர் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் மென்பொருளை வெளியிட்டனர். ஆன்ராய்ட் 4.0 மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த வெளியிட்ட குரோம் மென்பொருள் இது நாள் வரை பீட்டா நிலையிலேயே இருந்தது. சோதனை கட்டங்களை தாண்டி தற்பொழுது Stable வெர்சனாக வெளியிட்டு உள்ளனர். இதனை டவுன்லோட் செய்ய Chrome for Android

Chrome for iOS :
ஆன்ட்ராய்டை தொடர்ந்து குரோம் பிரவுசரை iOS சாதனங்களான iPhone, iPad, iPod  touch ஆகியவற்றிலும் உபயோகிக்க புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். டெஸ்க்டாப் வெர்சனில் உள்ளது போன்றே இதிலும் signed in வசதி உள்ளதால் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, பாஸ்வேர்ட்ஸ் போன்றவைகளை சுலபமாக கையாளலாம். இந்த லிங்கை கிளிக் செய்து ஆப்பிள் ஆப்ஸ்டோரில் இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். 


Google Drive for iOS :
பெரும்பாலானவர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் வசதிக்கு மாறிவரும் நிலையில் கூகுளும் தனது பங்குக்கு Google Drive வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த சமயத்தில் கூகுள் டிரைவை உபயோகிப்பதற்கான மென்பொருளை டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கான மென்பொருளை மட்டும் வெளியிட்டனர். iOS சாதனங்களுக்கு பின்பு வெளியிடப்படும் என அறிவித்து இருந்தனர் அதன் படி இப்பொழுது iOS சாதனங்களுக்கான மென்பொருளை வெளியிட்டுள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய Google Drive for iOS


Google Docs Offline :
கூகுள் டிரைவில் ஒரு பகுதியான கூகுள் டாக்ஸ் வசதியை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இணையத்தில் டாகுமெண்ட்களை (Text file, spread sheet, presentation) போன்றவைகளை உருவாக்க உதவுவது. இனி இந்த வசதியை இணையம் இல்லாமலும் உபயோகிக்கலாம். இணையம் இல்லாத நேரத்திலும் புதியதாக பைல்கள் உருவாக்கலாம் அல்லது ஏற்க்கனவே உருவாக்கிய பைல்களையும் எடிட் செய்து கொள்ளலாம். மீண்டும் உங்கள் கணினியில் இணையம் வேலை செய்யும் பொழுது இந்த மாற்றங்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். ஆப்லைன் வசதியை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதை இந்த லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.


6/29/2012 by Sasikumar · 4

6/28/2012

Google I/O 2012 முதல் நாள் அறிவிப்பில் சிறந்தவைகள்

இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனம் ஆண்டிற்கு ஒரு முறை தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கை நடத்தி வருவது வழக்கம். இதில் பல முக்கியமான அறிவுப்பகளையும், புதிய வசதிகளையும் கூகுள் நிறுவனம் வெளியிடும். உலகமே இந்த கருத்தரங்கை உற்று நோக்கும். இந்த ஆண்டிற்கான கருத்தரங்கு நேற்று தொடங்கியது. முதலில் பல அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமான அறிவிப்புகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

Android 4.1 (Jelly Bean):
ஸ்மார்ட் போன் உலகில் அதிக நபர்கள் உபயோகிக்கும் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் புதிய வெர்சனை அறிமுக படுத்தி உள்ளனர். Android 4.0 (ICS) இருந்து சில மாறுதல்கள் மற்றும் சில புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி Android 4.1 (Jelly Bean) என்ற இந்த புதிய வெர்சன் உருவாக்கி உள்ளனர். இது தான் கருத்தரங்கின் முதல் அறிவிப்பு. 

Nexus 7:
உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் முதல் டேப்லெட்டான Nexus 7 டேப்லேட் கணினியை வெளியிட்டது. Asus நிறுவனத்தின் உதவியுடன் Quad-core Tegra3 processor-ல் இயங்க கூடிய டேப்லெட்டை உருவாக்கி உள்ளது கூகுள். 8GB ($199) , 16GB ($249) ஆகிய இரண்டு மெமரி வகைகளில் வெளியிடப்படுகிறது. மற்றும் புதிய வரவான Android4.1 தொழில் நுட்பத்தில் இயங்க கூடியது மற்றும் 1GB RAM உள்ளது.  மேலும் இதன் சிறப்பம்சங்கள் அறியவும் முன்பதிவு செய்யவும் Nexus 7 Specs & Features செல்லவும். 


