2-Step Verification என்றால் என்ன:
ஒரு ஆன்லைன் கணக்கில் நுழையும் பொழுது ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த முறையில் ஹாக்கர்கள் எளிதாக நம் கணக்கை திருடி விடுகிறார்கள் என்பதால் 2 step verification என்ற வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ளே நுழைய உங்களுடைய ஐடி, பாஸ்வேர்ட் மட்டும் இருந்தால் போதாது உங்கள் மொபைலில் வரும் Secret Code கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதை தான் 2 Step verification என்று கூறுகிறோம்.
Dropbox கணக்கில் 2-step verification ஆக்டிவேட் செய்ய:
- முதலில் dropbox இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது பக்க மேலே உள்ள உங்கள் பெயருக்கு அருகில் உள்ள கிளிக் செய்து வரும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Security Tab கிளிக் செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள Two Step Verification - Disable என்று இருக்கும், அதற்க்கு அருகில் உள்ள Change என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- இனி அடுத்து வரும் விண்டோவில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுடைய பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்து Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் இரண்டு வகையான வசதிகள் காணப்படும். ஒன்று Sms வழியாக Secret code பெறுவது மற்றொன்று மொபைல் மென்பொருள் மூலமாக உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
- SMS வழியாக பெறுவது சுலபம் என்பதால் நான் அதை தேர்வு செய்துள்ளேன். Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்த விண்டோவில் உங்களின் நாட்டினையும் மொபைல் எண்ணையும் கொடுத்து Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து உங்களுக்கு ஒரு சீக்ரெட் கோட் தெரியும் அதை குறித்து வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த கோடின் உதவியுடன் நீங்கள் Dropbox கணக்கில் நுழைந்து கொள்ளலாம்.
- முடிவில் Enable two step verification என்ற பட்டனை அழுத்தினால் கீழே இருப்பதை போல செய்தி வரும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.
(Thanks)
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
by Sasi Kumar · 6
by Sasi Kumar · 15
by Sasi Kumar · 9
புதியதாக அவுட்லுக் தளத்தில் கணக்கு உருவாகக் வேண்டுமெனில் இங்கு சென்று உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது ஏற்க்கனவே ஹாட்மெயிலில் உள்ள கணக்கை (techshortly@hotmail.com) அவுட்லுக் முகவரிக்கு (techshortly@outlook.com) மாற்றுவது எப்படி என பார்ப்போம்.
- முதலில் உங்களின் ஹாட்மெயில் ஈமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- Options பகுதியில் கிளிக் செய்து Upgrade to outlook.com என்பதை கொடுக்கவும்.
- அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் Upgrade to outlook என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களுடைய ஈமெயில் தோற்றம் புதிய அவுட்லுக் தோற்றத்திற்கு மாறிவிடும். ஆனால் உங்களுடைய ஹாட்மெயில் முகவரி மாறி இருக்காது(techshortly@hotmail.com) என்று தான் இருக்கும்.
- ஈமெயில் முகவரியை மாற்ற Options ஐகானை கிளிக் செய்து more mail settings என்பதை கிளிக் செய்யவும்.
- இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Rename your email address என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு ஈமெயில் முகவரியை மாற்றுவதற்கான விண்டோ ஓபன் ஆகும் அதில் outlook.com என்பதை தேர்வு செய்து பிறகு உங்களின் ஈமெயில் பயனர் பெயரை கொடுத்து Save செய்து விட்டால் போதும் உங்களின் கணக்கு முதிய முகவரிக்கு மாறிவிடும்.
by Sasi Kumar · 12
by Sasi Kumar · 17
by Sasi Kumar · 7
by Sasi Kumar · 9


