Nexus Q:
இந்த கருத்தரங்கில் Nexus Q என்ற புதிய மீடியா பிளேயர் சாதனத்தை வெளியிட்டுள்ளனர். உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்களில் இருந்து உங்கள் ஆடியோ மற்றும் வீடியோவை synchronization செய்து வீட்டில் உள்ள பெரிய திரையில் மற்றும் Google Play மற்றும் Youtube மென்பொருட்களின் உதவியுடன் அனைத்து வீடியோ மற்றும் ஆடியோக்களை உங்கள் வீட்டில் பெரிய திரையில் பார்த்தும் கேட்டும் மகிழலாம். இதனை பற்றி மேலும் அறிய Nexsus Q Features இங்கு செல்லவும். இதன் விலை $299.


Google+ App for Tablets:
சுமார் 250 மில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கும் சமூக தளமான கூகுள் பிளஸ் கடந்த மே மாதம் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் மொபைல்களில் கூகுள் பிளசை உபயோகிக்க புதிய மென்பொருளை வெளியிட்டனர். அந்த வரிசையில் இப்பொழுது டேப்லெட் சாதனங்களில் உபயோகபடுத்த எதுவாக கூகுள் பிளஸ் மென்பொருளை வெளியிட்டுள்ளனர். ஆன்ட்ராய்ட் வெர்சனை இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். iOS டேப்லெட்களுக்கு விரைவில் வெளியிடப்படும்.  


Google+ Events:
கூகுள் பிளசில் Events வசதியை புதிதாக சேர்த்து உள்ளனர். இந்த வசதி ஏற்க்கனவே பேஸ்புக்கில் இருப்பதை அனைவரும் அறிவோம். ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்களுக்கு ஆன்லைனில் அழைப்பிதழ் கொடுக்க உதவுவது என சுருக்கமாக சொல்லலாம். Google Drive version 2 :
கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் டிரைவ் என்ற புதிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை அறிமுகபடுத்தியது கூகுள் நிறுவனம். இதில் சில புதிய மாற்றங்களை செய்துள்ளனர். முக்கியமாக கூகுள் டிரைவில் உபயோகிக்க பல புதிய மென்பொருட்களை அறிமுக படுத்தியுள்ளனர். இதற்க்கு குரோம் வெப்ஸ்டோர் பகுதியில் கூகுள் டிரைவ் என்ற தனி பிரிவை உருவாக்கி உள்ளனர். 


Offline Maps for Android :
கூகுள் மேப் மொபைல்களில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மென்பொருளாகும். இனி இந்த மென்பொருள் இணையம் இல்லாமலும் இயங்கும். சுமார் 150 நாடுகளுக்கான வரைபடங்களை இணையம் இல்லாமலே கண்டு ரசிக்கலாம். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும். இதனை பற்றி மேலும் அறிய Offline Maps


New Youtube Mobile App:
மொபைலில் யூடியுப் தளத்தை சுலபமாகவும் வேகமாகவும் உபயோகிக்கும் வகையில் புதிய மென்பொருளை ஆன்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கு உருவாக்கி உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய Youtube for Android Mobile இதனை பற்றி மேலும் அறிய Mobile Youtube இங்கு செல்லவும். 


மேலும் பல புதிய அறிவிப்புகளை அறிய இங்கு https://developers.google.com/events/io/ செல்லவும். இந்த கருத்தரங்கு மேலும் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. அதில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகளை வரும் பதிவுகளில் பார்க்கலாம். 

மற்றும் நேரம் கிடைப்பின் இந்த வசதிகளை பற்றி மேலும் விரிவாக காணலாம். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

6/28/2012 by Sasikumar · 5

6/27/2012

கூகுள் +1 பட்டனில் புதிய பயனுள்ள "RECOMMENDED" வசதி

இணையத்தில் கிடைக்கும் தகவல்களை சுலகமாக உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் பகிர உதவுவது +1 பட்டன். இந்த +1 பட்டனை பெரும்பாலானவர்கள் தங்கள் தளங்களில் சேர்த்திருப்பார். கூகுளின் +1 பட்டனில் RECOMMENDED புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். இனி நீங்கள் ஏதாவது ஒரு தளத்தில் உள்ள +1 பட்டனில் மீது உங்கள் மவுஸ் கர்சரை நகர்த்தினால் அந்த தளத்தின் மற்ற பிரபலமான இடுகைகளையும் நீங்கள் காணலாம். இந்த வசதியை கூகுள் பிளசில் உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் பார்க்க முடியும்.


இந்த வசதி பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள வசதியாகும் இதன் மூலம் தங்கள் தளத்தின் ஹிட்ஸ் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வாசகர்களும் அந்த தளத்தின் சிறந்த இடுகைகளை சுலபமாக கண்டறியலாம். 

இந்த புதிய வசதியை தற்பொழுது preview Group பயனர்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளனர். உங்களுக்கு இந்த வசதி தெரிய வேண்டுமெனில் இந்த குழுவில் சேர்ந்து கொள்ளவும். இன்னும் சில வாரங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வர இருக்கிறது. 

இந்த வசதிக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கூகுள் +1 பட்டனை உங்கள் தளத்தில் இணைத்திருந்தாலே போதும் இந்த வசதி தானாக ஆக்டிவேட் ஆகிவிடும். 

6/27/2012 by Sasikumar · 4

6/26/2012

ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட்டின் புதிய பதிப்பு "Angry Birds Heikki" இலவசமாக


உலகம் முழுவதும் மிகப்பிரபலமான விளையாட்டான ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட்டின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது ரோவியோ நிறுவனம். இந்த புதிய விளையாட்டு 12 படிகளை கொண்டது. ஆனால் அதனுடைய முதல்  லெவலான Silver Stone லெவலை மட்டும் இப்பொழுது இணையத்தில் இலவசமாக விளையாடலாம்.  அடுத்த பதிப்புகளை விரைவில் வெளியிட உள்ளனர்.

மேலும் வாசிக்க

6/26/2012 by Sasikumar · 4

6/25/2012

பேஸ்புக்கில் "Comment Editing" புதிய பயனுள்ள வசதி

பேஸ்புக் ஆரம்பித்து வெகு நாட்களுக்கு பிறகு கமென்ட் எடிட்டிங் வசதியை அறிமுகபடுதியுள்ளது. இதற்க்கு முன் பேஸ்புக்கில் ஏதேனும் எழுத்து பிழையுடன் ஏதேனும் கமென்ட் போட்டால் அதை மறுபடியும் மாற்ற முடியாது . அந்த கமெண்டை அழித்து புதியதாக தான் போட வேண்டும். இந்த பிரச்சினை இனி இல்லை.பேஸ்புக் வெளியிட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் எழுத்து பிழையுடன் கமென்ட் போட்டாலும் இனி அந்த கமெண்டை மறுபடியும் எடிட் செய்து எழுத்து பிழையை சரி செய்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

6/25/2012 by Sasikumar · 4

6/23/2012

ஜிமெயிலில் "Custom Themes" புதிய பயனுள்ள வசதி

ஜிமெயிலில் தீம்கள் என்ற வசதி உள்ளது பற்றி அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் அவர்களின் ஜிமெயில் பக்கத்தை வித விதமான ஸ்டைல்களில் அழகு படுத்தி கொள்ளலாம். மேலும் ஒரு புதிய வசதியாக ஜிமெயிலில் இப்பொழுது Custom Theme என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான போட்டோவை ஜிமெயிலில் பின்பக்க படமாக (Background image) வைத்து கொள்ளலாம். Custom Theme வசதி "Light" மற்றும் "Dark" என்ற இரண்டு தீம்களை கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

6/23/2012 by Sasikumar · 6

6/22/2012

பிரபலமான Cut the Rope விளையாட்டு இப்பொழுது குரோமில் இலவசமாக

ஏதாவது புது புது விஷயங்களை அறிமுக படுத்தி கொண்டே இருப்பதால் தான் அனைவரின் ஆதரவோடு வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது குரோம் உலவி. இப்பொழுது Cut The Rope என்ற பிரபலமான விளையாட்டை அறிமுக படுத்தி உள்ளது. ஆன்ட்ராய்ட் அல்லது ஐபோன் உபயோகிப்பவர்களுக்கு Cut The Rope விளையாட்டை பற்றி தெரிந்து இருக்கலாம். போன்களில் இந்த விளையாட்டை காசு கொடுத்து வாங்கி தான் விளையாட வேண்டும். ஆனால் க்ரோமில் அந்த சிரமம் இல்லை முற்றிலும் இலவசமாகவே விளையாடி மகிழலாம்.


விளையாட்டின் நோக்கம் சுலபம் அங்கு கயிறில் ஒரு பந்து தொங்கி கொண்டிருக்கும் சில நட்சத்திரங்களும் இருக்கும். உங்கள் மவுஸின் மூலம் கயிறை அறுத்து அந்த நட்சத்திரங்களை பெற வேண்டும். உங்கள் பந்து விழுங்கப்படும் முன் எத்தனை நட்சத்திரங்கள் பெருகிறீர்களோ அதுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு படியும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் விளையாட விளையாட ஆர்வம அதிகரிக்குமே தவிர குறையாது.

Cut The Rope கேமை விளையாட குரோம் வெப் ஸ்டோரில் உள்ள இந்த Cut the Rope மென்பொருளை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்த உடனே விளையாட தொடங்கி விடலாம். 


க்ரோமில் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு அடுத்து இந்த விளையாட்டு பெரும்பாலானவர்களால் விளையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6/22/2012 by Sasikumar · 2

6/21/2012

கூகுள் பிளசில் சில புதிய பயனுள்ள வசதிகள்

சமூக இணையதளமான கூகுள் பிளஸ் தளத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளது கூகுள் நிறுவனம். அடிக்கடி புதிய வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் புகுத்தி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது சில புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. அந்த வசதிகள் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

மேலும் வாசிக்க

6/21/2012 by Sasikumar · 7

6/20/2012

பேஸ்புக்கில் "Star Close Friends" வசதி

காலையில் எப்பவும் போல அப்டேட்ஸ் ஏதாவது பார்க்கலாம்னு பேஸ்புக்கை ஓபன் பண்ணா முகப்பு பக்கத்தில் Star Your Friends என்ற ஒரு அறிவிப்பு வந்து இருந்தது. என்னென்னு பார்த்தல் அது மிகவும் பயனுள்ள வசதியாக தெரிந்தது சரி இதை பற்றி நம் வாசகர்களுக்கு தெரிவிப்போம் என்று இங்கு பதிவாக இங்கே.

மேலும் வாசிக்க

6/20/2012 by Sasikumar · 8

6/19/2012

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய (19-06-12)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

மேலும் வாசிக்க

6/19/2012 by Sasikumar · 18

6/18/2012

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு


நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


புதிய அம்சங்கள்:
 • New Conversations View
 • New Call View 
 • Better call quality 
 • Improved Video call quality 
 • Improved chat synchronization 
 • New presence and emoticon icons 
 • Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux

6/18/2012 by Sasikumar · 5

6/16/2012

யூடியுப் தளத்தை புதிய தோற்றத்திற்கு மாற்ற

மிகப்பெரிய வீடியோ பகிரும் தளமான யூடியுப் தளம் தற்பொழுது புதிய தோற்றத்தை வெளியிட உள்ளது. இந்த புதிய தோற்றத்தை படிப்படியாக அனைவருக்கும் வழங்க இருக்கிறது. இந்த புதிய யூடியுப் தோற்றத்தை ஒரு சில அதிஷ்ட சாலிகள் மட்டுமே இப்பொழுது பெற்றுள்ளனர்.உங்களுக்கு இந்த புதிய தோற்றம் இன்னும் கிடைக்கவில்லையா?  யூடியுப் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியதில்லை உங்கள் பிரவுசரில் ஒரு சிறிய மாற்றம் செய்தால் போதும் இப்பொழுதே அந்த புதிய தோற்றத்தை நீங்களும் பெறலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


இதற்க்கு முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். உங்கள் பிரவுசரை பொருது கீழே உள்ள ஷார்ட்கட் கீயை அழுத்துங்கள். உங்களுக்கு Web Console பக்கம் ஓபன் ஆகும்.

                                 Google Chrome - CTRL + SHIFT + J

                                 Internet Explorer -F12

                                 Mozilla Firefox - CTRL + SHIFT + K

                                 Opera - CTRL + SHIFT + I


அடுத்து கீழே உள்ள வரியை காப்பி செய்து Console பகுதியில் பேஸ்ட் செய்து உங்கள் கீபோர்டில் Enter கீயை அழுத்துங்கள். உதவிக்கு கீழே உள்ள ஸ்க்ரீன்ஷாட்களை பார்த்து கொள்ளுங்கள்.

document.cookie="VISITOR_INFO1_LIVE=nH7tBenIlCs";

Chrome Screen Shot

Firefox Screen shot


என்டர் பட்டனை அழுத்தியவுடன் யூடியுப் தளத்தை மூடிவிட்டு மறுபடியும் திறக்கவும். இப்பொழுது உங்கள் யூடியுப் தோற்றம் மாறியிருப்பதை காணலாம். 


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

6/16/2012 by Sasikumar · 7

6/15/2012

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி ஆகும். இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இது போன்று பலரும் பல குரூப்பில் சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாளடைவில் நீங்கள் பேஸ்புக் இந்த குரூப்பில் அப்டேட்களை விரும்பாவிட்டாலும் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலகாதவரை அந்த குழுமத்தின் அப்டேட்ஸ் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோம் இந்த பிரச்சினையை நீக்க அந்த வேண்டாத பேஸ்புக் குழுமத்தில் இருந்து விலகுவது எப்படி என பார்க்கலாம்.


 • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டாத பேஸ்புக் குரூப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
 • அதில் வலது பக்கத்தில் Settings பட்டனை அழுத்தினால் ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள Leave Group என்பதை அழுத்தவும்.

 • அடுத்து வரும் விண்டோவில் Leave Group என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள். இனி அந்த குழுமத்தின் எந்த அப்டேட்ஸ்ம் உங்களுக்கு வராது.

இனி அந்த குழுமத்தில் இருப்பவர்கள் உங்களை உறுப்பினராக சேர்க்க முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த குழுமத்தில் மறுபடியும் சேர்ந்து கொள்ளலாம்.

6/15/2012 by Sasikumar · 10

6/14/2012

ஜிமெயிலில் அனைத்து ஈமெயில்கள்களையும் ஒரே நிமிடத்தில் டெலீட் செய்ய

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் தேவையற்ற மெயில்களால் நிரம்பி வழிகிறதா? 100 அல்ல ஆயிரம் அல்ல அதற்க்கு மேலும் மெயில்கள் சேர்ந்து உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் குப்பை கூடையாக மாறிவிட்டதா? இவைகளை ஒவ்வொரு பக்கமாக தேடி அழிப்பதற்குள் பொழுது விடிந்துவிடும். இவைகள் அனைத்தையும் ஒரே நொடியில் அழிக்க வேண்டுமா? கீழே உள்ள வழிமுறை உபயோகிக்கவும்.

முதலில் ஜிமெயிலுக்கு செல்லுங்கள் இன்பாக்ஸில் உள்ள மெயில்கள் அனைத்தும் உங்களுக்கு தேவையில்லை என உறுதி செய்த பிறகு Select பகுதியில் உள்ள சிறிய கட்டத்தை டிக் குறியிட்டு தேர்வு செய்யவும்.


இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள அனைத்து ஈமெயில்களும் தேர்வு செய்யப்படும். அதோடு மேலே கட்டமிட்டு காட்டியிருப்பதை போல ஒரு செய்தியும் வரும் அதில் நீங்கள் இப்பொழுது தேர்வு செய்துள்ள ஈமெயில்களின் எண்ணிக்கையும் அருகில் Select all என்று உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து ஈமேயில்களின் எண்ணிக்கையும் காட்டும். 

இரண்டாவத்தாக உள்ளதை கிளிக் செய்தால் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து ஈமெயில்களும் தேர்வு செய்யப்படும். இனி வழக்கம் போல டெலிட் பட்டனை அழுத்தினால் ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் OK கொடுத்தால் போதும் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து ஈமெயில்களும் அழிக்கப்பட்டு விடும். 

இந்த ஈமெயில்கள் அனைத்தும் மீண்டும் வேண்டுமென்றால் Trash போல்டரில் இருந்து மறுபடியும் இன்பாக்சிற்கு கொண்டு வரலாம். 

இது சின்ன விஷயம் ஆனால் இது தெரியாம நான் ஒவ்வொரு பக்கமாக டெலீட் செய்தேன் பிறகு தான் தெரிந்து கொண்டேன் இந்த வசதியை. என்னை போல அவதி படுபவர்களுக்காக இந்த பதிவு.

6/14/2012 by Sasikumar · 11

6/12/2012

ஒலிம்பிக் 2012 போட்டிகளை யூடியுபில் நேரடியாக(Live) காண

மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு சர்வேதேச ஒலிம்பிக் அமைப்பு (IOC) இந்தியா உட்பட 64 நாடுகளுக்கு யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்க இருக்கிறது.

மேலும் வாசிக்க

6/12/2012 by Sasikumar · 1

6/11/2012

சோனியின் அசத்தல் ஸ்மார்ட் வாட்ச் ரூபாய் 6,299 இம்மாத வருகை

எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி நிறுவனம் இந்தியாவில் புது வகையான வாட்ச்சை அறிமுக படுத்துகிறது. இதற்க்கு ஸ்மார்ட் வாட்ச் என பெயரிட்டுள்ளது.  ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் மூலம் இயங்கும்   இந்த வாட்ச்சில் பல பயனுள்ள வசதிகள் உள்ளது. அட வாட்ச்ல என்னெங்க விசேஷம் இருக்கு எல்லா வாட்சும் டைம் தானே காட்ட போகுதுன்னு நினைக்கிறீர்களா, அதான் இல்லை இந்த வாட்சின் மூலம் பாட்டு கேட்கலாம், பேசலாம், SMS அனுப்பல, ஈமெயில் அனுப்பலாம், சமூக தளங்களை உபயோகிக்கலாம் மற்றும் இலவச ஆன்ட்ராய்டு மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.உதாரணமாக நீங்கள் பைக்கோ, காரோ ஓட்டி கொண்டிருக்கிறீர்கள். பின்பக்க சீட்டில் உள்ள பைக்குள் வைத்துள்ள மொபைலுக்கு ஏதேனும் SMS அல்லது Call அல்லது ஏதேனும் சமூக தள அப்டேட் வருகிறது என வைத்து கொள்வோம் அந்த செய்திகளை நீங்கள் அந்த போனை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. நீங்கள் கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த தகவல்களை காட்டும்.  கீழே உள்ள இந்த வீடியோவை பாருங்கள்.இந்த வாட்சின் விலை ரூபாய் 6,299 என நிர்ணயித்துள்ளது சோனி நிறுவனம். 123x123 pixels அளவுடைய இந்த வாட்ச் தொடுதிரை வசதியுடையது. புதிய தகவல்கள் வரும் பொழுது சிறியதாக வைப்ரேட் ஆகும் அதன் மூலம் புதிய தகவல் வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதில் 65,536 நிறங்களை காண முடியும். 

இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் வெளி வர இருக்கிறது இந்த ஸ்மார்ட் வாட்ச். 

6/11/2012 by Sasikumar · 5

6/08/2012

பயர்பாக்சில் உள்ள பிழைகளை நீக்கி வேகமாக இயங்க வைக்க - Reset Firefox

ஒரு மென்பொருளை தொடர்ந்து உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைவது இயல்பு தான். இன்ஸ்டால் செய்யும் பொழுது இருந்த வேகம் நாளடைவில் குறைந்து விடும். இது உலவிகளுக்கும் பொருந்தும் இந்த வகையில் நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்களா? ஆரம்பத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து இப்பொழுது பயர்பாக்ஸ் உலவி நிதானமாக இயங்குகிறதா? அடிக்கடி கிராஷ் ஆகிறதா? இந்த பிரச்சினைகளை நீக்கி மீண்டும் பயர்பாக்ஸ் உலவியை பழைய வேகத்தில் இயங்க வைக்க வேண்டுமா? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. பயர்பாக்ஸின் புதிய Reset Firefox வசதியை பயன்படுத்தி பயர்பாக்ஸ் உலவியை புதியது போல மாற்றலாம் வாருங்கள்.


மேலும் வாசிக்க

6/08/2012 by Sasikumar · 11

6/07/2012

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

மிக பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். இதில் உள்ள ஒரு குறை எழுத்துக்களை மூலமே இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோக்களை பகிர முடியாது. உதாரணமாக காலையில் சாதரணமாக குட்மார்னிங் என எனுப்புவதர்க்கு பதில் ஏதாவது ஒரு குட்மார்னிங் போட்டோவை அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே! இது போன்று நீங்கள் விரும்பும் அழகான போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் மகிழ்விக்கலாம். பேஸ்புக் சாட்டில் போட்டோக்களை எப்படி பகிர்வது என்று கீழே  பார்ப்போம்.

மேலும் வாசிக்க

6/07/2012 by Sasikumar · 3

6/05/2012

பேஸ்புக் பக்கத்தில் பயனுள்ள இரண்டு புதிய வசதிகள்

சமூக வலைதளங்களுக்கு இடையேயான போட்டியில் தங்கள் தளங்களில் புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே இருக்கின்றன பிரபல சமூக இணைய தளங்கள். சமூகத்தளங்களில் ராஜாவான பேஸ்புக் Page Admin & Posts Schedule என்ற இரண்டு புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதிகள் என்ன எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

மேலும் வாசிக்க

6/05/2012 by Sasikumar · 6

6/04/2012

விண்டோஸ் 8 மென்பொருளை இலவச சீரியல் எண்ணுடன் டவுன்லோட் செய்ய

விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மேலும் வாசிக்க

6/04/2012 by Sasikumar · 13

6/02/2012

யாஹூ ஈமெயில் கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

நீங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட யாகூ ஐடி வைத்துள்ளீர்களா, அதில் ஒன்றை அழிக்க வேண்டுமா? வெகுநாட்களாக உபயோகிக்காமல் வைத்துள்ள யாகூ கணக்கை நீக்க வேண்டுமா? யாகூ மெயிலில் வரும் அதிகமான ஸ்பாம் மெயில்களின் தொல்லையால் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டுமா? இது போன்ற பிரச்சினைகளில் அவதி படுபவர்களாக இருந்தால் உங்களின் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி என கீழே காணலாம்.


 • யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க முதலில் இந்த லிங்கில் சென்று உங்களின் யாஹூ ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
 • அதில் உங்கள் கணக்கை அழிப்பதற்கான பக்கம் ஓபன் ஆகும் அதில் மேலும் ஒரு முறை உங்களின் அனுமதியை கேட்கும். 
 • திரும்பவும் உங்களின் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Word Verification எழுத்துக்களை சரியாக நிரப்பவும். 
 • சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள Terminate This Account என்ற பட்டனை அழுத்தவும்.


Terminate This Account பட்டனை அழுத்தியவுடன் தற்காலிகமாக உங்களின் கணக்கு செயலிழந்து விடும். நிரந்தரமாக அழிப்பதற்கான உங்களின் கோரிக்கை யாஹூ நிறுவனத்திற்கு சென்று விடும். அவர்கள் 90 நாட்கள் வரை உங்களின் கணக்கு விவரங்களை பாதுகாத்து வைத்திருப்பார். ஒருவேளை நீங்கள் தவறுதலாக அழித்து விட்டீர்கள் திரும்பவும் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அந்த 90 நாட்களுக்குள் திரும்பவும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.90 நாட்களுக்கு பிறகு உங்கள் கணக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டு விடும்.

நீங்கள் யாஹூ ஈமெயில் ஐடியை அழித்தால் யாஹூவின் மற்ற சேவைகளான Answers, Address book, profiles போன்ற மற்ற சேவைகளில் இருந்தும் உங்களின் தகவல்கள் நீக்கப்படும். ஆகவே யாஹூ கணக்கை அழிப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும்.


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகரிந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

6/02/2012 by Sasikumar · 4